ரூ.300 முதல் ரீசார்ஜிங் ஃபேன்.. கரண்ட் இல்லாவிட்டாலும் சில்லுனு காத்து வாங்கலாம்.. உடனே வாங்குங்கள்..

|

இந்தியாவில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்ப அலையானது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்களை வாட்டி, மூச்சை திணறடிக்கச் செய்துள்ளது. இதற்கு மத்தியில், மின்வெட்டும் சேர்ந்து, மக்களின் நிலையை இன்னும் மோசமாக்கியுள்ளது. இந்த சிக்கல்களில் இருந்து தப்பிக்கக் கட்டாயம் நமக்குத் தொழில்நுட்பத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. வெப்ப மயமான நேரங்களிலும், மின்வெட்டு நேரங்களிலும், நம்மை வேர்வை சொட்டவிடாமல் பார்த்துக்கொள்ள உதவும் சில கேட்ஜெட்களை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

எல்லோராலும் ஏசி வாங்கி பயன்படுத்த முடியாது

எல்லோராலும் ஏசி வாங்கி பயன்படுத்த முடியாது

இன்றைய சூழ்நிலையில், வீட்டில் ஒரு ஏர் கண்டிஷனர் வைத்திருப்பது முற்றிலும் அவசியமாகிறது. ஏனென்றால், வெப்பத்தின் தாக்கம் அவ்வளவு அதிகமாகிவிட்டது. ஆனால், எல்லோராலும் ஏசி வாங்கி பயன்படுத்த முடிவதில்லை. முதல், காரணம் இது விலை உயர்ந்ததாக இருக்கிறது. மற்றொரு காரணம் இது பெரிய சைசில் இருக்கிறது. குறிப்பாக மின்வெட்டு நேரத்தில் இதைப் பயன்படுத்தவே முடியாது. என்ன தான் அதிக காசு கொடுத்து ஏசி வாங்கினாலும், மின்வெட்டு நேரத்தில் இதை இயக்க முடியாமல் வெப்பத்தின் பிடியில் சிக்கி நாம் தவிக்க வேண்டியதுள்ளது.

மின்வெட்டால் ஏற்படும் சிக்கலை எப்படிச் சமாளிப்பது?

மின்வெட்டால் ஏற்படும் சிக்கலை எப்படிச் சமாளிப்பது?

வெயில் காலத்தில் ஏற்படும் மின்வெட்டால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. பட்ஜெட் குறைவாக இருப்பவர்களும், மின்சாரப் பிரச்சனையை எதிர்கொள்பவர்களும் இந்த சிக்கலை எப்படிச் சமாளிப்பது என்ற குழப்பம் இருக்கிறது. பட்ஜெட் விலைக்குள் இந்த சிக்கலைச் சமாளிக்க விரும்பும் பொதுமக்களுக்காகவே இப்போது ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்விசிறிகள் ஆன்லைன் வழியில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இந்த குறைந்த விலை கேட்ஜெட்கள் உங்களிடம் இருந்தால், மின்வெட்டு நேரங்களில் கூட வெப்பம் பற்றிக் கவலைகொள்ளாமல், குளிர்ந்த காற்றை அனுபவிக்கலாம்.

வீட்டிலிருந்தபடி PAN கார்டு போட்டோவை இவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமா? கட்டணம் எவ்வளவு தெரியுமா?வீட்டிலிருந்தபடி PAN கார்டு போட்டோவை இவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமா? கட்டணம் எவ்வளவு தெரியுமா?

பவர் கட்டா! கவலை வேண்டாம் ரீசார்ஜிங் டேபிள் ஃபேன் இருக்கே

பவர் கட்டா! கவலை வேண்டாம் ரீசார்ஜிங் டேபிள் ஃபேன் இருக்கே

உங்களுக்குப் பயனளிக்கும் வகையில், இன்று வாங்கக் கிடைக்கும் ரீசார்ஜ் செய்யக்கூடிய டேபிள் ஃபேன் பற்றிய தகவலைப் பார்க்கப்போகிறோம். அதுவும் இந்த சாதனத்தை நீங்கள் வெறும் ரூ.1099 என்ற விலையில் வாங்கிட முடியும் என்பது சிறப்பானது. குறுகிய காலம் கிடைக்கும் இந்த சலுகையைச் சரியாக பயன்படுத்தினால் நீங்களும் ஒரு ரீசார்ஜ் செய்யக்கூடிய ஃபேன் சாதனத்தை வாங்கி பயன்பெறலாம். இதை எப்படி, எங்கிருந்து வாங்குவது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ரூ.1099 விலையில் இப்படி ஒரு அசத்தல் சாதனமா?

ரூ.1099 விலையில் இப்படி ஒரு அசத்தல் சாதனமா?

