Home
News

டிவியை திருட முடியாத திருடர்கள்.! இது என்னடா புது சோதனையை இருக்கு?

டெக்சாஸ்: டெக்ஸாஸ் பகுதியில் உள்ள டல்லாஸ் என்னும் இடத்தில் இரண்டு திருடர்கள் ஒரு வீட்டை உடைத்து, வீட்டில் இருக்கும் பொருட்களை திருட முயற்சி செய்துள்ளனர்.

டெக்சாஸ்: டெக்ஸாஸ் பகுதியில் உள்ள டல்லாஸ் என்னும் இடத்தில் இரண்டு திருடர்கள் ஒரு வீட்டை உடைத்து, வீட்டில் இருக்கும் பொருட்களை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் இவர்கள் செய்த முயற்சி பலன் அளிக்காமல் திருடிய பொருளை மீண்டும் வீட்டின் உள் சென்று வைத்துவிட்டு வெறும் கையுடன் சென்ற சிசிடிவி வீடியோ பதிவு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஜீப் திருட தெரிஞ்சும் டிவியை திருட தெரியல

ஜீப் திருட தெரிஞ்சும் டிவியை திருட தெரியல

இந்த இரண்டு திருடர்களும் திருட முயற்சித்தது ஒரு பெரிய ஸ்மார்ட் டிவியை தான். இரண்டு திருடர்களும் திருடப்பட்ட ஒரு செரோகி 2015 ஆம் ஆண்டு ஜீப்பைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை திருட முயற்சி செய்துள்ளனர்.

எவ்வளவு பெரிய டிவி

எவ்வளவு பெரிய டிவி

இவர்கள் திருட முயற்சித்த டிவியின் அளவு ஜீப்பைக் காட்டிலும் பெரியது என்பதனால், டிவி ஜீப்பின் உள் பொருந்தவில்லை. இருவரும் டிவியை பின்னால் உள்ள காரின் டிக்கியில் வைத்து எடுத்துச் செல்ல திட்டமிட்டு முயற்சி செய்து, அதிலும் தோல்வி அடைந்துவிட்டனர்.

டிவியை திரும்பி வீட்டிற்குள் எடுத்துச் சென்ற திருடர்கள்

டிவியை திரும்பி வீட்டிற்குள் எடுத்துச் சென்ற திருடர்கள்

காரின் உள் பொருந்தாத டிவியை அங்கேயே விட்டு-விட்டுச் செல்லாமல், பொறுப்பானவர்களாக அவர்கள் திருடிய பெரிய டிவியை திரும்பி வீட்டிற்குள் எடுத்துச் சென்று வீட்டிலேயே விட்டு வெளியேறி திருட்டு ஜீப்பில் வெறும் கையுடன் சென்றுள்ளனர்.

சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமரா

அவர்கள் ஓட்டி வந்த திருட்டு ஜீப்பையும் நான்கு தெரு தள்ளி அனாதையாய் விட்டுச் சென்றுள்ளனர். இந்த மொத்தம் நிகழ்வும் அவ்வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்பொழுது அந்த சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Best Mobiles in India

English summary
Bungling Texas burglars leave almost empty-handed after being forced to RETURN flat screen TV : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X