2020 முக்கிய நற்செய்தி: ஐபோன் தான வாங்கிட்டா போச்சு- மலிவு விலை ஐபோன் அறிமுகம்?

|

ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களை பார்ப்பது என்பது அரிது. இந்தியாவில் பலவகை ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களது புதிய வகை மாடல் மொபைல்களை போட்டிப்போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் எத்தனை ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை கையில் வைத்திருந்தாலும், ஐபோன் வைத்திருப்பவர் என்றால் அது தனி மதிப்புதான்.

ஐபோன் மலிவு விலையில் அறிமுகமா

ஐபோன் மலிவு விலையில் அறிமுகமா

ஐபோன் என்றவுடன் அனைவரும் அதன் விலை 50 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் தற்போது ஐபோன் விலையும் கணிசமாக குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ஐபோன் எஸ்.இ மாடல் வகை போனானது ரூ.23,999-க்கு அமேசான் இணையத்தில் கிடைக்கும். இதைவிட மலிவு விலையில் புது மாடல் ஐபோன் ஒன்றை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய வாய்ப்பு

2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய வாய்ப்பு

ஆப்பிள் ஒரு மலிவு விலை ஐபோனை அறிமுகப்படுத்த உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் உண்மையானால் ஐபோன் எஸ்.இயின் அடிப்படை வசதி கொண்ட மாடல் போனாக இருக்க வேண்டும். மேக்ரூமோர்ஸின் அறிக்கையின்படி, பட்ஜெட் ஐபோன் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய வதந்திகள் பலவற்றுடன் ஒத்துப்போகிறது, 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் புதிய பட்ஜெட் ஐபோனை அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரைகள் நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் ஆய்வாளர் கண்டுபிடிப்பு

ஆப்பிள் ஆய்வாளர் கண்டுபிடிப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்பு புகழ்பெற்ற ஆப்பிள் ஆய்வாளர் மிக் சி-குவோவும், ஐபோன் புதுவகை மார்ச் மாதத்தில் வெளியாகும் என சுட்டிக்காட்டியிருந்தார். இந்த புதிய மாடல் போனானது 2017 இல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஐபோன் 8 போன்றே இருக்கும் எனவும் ஆனால் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ற மாடலில் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வேற., வேற., வேற லெவல் அமேசான் அறிவிப்பு: மொபைல் மாற்ற சரியான நேரம்., 40% வரை தள்ளுபடிவேற., வேற., வேற லெவல் அமேசான் அறிவிப்பு: மொபைல் மாற்ற சரியான நேரம்., 40% வரை தள்ளுபடி

ஐபோன் ரேம் பவர், மெமரி ஸ்டோரேஜ்

ஐபோன் ரேம் பவர், மெமரி ஸ்டோரேஜ்

அதேபோல் புதிய ஏ 13 பயோனிக் சில் மூலம் இது இயக்கப்படும் எனவும் கூறினார். ஐபோன் ரேம் பவர், மெமரி ஸ்டோரேஜ் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் ஐபோன் கணித்ததைய போல் எஸ்இ 2-ஆக கூட இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். 3 ஜிபி ரேம் வசதி இருக்கக்கூடம் எனவும் குவோ கணித்துள்ளார்.

ஃபேஸ் ஐடி இல்லை

ஃபேஸ் ஐடி இல்லை

இந்த புதிய மாடல் போனானது, ஐபோன் 8 போன்ற தோற்றத்தை வழங்கினாலும், 4.7 அங்குல டிஸ்ப்ளே காட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் ஃபேஸ் ஐடி இல்லை என்றாலும் டச் லாக் மூலம் பாதுகாக்கப்படும். அதாவது முன்புற பட்டனுடன் கூடிய பிங்கர் பிரிண்ட் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலிவு விலை ஐபோன் எப்போது

மலிவு விலை ஐபோன் எப்போது

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் மலிவு விலையுள்ள ஐபோன் பற்றிய வதந்திகளையும் தகவலையும் நிக்கி என்பவர் முதலில் தெரிவித்திருந்தார். ஐபோன் நிறுவனமும் மலிவு விலை விற்பனையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. அதாவது, ஐபோன் 11 கடந்த ஆண்டு அறிமுகம் செய்த போது முந்தைய மாடல் விலையை விட ரூ.12,000 ஆக குறைவாக இருந்தது. இந்த மலிவு விலை போனானது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை செய்த 4-வது நாடு இந்தியா தான்: டெல்லி மெட்ரோவில் அறிமுகம்- என்ன தெரியுமா?இதை செய்த 4-வது நாடு இந்தியா தான்: டெல்லி மெட்ரோவில் அறிமுகம்- என்ன தெரியுமா?

2020-ல் உறுதியாகும் என தகவல்

2020-ல் உறுதியாகும் என தகவல்

2020 ஆம் ஆண்டு ஐபோனை பயன்படுத்த சரியான நேரமாக அமையும் என்று கூறப்படுகிறது. ஐபோன் தகவலின் படி இந்த ஐபோன்களை அறிமுகப்படுத்தலாம் என்று இதுகுறித்து மார்ச் மாதம் முழு தகவலும் வெளிவரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Budget price iphone is coming soon here?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X