Home
News

பட்ஜெட் விலையில் Bulk டேட்டாவுடன் எக்கசக்க நன்மைகளை வழங்கும் Airtel ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டியாக அசத்தலான திட்டம் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம். அதுவும் ஏர்டெல் நிறுவனம் பல ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகளைக் கூட வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கிவிட்டன.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது போஸ்ட்பெய்ட் திட்டங்களைப் போலவே ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்று பல்க் (Bulk) டேட்டா நன்மையை வழங்குகிறது, அதுவும் கம்மி விலையில். இப்போது பல்க் டேட்டாவை வழங்கும் அந்த ஏர்டெல் திட்டம் மற்றும் அதன் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Bulk டேட்டாவுடன் எக்கசக்க நன்மைகளை வழங்கும் Airtel ப்ரீபெய்ட் திட்டம்!

அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் பல்க் டேட்டா நன்மையை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 25ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு Apollo 24|7 Circle, FASTag இல் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music ஆகிய அணுகலும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் ஏர்டெல் ரூ.489 மற்றும் ரூ.509 ப்ரீபெய்ட் திட்டங்களும் பல்க் டேட்டா நன்மையை வழங்குகின்றன.

ஏர்டெல் ரூ.489 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. பின்பு தினசரி வரம்பு ஏதும் இல்லாமல் மொத்தமாக 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாகப் பயனர்களுக்கு ஏர்டெல் விங்க் மியூசிக், இலவச ஹலோ ட்யூன், அப்பல்லோ 24/7 மற்றும் ஃபாஸ்ட்டேக் நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 30 நாட்கள் செல்லுபடியாகும்.

Bulk டேட்டாவுடன் எக்கசக்க நன்மைகளை வழங்கும் Airtel ப்ரீபெய்ட் திட்டம்!

ஏர்டெல் ரூ.509 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது முழுமையாக 1 மாதத்திற்குச் செல்லுபடியாகும். உள்ளூர் மற்றும் எஸ்டிடி உட்பட வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இதில் 300 எஸ்எம்எஸ் நன்மையும் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் மொத்தமாக 60 ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. இதுதவிர அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ.100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக xstream app, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

Bulk டேட்டாவுடன் எக்கசக்க நன்மைகளை வழங்கும் Airtel ப்ரீபெய்ட் திட்டம்!

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா இந்த திட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Budget Price Airtel Prepaid Plans Offer Bulk Data Benefit Like Postpaid Plans : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X