ஐபோனில் புதிய பம்ப் அப்ளிக்கேஷன்!

Posted By: Staff
ஐபோனில் புதிய பம்ப் அப்ளிக்கேஷன்!

புகைப்படங்களை மொபைல்களில் இருந்து, கம்ப்யூட்டர்களுக்கு பரிமாறி கொள்ள புதிய பம்ப் அப்ளிக்கேஷன். இனிய காட்சிகள் கண்களில் பட்டவுடன், டக்கென்று மொபைலை எடுத்து பட்டென்று க்ளிக் செய்வது வழக்கமாகிவிட்டது.

இப்படி எடுத்த புகைப்படங்களை கம்யூட்டருக்கு மாற்றி அதை அப்லோட் செய்வதும் வழக்கமான ஒன்று. ஆனால் இனி இதற்கு அவசியம் இல்லை.

பம்ப் என்ற அப்ளிக்கேஷன் மூலம் இந்த மொபைல்களில் உள்ள புகைப்படங்களை, கம்ப்யூட்டருடன் இணைக்காமலேயே அதை எளிதாக உங்கள் கம்ப்யூட்டருக்கும் பரிமாறி கொள்ள முடியும்.

இது உண்மையிலேயே ஒரு சிறப்பான அப்ளிக்கேஷன் தான். செல்லுகின்ற இடமெல்லாம் கம்ப்யூட்டரும் கையுமாக செல்ல முடியாது.

ஆனால் மொபைலை எடுத்து செல்வது சாத்தியம் தான். இதனால் மொபைலில் புகைப்படத்தினை எடுத்துவிட்டு மறுபடி அதை பிசியுடன்(கம்ப்யூட்டருடன்) இணைத்து, புகைப்படங்களை பரிமாறி கொள்வது இரண்டு வேலை.

ஆனால் இந்த பம்ப் அப்ளிக்கேஷன் மூலம் கம்ப்யூட்டருடன் இணைக்காமலேயே எளிதாக புகைப்படங்களை, கம்ப்யூட்டருக்கு நேரடியாக பரிமாறலாம்.

இன்னும் சொல்லப்போனால் பத்திரிக்கை நிறுபர்களுக்கு இந்த பம்ப் அப்ளிக்கேஷன் மிகவும் பயன்படும். சம்பவ இடத்தில் இருந்து மொபைல்கள் மூலம் எடுக்கும் முக்கியமான புகைப்படங்களை நேரடியாக பிசி கம்ப்யூட்டர்களில் பரிமாறி கொள்ளவும் இது உதவும்.

இந்த அப்ளிக்கேஷனை ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் பயன்படுத்தலாம். இந்த பம்ப் அப்ளிக்கேஷனை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் எளிதாக பெறலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot