Budget 2025: சர்ருன்னு விலை இறங்குது.. Mobile, ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் TV விலை கம்மி.. இனி அள்ளிட்டு போலாம்..
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman, The Finance Minister of India), இன்று 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (Budget 2025 - 2026) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. அதில் குறிப்பாக, ஸ்மார்ட்போன்கள் (Smartphones) மற்றும் ஸ்மார்ட் எல்இடி டிவிகளில் (Smart LED TVs) பயன்படுத்தப்படும் முக்கிய கூறுகள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இதன் மூலம், இனி இந்திய மக்கள் குறைந்த விலையில் ஸ்மார்ட் எல்இடி டிவிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியுமென்ற நற்செய்தி வெளியாகியுள்ளது.
பல முக்கியமான அறிவிப்புகளுக்கு மத்தியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்மார்ட்போன்கள் (Smartphones) மற்றும் ஸ்மார்ட் எல்இடி டிவிகளில் (Smart LED TVs) பயன்படுத்தப்படும் முக்கிய கூறுகள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைப்பதாக அறிவித்தார். இதன் மூலம், இந்த மின்னணு பொருட்களை (electronic devices) இந்திய நுகர்வோர் இனி மிகவும் மலிவு விலையில் வகை முடியும். இதன் விளைவாக உள்ளூர் உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Budget 2025: சர்ருன்னு விலை இறங்குது.. Mobile, ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் TV விலை கம்மியாகிறது:
அரசாங்கத்தின் இந்த முயற்சி விலைகளைக் குறைக்கும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் மற்றும் உலகளாவிய மின்னணு உற்பத்தி மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு தொழில்நுட்பத் துறையில் பெரிய மாற்றத்தை உருவாக்கப்போகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் (smartphones), ஸ்மார்ட் டிவிகள் (smart tv) மற்றும் வீட்டு உபகரணங்களை (house hold appliances) வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இது நற்செய்தியாக அமைந்துள்ளது. ஏனெனில் இனி இவற்றின் விலை குறைய போகிறது.
மோடி அரசாங்கத்தின் 3.0 (Modi Government 3.0) இன் முதல் பட்ஜெட்டின் ஒரு பகுதியாக, மொபைல் போன்களுக்கான (mobile phones) சுங்க வரியைக் குறைக்கும் முடிவு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் விலைகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் வாடிக்கையாளர்கள் இனி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு பிரீமியம் (premium) தொகை செலுத்த வேண்டிய அவசியமில்லை. கூடுதலாக, லித்தியம்-அயன் பேட்டரி (Lithium ion battery) உற்பத்தியாளர்களுக்கும் பட்ஜெட்டில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
மொபைல், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் TV, எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையுது:
மொபைல் போன் பேட்டரி உற்பத்திக்காக 28% புதிய கேப்பிடல் கூட்ஸ் மற்றும் எலெக்ட்ரிக் வாகன (EV) பேட்டரி உற்பத்திக்காக 35% புதிய கேப்பிடல் கூட்ஸ் (capital goods) மதிப்புகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் (electric vehicle) விலையில் குறைவை நாம் பார்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் மீது கூடுதல் விலை குறைப்பை வழங்குகிறது.
அதேபோல், LED மற்றும் LCD டிவிகள் கொண்ட ஸ்மார்ட் டிவிகளுக்கான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. புதிதாக இனி உங்கள் வீட்டுக்கு டிவியை வாங்க விரும்பினால் குறைந்த விலையில் வாங்கி மகிழலாம். இதுவே தவிர, இந்தியாவின் அரசு பள்ளிகள் (Indian government schools) மற்றும் மருத்துவமனைகளை (hospitals) இணையத்துடன் இணைக்கும் திட்டங்களையும் சீதாராமன் எடுத்துரைத்தார். அத்தியாவசிய பொது சேவைகளுக்கான டிஜிட்டல் அணுகலை மேம்படுத்தும் நோக்கத்தில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை:
இந்த புதிய பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவைகள் (broadband internet service) மூலம் இனி குக்கிராமங்களில் இயங்கும் அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் இன்டர்நெட் சேவை கிடைக்கப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், பல கோடி அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொலைத்தொடர்பு துறையுடன்


Click it and Unblock the Notifications