கொட்டித் தீர்க்கும் மழை: கரையை நெருங்கும் புரவி புயல்- தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் நிவர் புயல் தாக்கத்தால் 2000-த்துக்கும் மேற்பட்ட மரங்கள், 2000-த்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்களும், நூற்றுக்கணக்கான மின்சார டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்தது. நிவர் தாக்கம் குறைவதற்குள் அடுத்ததாக வங்காள விரிகுடாவில் புரவி புயல் உருவாகியுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது. அந்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. புரவி புயல் நேற்று இரவு இலங்கையின் திரிகோணமலைக்கு அருகே கரையை கடந்தது.

கரையை கடக்கும் புரவி புயல்
இலங்கையில் புரவி புயல் கரையை கடக்கும் போது பாம்பன் சுற்றுப்பகுதியில் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புரவி புயல் கரையை கடக்கும் நேரம்
புரவி புயல் தற்போது பாம்பனுக்கு 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது எனவும் பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என கூறப்படுகிறது. டிசம்பர் 3 ஆம் தேதி இரவு மற்றும் நாளை அதிகாலை புரவி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்று வீசும் வேகம்
புரெவி புயல் பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் எனவும் 70-80 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் எனவும் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரவி புயல் நாளை திருவனந்தபுரம் மாவட்டத்தை தாக்கும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.
கன மழை முதல் மிக கன மழை
புரவி புயல் காரணமாக தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்களை மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யும் எனவும் கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் நாலை கன மழை முதல் மிக கன மழை பெய்யும் என கூறப்படுகிறது.
இலங்கைக்குள் ஊடுருவிய புயல்
வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்கள் இலங்கைக்கு அருகில் மையம் கொண்டு இந்தியாவை நோக்கி நகரும். 20 வருடங்களுக்கு பிறகு புரவி புயல் இலங்கைக்குள் ஊடுருவி இந்தியாவை நோக்கி நகருகிறது.
பிரதமர் மோடி உறுதி
புரவி புயல் பாதிக்கப்படும் இடங்கள் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதலமைச்சர் பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தேவைப்படும் உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக உறுதி அளித்ததாகவும் பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications