பேஸ்புக் நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு: பேஸ்புக் மூலம் இந்தியாவில் தொழில் கடன் பெறலாம்!

|

பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் பேஸ்புக் தளத்தில் பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டுவந்துள்ளது இந்நிறுவனம். இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு தொழில் கடன் வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் கடன் வ

மேலும் இதற்காக ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் இண்டிஃபை நிறுவனத்துடன் இணைந்துள்ளது பேஸ்புக் நிறுவனம். பின்புஇதனை இண்டிஃபை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 பிரச்சனைக்கு

குறிப்பாக கொரோனா பிரச்சனைக்கு மத்தியில் தங்களது தொழிலை சுணக்கமின்றி நடத்த இந்த தொழில் கடன் உதவும் எனத் தெரிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம். இருந்தபோதிலும் இதை செய்வதன் மூலம் தங்கள் நிறுவனத்திற்கு எவ்வித வருமானமும் இல்லை என்பதை பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.

50% தள்ளுபடி: ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்- பிளிப்கார்ட் மொபைல் பொனான்சா விற்பனை 2021!50% தள்ளுபடி: ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்- பிளிப்கார்ட் மொபைல் பொனான்சா விற்பனை 2021!

emint வலைத்தளத்தில் வெளிவ

மேலும் livemint வலைத்தளத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த கடன் சேவையின் மூலம் 5 லட்ச ரூபாயிலிருந்து 50 லட்சரூபாய் வரை கடன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட்டி விகிதம் 17 முதல் 20 சதவிகிதம் வரை உள்ளது. அதேபோல் பெண்களுக்கு வட்டி விகிதத்தில் 0.2 சதவிகிதம் சலுகை எனவும் கூறப்படுகிறது. பின்பு தற்போதைக்கு இந்தியாவின் 200 நகரங்களில் இந்த கடன் சேவை கிடைக்கப்பெறும் எனவும் கூறப்படுகிறது.

மிரட்டலான அம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கும் Mi TV 5X ஸ்மார்ட் டிவி.! ஸ்மார்ட்டா யோசிக்கும் சியோமி..மிரட்டலான அம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கும் Mi TV 5X ஸ்மார்ட் டிவி.! ஸ்மார்ட்டா யோசிக்கும் சியோமி..

தற்குமுன்பு வந்

இதற்குமுன்பு வந்த தகவலின்படி, Ray-Ban ஸ்மார்ட் கண்ணாடிகளை விரைவில் பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக பேஸ்புக் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.அதேபோல் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் ஒரு நாள் ஸ்மார்ட்போன்களை ஓரங்கட்டும் என்று நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு IT பயிற்சி.. தேர்ச்சி பெற்ற 5ம் முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டு விருது.அரசு பள்ளி மாணவர்களுக்கு IT பயிற்சி.. தேர்ச்சி பெற்ற 5ம் முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டு விருது.

சேர்ந்துள்ளதாக கூறப்பட்டது.

அதாவது இந்த Ray-Ban ஸ்மார்ட் கண்ணாடிகளை உருவாக்க பேஸ்புக் நிறுவனம்EssilorLuxottica நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்துள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்நிறுவனங்கள் உருவாக்கி வரும் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளின் ஒரு சில அம்சங்கள் மட்டுமே ஆன்லைனில் கசிந்துள்ளது.

கூகுளிலும் அதே பிரச்சனை: ஏன் கேட்கிறீங்க சூடு தாங்க முடியல- கூகுள் பிக்சல் 5ஏ சாதனத்துக்கு வந்த சிக்கல்!கூகுளிலும் அதே பிரச்சனை: ஏன் கேட்கிறீங்க சூடு தாங்க முடியல- கூகுள் பிக்சல் 5ஏ சாதனத்துக்கு வந்த சிக்கல்!

து ஏஆர் எனப்படும் ஆக்மெ

அதன்படி இது ஏஆர் எனப்படும் ஆக்மெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ஸ்மார்ட் கிளாஸாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. மேலும் இந்த ஏஆர் கண்ணாடியானது வழக்கமான கண்ணாடி போல ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருக்கும். இதனால் எதிரே இருக்கும் காட்சிகளை நீங்கள் பார்க்கலாம் என்பதுடன், அந்த கண்ணாடி டிஜிட்டல் திரையாகவும் செயல்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Business loans can be obtained through Facebook in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X