7000 ரூபாயில் தரமான 32' இன்ச் Tv வாங்கலாமா? என்ன மாடல்? எங்கே வாங்கலாம்? ஆஃபர் முடியும் முன் ஆர்டர் போடுங்க..
உங்கள் வீட்டிற்கு புதிதாக டிவி வாங்க ஆசையா? ஆனால், கையில் குறைந்தளவு பணம் தான் இருக்கிறதா? அப்படியானால், நீங்கள் உடனே ஆர்டர் செய்ய வேண்டிய டிவி இது தான். வெறும் ரூ.7000 விலையில் 32' இன்ச் டிவியை வாங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
7000 ரூபாய்க்கு 32' இன்ச் டிஸ்பிளே கொண்ட டிவி வாங்க முடியுமா? இது உண்மையா? 7000 ரூபாய்க்கு என்ன பிராண்டட் டிவி கிடைக்கும்? இது நல்ல பிராண்ட் தானா? என்று உங்கள் மனதில் இப்போதே பல கேள்விகள் எழுந்திருக்கும். இங்கு நாம் பார்க்க போகும் டிவி ஆனது உலகின் தலைசிறந்த முன்னணி பிராண்டுகளில் ஒன்றான ஏஸர் (Acer) பிராண்டில் இருந்து தான் வருகிறது.

இங்கு நாம் பார்க்க போகும் டிவி ஆனது ஏஸர் 32' இன்ச் அட்வான்ஸ்டு N சீரிஸ் எச்டி எல்ஈடி டிவி AR32NSV53HDFL என்ற மாடல் விவரத்துடன் வருகிறது. (Acer 80 cm (32 inches) Advanced N Series HD LED TV AR32NSV53HDFL) இந்த டிவி 32' இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிவியின் டிஸ்பிளே 60 Hz ரெஃப்ரஷ் ரேட் அம்சத்துடன் வருகிறது.
ஏஸர் 32' இன்ச் அட்வான்ஸ்டு N சீரிஸ் எச்டி எல்ஈடி டிவி (Acer 32 inches Advanced N Series HD LED TV):
இந்த டிஸ்பிளேவின் ரெசொலூஷன் 720P ஆதரவை கொண்டுள்ளது. இது HD அம்சத்துடன் வரும் ஒரு LED டிஸ்பிளேவாகும். இந்த டிவியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இது பிரீமியம் ஸ்மார்ட் டிவிகளில் உள்ளது போன்ற ஃபிரேம்லெஸ் டிசைனை (Frameless Design) கொண்டுள்ளது. மிகவும் நுணுக்கமான மற்றும் ஸ்லிம்மான பேசல் விளிம்புகளை இந்த டிவி கொண்டுள்ளது. இதனால், இது பார்ப்பதற்கும் பிரீமியம் தர டிவி போல காட்சியளிக்கிறது.
32' இன்ச் உடன் A+ கிரேட் தர டிஸ்பிளே (32' inches A+ grade display):
இந்த ஏஸர் 32' இன்ச் அட்வான்ஸ்டு N சீரிஸ் எச்டி எல்ஈடி டிவி பேனல் A+ கிரேட் தரத்தில் (A+ Grade Panel) உருவாக்கப்பட்டுள்ளது. இது டைனமிக் கான்ட்ராஸ்ட் (Dynamic Contrast) அம்சத்துடன் வருகிறது. இது மிகவும் துல்லியமான வண்ணங்களை வழங்குவதோடு படங்களில் உள்ள நாய்ஸ் இரைச்சலை குறைக்கிறது. இதற்கென்று இதில் டிஜிட்டல் நாய்ஸ் ரிடக்ஷன் (Digital Noise Reduction) அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஏஸர் 32' இன்ச் அட்வான்ஸ்டு N சீரிஸ் எச்டி எல்ஈடி டிவி (Acer 32' inch advanced N series TV) 3 HDMI போர்ட், 2 USB போர்ட் உடன் வருகிறது. இந்த ஏஸர் டிவியின் (Acer Tv) ஆடியோ தரம் பற்றி பேசுகையில், இது 24W ஹை ஃபிடெலிட்டி ஸ்பீக்கர்களை (24 Watts High Fidelity Speakers) கொண்டுள்ளது.
இந்த Acer Tv விலை என்ன?
இந்த டிவி விர்ச்சுவல் சரௌண்ட் சவுண்ட் (Virtual Surround Sound) அம்சத்தையும் ஆதரிக்கிறது. இது ஸ்மார்ட் ஆடியோ மோட் (smart audio mode) அம்சத்தையும் ஆதரிக்கிறது. இந்த ஏஸர் 32' இன்ச் அட்வான்ஸ்டு N சீரிஸ் எச்டி எல்ஈடி டிவி தற்போது வெறும் ரூ. 7,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இது இப்போது 1 வருட வாரன்டியுடன் வருகிறது. அமேசான் (Amazon) தளம் வழியாக இந்த டிவியை நீங்கள் உடனே ஆர்டர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








