பட்ஜெட் 2025- 26: யாருமே எதிர்பார்க்கல.. புதிய AI மையங்கள்.. ரூ.500 கோடி ஒதுக்கீடு..
மிகவும் அதிகம் எதிர்பார்த்த 2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக 8-வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தால். அதுவும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட் உரையில் சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில், ஏஐ (AI) மையங்கள் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் கோலோச்சும் காலகட்டத்தில் இந்தியாவுக்கு ஏஐ ஆராய்சிக்கு நிதி ஒதுக்கியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கூகுள் நிறுவனத்தின் பணியாளர்களிடம் கூறினார்.
சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் செயல்பாட்டு வியூகம் குறித்தான ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் சுந்தர் பிச்சை தலைமையில் கலிபோர்னியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவர் கூறியது என்னவென்றால், இந்த தருணத்தின் அவசரத்தை உணர்ந்து அனைத்தையும் உள்வாங்கி நிறுவனத்தை வேகமாக நடத்திச் செல்ல வேண்டியது பணியாளர்களின் கடமை. அனைவருக்கும் நிறுவனத்தின் வளர்ச்சியில் அதிக பங்கு உள்ளது எனத் தெரிவித்தார்.
அதேபோல் 2025-ல் ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் நன்மைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதிலும், பயனர் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் நாம் இடைவிடாமல் கவனம் செலுத்த வேண்டும். ஜெமினி (Gemini) ஆப் மூலமாக ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டை துரிதமான முறையில் பரவலாக்க வேண்டும் என்பதே இந்த புதிய ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் முதன்மையான இலக்கு என்று கூறினார் சுந்தர் பிச்சை.
மேலும் கடந்த சில மாதங்களாகப் பயனர்களிடையே ஜெமினி ஆப்-க்கு அதிக வரவேற்பு உள்ளது. இருப்பினும் 2025-ல் இடைவெளியைச் சரி செய்வதற்கும், முதலிடத்தைத் தக்க வைப்பதற்கும் சில வேலைகளை நாம் செய்து முடிப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

அதேசமயம் ஜெமினியை 500 மில்லியன் பயனர்கள் கொண்ட நுகர்வோர் தளமாக மாற்றுவது கூகுளின் மிக லட்சிய இலக்குகளில் ஒன்று. அதுவும் வரலாற்றில் எப்போதும் முதல் இடத்தில் இருக்க வேண்டியது அவசியமில்லை. ஆனாலும் நீங்கள் நன்றாக செயல்பட்டு முதல் தரமான பொருளை உருவாக்க வேண்டும். அது 2025-ல் நிறைவேறும் என்று நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் டீப்சீக் ஏஐ சாட்பூட் செயலிக்கு கூட அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சீனாவை சேர்ந்த லியாங் வென்பெங் என்பவரால் கடந்த 2023-ம் ஆண்டு டீப்சீக் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கப்பட்டது. இரண்டே ஆண்டுகளில் இந்நிறுவனம், டீப்சீக்-ஆர்1 என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) சாட்பூட் செயலியை கடந்த 10-ம் தேதி அறிமுகம் செய்தது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி-க்கு நிகரான சேவையை இது வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications