Just In
- 2 hrs ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 3 hrs ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 4 hrs ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 4 hrs ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
Don't Miss
- Movies
மாவீரன் படத்தில் இருந்து விலகிய முக்கியமான பிரபலம்..? சிவகார்த்திகேயனுக்கு தொடரும் சிக்கல்!
- News
50+.. அதென்ன "கிரீம்".. ஜாடை வேற ஒரே மாதிரி.. நடுக்காட்டில் நின்ற கார்.. கதவை திறந்து பார்த்தால்.. ஐயோ
- Sports
2023ஆம் ஆண்டின் சிறந்த கேட்ச்.. எரிமலை போல் வெடித்த சூர்யகுமார்.. ஃபில்டிங்கால் ஆஃப் செய்த நியூசி
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Automobiles
சைக்கிள், காருனு மக்கள் வாகனங்களை வாங்கி குவிக்க போறாங்க.. ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு சாதகமாக அமைந்த பட்ஜெட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
5G சேவைகள் "இல்லாத" இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டியது அவசியமா?
இந்தியாவில் 5ஜி கனெக்டிவிட்டியை பெறவுள்ள முதல் 13 நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையும் உள்ளதால், ஒரு 5G ஸ்மார்ட்போனை வாங்க வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்விக்கு பல வகையான பதில்களை தேட வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

5ஜி சேவையை பெறவுள்ள முதல் 13 நகரங்கள்!
அறியாதோர்களுக்கு, டாட் (DoT) என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு துறையானது, எந்தெந்த இந்திய நகரங்கள் 5ஜி கனெக்டிவிட்டியை முதலில் பெறும் என்கிற பட்டியலை வெளியிட்டது.
அதில் சென்னையுடன் சேர்த்து அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனேவின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

5ஜி சேவை "இல்லாத" நாட்டில் விற்பனையில் பட்டையை கிளப்பும் 5ஜி போன்கள்!
உண்மையில், 5ஜி நெட்வொர்க்குகள் இந்தியாவில் இன்னும் சோதனை கட்டத்திலேயே தான் உள்ளது. இனி வரும் மாதங்களில் தான் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலமே நடத்தப்பட உள்ளது.
ஆனாலும் கூட இந்தியாவின் பட்டித்தொட்டியெங்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை அமோகமாக நடக்கிறது, அதுவும் பட்ஜெட் விலையில்!

ஏனெனில், 5ஜி போன்கள் ஒரு பேஷனாக மாறிவிட்டது!
5ஜி சேவைகள் இல்லை என்றாலும் கூட, ஒன்பிளஸ், ரெட்மி, சியோமி, ரியல்மி மற்றும் சாம்சங் போன்ற பெரும்பாலான பிராண்டுகளின் கீழ், பல வகையான விலைப்பிரிவின் கீழ், 5ஜி-சென்ட்ரிக் ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கின்றன.
ஏனெனில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒரு புதிய பேஷனாக மாறிவிட்டது. மக்கள் புதிய அம்சங்களையும் தொழில்நுட்பத்தையும் வழங்கும் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
ஆனால், இங்கே எழும் முக்கியமான ஒரு கேள்வி என்னெவென்றால்? ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க "இப்போதைக்கு" நாம் இவ்வளவு பணத்தை செலவிட வேண்டுமா? அல்லது இருக்கவே இருக்கு... 4ஜி! அதையே பயன்படுத்தி கொள்ளலாமா? என்பதே ஆகும்!
அந்த கேள்விகளுக்கான பதிலையும், உங்களின் 5ஜி vs 4ஜி போன் தொடர்பான சந்தேகங்களுக்கான தெளிவையும் வழங்கும் நோக்கத்தின் கீழே இக்கட்டுரையை நாங்கள் உருவாக்கி உள்ளோம்.

5ஜி ஸ்மார்ட்போன்கள் மூலம் உங்களுக்கு என்ன கிடைக்கும்?
நீங்கள் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை பார்க்கிறீர்கள் என்றால், அந்த டிவைஸில் இருக்கும் ஒரே 5ஜி அம்சம் குவால்காம் (Qualcomm) அல்லது மீடியாடெக் (MediaTek) வழங்கும் பில்ட்-இன் சிப்செட் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஏனெனில் இந்த இரண்டு சிப்செட் தயாரிப்பாளர்கள் மட்டுமே பில்ட்-இன் 5ஜி மோடம்களுடன் மொபைல் டிவைஸ்களுக்கான புதிய SoC-க்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து குறிப்பிட்ட சிப்செட்களை வாங்கும் போது, இன்னும் மெயின்-ஸ்ட்ரீமிற்கு வராத ஒரு தொழில்நுட்பத்தை வைத்து தங்கள் ஸ்மார்ட்போன்களை 'பிரீமியம்' பிரிவிற்குள் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள், அவ்வளவு தான்; வேறொன்றும் பெரிதாக இல்லை!
அதாவது ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் 'பிரீமியம்' தொகையை செலுத்த வேண்டியிருக்கும். இன்றைய தேதிக்கு ரூ.15 கே பட்ஜெட்டில் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி விடலாம் என்றாலும் கூட, நம்மில் பலருக்கும் அதுவொரு பிரீமியம் தொகையே ஆகும்.

