ஸ்மார்ட்போன்கள் : பெரிய பேட்டரி சிறிய விலை..!!
ஸ்மார்ட்போன் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது கருவிகளை போட்டியாளர்களுக்கு ஏற்ப மேம்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஸ்மார்ட்போன்களில் நீண்ட நாட்களாக இருந்து வரும் பேட்டரி பிரச்சனையை சரி செய்ய பல்வேறு நிறுவனங்களும் அதிக திறன் கொண்ட பேட்டரி கொண்ட கருவிகளை வெளியிட்டு வருகின்றன.
நீரில் மிதக்கும் ஸ்மார்ட்போன்..!!
அதன்படி அதிக பேக்கப் வழங்கும், அதே சமயம் குறைந்த விலையில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..
ஆண்ட்ராய்டு மர்மங்கள்..!! உங்களுக்கு தெரியுமா..??

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ்
4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் இந்த கருவி சந்தையில் ரூ.8,499க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஏசஸ் சென்போன் மேக்ஸ்
5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் இந்த கருவி ஸ்னாப்டிராகன் 410 குவாட்கோர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

ஜியோனி மாரத்தான் எம்4
ஜியோனி நிறுவனத்தின் மாரத்தான் வகையில் புதிய கருவியான எம்4 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

லெனோவோ வைப் பி1
ஐஎப்ஏ விழாவில் லெனோவோ நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய கருவியில் 5000 எம்ஏஎச் பேட்டரி வழங்கி இருக்கின்றது.

இன்னோஸ் டி6000
உலக ஸ்மார்ட்போன் சந்தையில் பிரபலம் இல்லாத நிறுவனமாக இருந்தாலும் 6000 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை இந்நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. தற்சமயம் இந்த கருவி சீனாவில் 249.99 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications
