Home
News

மாஸாக மாறப்போகும் இந்தியா? 300 யூனிட் இலவச மின்சாரம்.. விவசாயிகளுக்கு இலவச கிரெடிட் கார்டு.. சூப்பர் அப்டேட்..

மத்திய பட்ஜெட் தாக்கல் இன்று மிகுந்த ஆர்வத்துடன் நடந்து முடிந்தது. இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman) பல முக்கிய அறிவிப்புகளை இந்தாண்டு பட்ஜெட் 2024 (Budget 2024) இல் வெளியிட்டார். குறிப்பாக இந்தியாவை டிஜிட்டல் தளத்தில் ஊக்குவிக்க என்னென்ன மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக, 300 யூனிட் இலவச மின்சாரம் (300 Unit Free Electricity), விவசாயிகளுக்கு இலவச கிஷான் கிரெடிட் கார்டு போன்ற புதிய விபரங்களை இப்போது காணலாம்.

ஜூலை 23, 2024 ஆம் தேதி (இன்று) நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2024 தாக்கல் செய்தார். இதில் பல முக்கியமான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டிஜிட்டல் தளம் (Digital paltform) சார்ந்த பல அறிவிப்புகளை பட்ஜெட் 2024 இல் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக, விவசாயத்தில் கூட தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை (Technology in farming) இனி வரும் காலங்களில் நாம் பார்க்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது.

மாஸாக மாறப்போகும் இந்தியா? 300 யூனிட் இலவச மின்சாரம்..யாருக்கு?

பட்ஜெட் 2024: 300 யூனிட் இலவச மின்சாரம்.. விவசாயிகளுக்கு இலவச கிரெடிட் கார்டு:

பட்ஜெட் 2024 ஐ தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கூறுகையில்,

- விவசாய துறையில் டிஜிட்டல் புரட்சி (digital revolution in farming) செய்ய தேவையான அனைத்து விதமான கட்டமைப்புகளையும் இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளதாக பட்ஜெட் தாக்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

- வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் தகடுகள் (solar panels) நிறுவப்படும் திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.

- குறிப்பிக, மாதா-மாதம் சுமார் 300 யூனிட் மின்சாரம் வரை சோலார் பேனல் இன்ஸ்டாலேஷன் மூலம் இலவசமாக (300 unit free current) வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

- இதற்கு அடுத்தபடியாக, மொபைல் கருவிகளுக்கான பிரிண்டட் சர்க்யூட் டிசைன் அசெம்பிளி (Mobile PCBA) மற்றும் மொபைல் சார்ஜர்களுக்கான (Mobile chargers) அடிப்படை சுங்க வரியை (BCD) 15% ஆக குறைக்கப்படுகிறது என்று நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.

- இத்துடன் சேர்த்து, மொபைல் போன் (Mobile phone) சார்ஜர்கள் மீதான சுங்க வரியையும் 15 சதவீதம் குறைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி பொருளாதாரத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது:

- குறிப்பிட்ட சில வகையான தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கான (telecommunication equipment) சுங்க வரியை வரும் 2024-2025 ஆம் ஆண்டில் 10% சதவீதத்தில் இருந்து 15% சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

- இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் 100 ITI மையங்கள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- விண்வெளி பொருளாதாரத்தை (Space Economy) அடுத்த 10 ஆண்டுகளில் 5 மடங்கு விரிவுபடுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

- தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிகளின் மூலம் காலநிலை மாற்றம் மற்றும் தணிப்பு திட்டங்களுக்கு (climate change and mitigation projects) சிறப்பு கொள்கைகள் உருவாக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

- இந்தியாவில் சில மருத்துவ உபகரணங்களுக்கான (medical devices) சுங்க வரி குறைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- இந்தியா முழுவதிலும் உள்ள 400 மாவட்டங்களில் காரீஃப் பயிர்கள் (Kharif crops) குறித்த டிஜிட்டல் சர்வே நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- இந்தியாவில் உள்ள ஐந்து மாநில விவசாயிகளுக்கு இலவச கிஷான் கிரெடிட் கார்ட் (Kisan Credit Card) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்படுத்தல்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் மூலம் வரும் நடப்பு ஆண்டில் பல முன்னேற்றங்களை இந்தியா சந்திக்கும் என்று நம்பப்படுகிறது. புதிய வேலைவாய்ப்பு மற்றும் விவசாயத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Budget 2024 Update Shows 300 Units Free Electricity Free Credit Card For Farmers Super Update Nirmala Sitharaman
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X