பட்ஜெட் 2024: மொபைல் போன், ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் இன்னும் அதிகமாக குறையுமா?
Budget 2024: கடந்த ஆண்டு, இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக கேமரா லென்ஸ்கள் போன்ற முக்கிய பாகங்கள் மீதான இறக்குமதி வரிகளை மத்திய அரசு குறைத்தது. இதை தொடர்ந்து இன்று வெளியாகவுள்ள புதிய பட்ஜெட் 2024 இல் ஸ்மார்ட்போன்கள், மொபைல் சாதனங்கள் மற்றும் பிற சாதனங்கள் மீது விதிக்கப்படும் வரி குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இன்று தாக்கல் செய்யப்படவுள்ள புதிய பட்ஜெட்டில் மொபைல் போன்களின் விலை குறைக்கப்படும் என்று ஸ்மார்ட்போன் வாங்குவோர் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதென்றே நாம் கூற வேண்டும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்களை மலிவாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அறிவிப்பாரா என்பதை அறிய ஸ்மார்ட்போன் பிரியர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

மொபைல் போன், ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் குறையுமா? அதிக எதிர்பார்ப்பில் பட்ஜெட் 2024:
சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டை ஜூலை 23, 2024 ஆம் தேதியான இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த ஆண்டு, இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியை ஊக்குவிக்க கேமரா லென்ஸ்கள் போன்ற முக்கிய பாகங்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, ஸ்மார்ட்போன்கள், மொபைல் போன்கள் மீதான வரியை போன பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் குறைத்திருந்தார்.
அதேபோல், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான அத்தியாவசிய பாகங்களான லித்தியம்-அயன் பேட்டரிகள் போன்றவற்றின் மீதும் விதிக்கப்பட்ட வரி விகிதத்தையும் நிதி அமைச்சர் குறைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வரி குறைப்பு கொள்கை மூலம், பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் போன்களை உற்பத்தி செய்வதை மலிவாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முறை பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மொபைல் கருவி சாதனங்களின் மீது விதிக்கப்படும் வரி இன்னும் கணிசமாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில மணி நேரங்களில் நிர்மலா சீதாராமன் இந்திய மக்களுக்கு என்னென்ன சர்ப்ரைஸ் வைத்துள்ளார் என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அதுவரை எங்களுடன் இணைந்திருங்கள். விரைவில் தகவலை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications








