Amazon-ல் 5ஜி போன்கள் மீது அதிரடி தள்ளுபடி! இந்த போனை வாங்க யோசிக்கவே வேண்டாம்!
அமேசான் 5ஜி ரேவலூஷன் சேல்ஸ் விற்பனை துவங்கியுள்ளது. இந்த விற்பனை இன்று மே 27 ஆம் தேதி தொடங்கி மே 31 வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையானது OnePlus, realme, Samsung மற்றும் பிற சிறந்த பிராண்டுகளின் 5G போன்களின் மீது 40% வரை தள்ளுபடியை வழங்குகிறது.
அதேபோல், இந்த சிறப்பு விற்பனையின் போது, அமேசான் வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.1,666 முதல் கட்டணமில்லா EMI வாங்குதல் விருப்பங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, விற்பனையின் போது ரூ. 10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் நன்மையும் கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் கூடுதல் கட்டணமின்றி 24 மாதங்கள் வரை பிரைம் மெம்பர்ஷிப் கிடைக்கிறது. எந்த போன் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது என்பது இங்கே.

iQoo 11 5G
இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் இந்த ஸ்மார்ட்போன் Amazon இல் ரூ.5,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. 9 மாதங்கள் வரை விலையில்லா EMI சலுகையையும் வழங்குகிறது. இந்த போன் 2K E6 AMOLED டிஸ்ப்ளேவை ஆதரிக்கிறது.
Redmi Note 12 5G
Redmi Note 12 5G தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிச் சலுகைகளுடன் ரூ. 2,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த போன் ஆனது 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 5G சிப்செட் உடன் வருகிறது. இந்த சாதனம் பின்புறத்தில் 48MP AI டிரிபிள் கேமராவைக் கொண்டுள்ளது.
Xiaomi 13 Pro
Xiaomi 13 Pro ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2, 4nm சிப்செட் உடன் வருகிறது. இது ரூ.71,999 அமேசானில் வங்கி சலுகைகள் மற்றும் ரூ.10,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த சாதனம் 6.73' இன்ச் 2K 120Hz E6 AMOLED டிஸ்ப்ளேவுடன் 4,820mAh பேட்டரியை பெறுகிறது.

OnePlus 10 Pro 5G
இந்த ஸ்மார்ட்போனை வங்கி சலுகைகள் மற்றும் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையுடன் சேர்த்து ரூ.55,499 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இது 9 மாதங்கள் வரை கட்டணமில்லா EMI உடன் கிடைக்கிறது. இந்த போன் ஆனது 48MP பிரதான கேமரா, 50MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 8MP டெலிஃபோட்டோ லென்ஸ் உடன் வருகிறது.
OnePlus 10R 5G
OnePlus 10R 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ. 32,999 மட்டுமே. நடந்துவரும் அமேசான் விற்பனையில், இந்த ஸ்மார்ட்போன் ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் 6 மாதங்கள் வரை விலையில்லா EMI சலுகையுடன் கிடைக்கிறது. இந்த டிவைஸ் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது.
Realme Narzo 50 5G
Realme Narzo 50 5G ஆனது 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன், மீடியாடெக் டிமென்சிட்டி 810 5G சிப்செட் உடன் வருகிறது. இது 5000 mAh பேட்டரியுடன் வருகிறது. வங்கி சலுகைகள் மற்றும் ரூ.3,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகை உட்பட இந்த சாதனம் இப்போது வெறும் ரூ.14,249 விலையில் வாங்க கிடைக்கிறது. புது 5ஜி போனை வாங்க விரும்பினால், நீங்கள் இந்த போன்களில் ஒன்றை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