5ஜி கனெக்டிவிட்டிக்காக மட்டுமல்ல, மற்ற அம்சங்களுக்காகவும் ஒரு 5ஜி போனை வாங்கலாம்!
நீங்கள் ஏன் ஒரு 5ஜி போனை வாங்குகிறீர்கள்? என்கிற கேள்விக்கு இங்கே பல வகையான பதில்கள் உள்ளன. இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கின் அறிமுகம், அடுத்த ஆறு மாதங்களில் அல்லது அதற்கு பிறகும் கூட நடக்கலாம். இந்நிலைப்பாட்டில் இந்த 2022 ஆம் ஆண்டில் நீங்கள் ஏன் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்றால் - 5ஜி சேவையை மீறிய சில அம்சங்களுக்காக!
அதாவது கேமரா, டிஸ்பிளே குவாலிட்டி மற்றும் ஸ்மார்ட்போனின் பேட்டரியால் ஆதரிக்கப்படும் சார்ஜிங் ஸ்பீட் போன்ற அம்சங்களில் நீங்கள் கவனம் செலுத்தும் பட்சத்தில், எப்படி பார்த்தாலும் 4ஜி ஸ்மார்ட்போன்களை விட 5ஜி மாடல்கள் சிறந்ததாகவே உள்ளன.

இருந்தாலும் கூட பார்த்து பொறுமையாகத்தான் 5ஜி போன் வாங்க வேண்டும்!
இந்தியாவில் 5ஜி ஸ்பீட், எவ்வளவு வேகமாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இருந்தாலும் கூட பல பிராண்டுகள் '5ஜி' என்கிற வார்த்தையை தாறுமாறாக சந்தைப்படுத்தி வருகின்றன. இந்த இடத்தில் தான் நீங்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
நீங்கள் இப்போதே ஒரு 5ஜி போனை வாங்க முடிவு செய்து விட்டால், அது 5-க்கும் மேற்பட்ட நெட்வொர்க் பேண்டுகளை ஆதரிக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்வது அவசியம். இதன் மூலம், அடுத்த 2 - 3 ஆண்டுகளில் 5ஜி நெட்வொர்க்குகள் முழுமையாக செயல்படும் போது, மற்றொரு 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
ஆக எந்தவொரு 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினாலும் சரி, எதிர்காலத்தில் அது வழங்கும் 5ஜி பேண்டுகளுக்கான ஆதரவை கண்டிப்பாக சரிபார்க்கவும்; குறிப்பாக மிகவும் விலை உயர்வான ஸ்மார்ட்போனை வாங்கும் போது!

இந்தியாவில் 5ஜி அறிமுகமானதும் 4ஜி சேவை முடிவுக்கு வருமா?
இல்லை! உண்மையில், 4ஜி நெட்வொர்க்குகள் எங்கும் போகாது. அதே போல உங்களுடைய பழைய / தற்போதைய 4ஜி ஸ்மார்ட்போனும் அப்படியே தான் இருக்கும். ஏனெனில் 5ஜி நெட்வொர்க்கின் அறிமுகம் படிப்படியாகவே நடக்கும். மேலும், குறைந்தது சில வருடங்களுக்காவது அது 4ஜி சேவைகளில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தாது.
எனவே, நீங்கள் இப்போதும் கூட ஒரு புதிய 4ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம். உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் அடுத்த சில ஆண்டுகளுக்கு அதை பயன்படுத்தலாம்.

முடிவாக.. 5ஜி-க்கு அப்டேட் ஆகலாமா? அல்லது 4ஜி உடனேயே இணைந்திருக்கலாமா?
முன்னரே குறிப்பிட்டப்படி, 5ஜி போன்கள் அவற்றின் சொந்த நன்மைகளை கொண்டுள்ளன. குறிப்பாக நீங்கள் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை "நியாயமான" விலையில் வாங்கும்போது, அது நிச்சயம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். அதே சமயம், 4ஜி போன்களும் இன்னமும் திறன் மிக்கவைகளாக, நம்பகமானவைகளாகவே உள்ளன.
எனவே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 4ஜி ஸ்மார்ட்போன்களை வாங்குவதில் எந்த பயனும் இருக்காது என்று யாரேனும் கூறினால், அந்த வார்த்தைகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
ஒருவேளை ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ரூ.25,000 அல்லது அதற்கு மேல் செலவழிக்க உங்களிடம் பட்ஜெட் இருந்தால், தாராளமாக வாங்குங்கள்; அது அடுத்த சில ஆண்டுகளுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470