வெறும் 1099 ரூபாய்க்கு ரிச்சார்ஜபிள் டேபிள் ஃபேன் வாங்கினால், மின்சாரம் இல்லாவிட்டாலும் குளிர்ந்த காற்று கிடைக்கும். மின் வணிக இணையதளமான Amazon India இல் பல ரிச்சார்ஜபிள் டேபிள் ஃபேன்கள் வாங்குவதற்குக் கிடைக்கின்றன. ஆனால், மக்களின் கவனம் எப்போதும் பட்ஜெட் விலை சாதனங்கள் மீதே அதிகம் பாய்கிறது. அதனால், தான் இந்த சிறந்த டேபிள் ஃபேன் சாதனத்தை உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம். தற்போது இது ரூ.1099 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் வானத்தில் தோன்றும் அதிசயம்: 'ஸ்ட்ராபெரி மூன்'.. நிலவு இப்படி சிவப்பாக தெரிய காரணம் என்ன?அடுத்த வாரம் வானத்தில் தோன்றும் அதிசயம்: 'ஸ்ட்ராபெரி மூன்'.. நிலவு இப்படி சிவப்பாக தெரிய காரணம் என்ன?

மின்சாரம் இல்லாமல் எவ்வளவு நேரம் இயங்கும்?

மின்சாரம் இல்லாமல் எவ்வளவு நேரம் இயங்கும்?

இந்த PESOMA டேபிள் ஃபேன் சக்தி வாய்ந்த ரீசார்ஜ் செய்யக்கூடிய 1.5 வாட்ஸ் சக்தியுடன் வருகிறது. இதன் ஸ்பெஷலிட்டியே இதன் வடிவமைப்பு தான், இது மிக அட்டகாசமான தோரணையில் மடிக்கும் படியும், 360 டிகிரி சுழலும் வகையிலும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின்விசிறியை வீடு, அலுவலகம் அல்லது சமையலறையில் நிறுவி, குளிர்ந்த காற்றைத் தடையில்லாமல் எடுத்துக்கொள்ளலாம். பவர் பேக்கப் பற்றிப் பேசுகையில், இது 3 - 4 மணி நேரம் வரை மின்சாரம் இல்லாமல் செயல்படுகிறது.

ரூ.2900 சேமிக்க சரியான நேரம்.. குறுகிய கால சலுகை

ரூ.2900 சேமிக்க சரியான நேரம்.. குறுகிய கால சலுகை

PESOMA இன் இந்த ரிச்சார்ஜபிள் டேபிள் ஃபேன் 1 பேட்டரி, USB போர்ட் மற்றும் 1 சார்ஜிங் கேபிளுடன் வருகிறது. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடிய சிறிய சைஸ் மின்விசிறி இது. இது AC மற்றும் DC ஆகிய இரண்டு பவர் சப்ளையில் இயங்கக் கூடியது. இந்த சாதனத்தின் அசல் விலை ரூ. 3,999 ஆகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், இப்போது 73 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு, இதை நீங்கள் வெறும் ரூ. 1099 என்ற விலையில் வாங்கலாம். அதாவது இப்போது ரூ.2900 சேமிக்கலாம். இந்த சாதனத்தை வாங்கச் சரியான நேரம் இது தான்.

உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..

ரூ.300க்கு குறைவான விலையில் கிடைக்கும் மினி சைஸ் ரீசார்ஜ் ஃபேன்

ரூ.300க்கு குறைவான விலையில் கிடைக்கும் மினி சைஸ் ரீசார்ஜ் ஃபேன்

இவ்வளவு பணம் கொடுத்து ரீசார்ஜ் ஃபேன் வாங்க முடியாது, இது என் பட்ஜெட்டிற்குள் இல்லை என்று புலம்புபவர்களுக்கும் எங்களிடம் ஒரு நல்ல கேட்ஜெட் இருக்கிறது. உங்கள் கையில் வெறும் ரூ.300க்கு குறைவான தொகை இருந்தால் போதும், ஒரு மினி சைஸ் ரீசார்ஜ் செய்யக்கூடிய கையடக்க போர்ட்டபிள் ஃபேனை நீங்கள் வாங்கலாம். இந்த சாதனம் உங்களுக்கு அமேசான் வழியாக வெறும் ரூ. 267 என்ற விலையில் கிடைக்கிறது. ஆனால், இந்த சாதனத்தின் தரம் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.

இந்த சாதனத்தின் தரம் எப்படி இருக்கும்?

இந்த சாதனத்தின் தரம் எப்படி இருக்கும்?

இந்த சாதனத்தின் விலைக்கேற்ற தரத்தை மட்டுமே நாம் எதிர்பார்க்க முடியும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மிகவும் குறைந்த விலையில் நமக்கு ஒரு சாதனம் கிடைக்கிறது என்றால், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள உபகாரங்களின் தரம் குறைந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. தரத்தைப் பற்றி கவலை இல்லை, மின்வெட்டு நேரத்தில் புழுக்கத்திலிருந்து தப்பித்தால் மட்டும் போதும் என்பவர்களுக்கு இந்த சாதனம் ஓகேவாக இருக்கும். இந்த இரண்டில் எதை வாங்குவது என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் விருப்பம் எது என்பதைத் தெரியப்படுத்துங்கள்.

100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?

Best Mobiles in India

English summary
Buy Best Rechargeable Battery Fan From Rs 300 In Amazon India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X