Home
News

பட்ஜெட் 2024.. ரியல் எஸ்டேட் அறிவிப்புகள்.. சாமானியர்களுக்கு கைக்கொடுக்குமா? இதே எதிர்பார்ப்புகள்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்ட வேளையில், 2024 - 2025ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்கல் செய்ய இருக்கிறார். ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பட்ஜெட்டுக்கு முந்தை எதிர்பார்ப்புகள் தெரிவிக்கின்றன.

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் 2024 (Budget 2024) மீதான எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவுக்கு இருக்கிறது. ஆட்சியை தக்க வைக்கும் விதமாக சாமானிய மக்களை கவரும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ரியல் எஸ்டேட்.. சாமானியர்களுக்கு கைக்கொடுக்குமா? இதே எதிர்பார்ப்புகள்!

இந்த இடைக்கால பட்ஜெட்டில் (Interim Budget 2024) ரியல் எஸ்டேட் துறையே மிகுந்த கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால், ஆடம்பர மற்றும் உயர்தர வீட்டுக் கடன்களுக்கான பிரிவில் கடன் வாங்கும் செயல்பாடுகள் அதிகரித்துவிட்ட நிலையில், மலிவு விலை வீட்டுக் கடன்களுக்கான தேவையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு நிலம் மற்றும் கட்டுமான செலவுகளின் அதிகரிப்பு முக்கிய காரணமாக இருக்கிறது.

இதனால், சாமானிய மக்கள் வீட்டு கடன்கள் மீது அதிக ஆர்வம் செலுத்துவதில்லை. ஆகவே, மலிவு விலை வீட்டுக் கடன்களுக்கான விதி விலக்குகள் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வட்டியில் மாற்றங்கள் வரலாம். இது ரியல் எஸ்டேட் துறையில் குறுகிய கால வளர்ச்சியை எட்ட உதவலாம். அதோடு வீட்டுக் கடனில் விதிக்கப்படும் வட்டிக்கான விலக்குகள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் நகர்ப்புற வீட்டு வசதியை மேம்படுத்த கட்டுமானப் பொருள்கள் மீதான வரியானது, 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்று ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறுகின்றனர். இதை மத்திய அரசு கருத்தில் கொண்டு அதற்கான அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல வாடகை வீட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையில், குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான வீடுகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான வாடகை வருமானத்துக்கு 100% விலக்கு அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக நைட் ஃபிராங்க் இந்தியா நிறுவன தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஷிஷிர் பைஜால் தெரிவித்துள்ளார். குறிப்பாக வீட்டுக் கடன் வரி தள்ளுபடிகள் குறித்த அறிவிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறை முதலீடுகள் அதிகரிப்பு பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்புள்ளது.

இப்படி, மலிவு விலை வீடுகள், ரியல் எஸ்டேட் துறை முதலீடுகள் மற்றும் வீட்டுக் கடன் வரி தள்ளுபடிகள் ஆகியவையே இந்த 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய எதிர்பார்ப்புகளாக இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டால், நிச்சயமாக இந்த துறையில் மக்களை அதிருப்தி ஏற்படுத்தும் வகையிலான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Budget 2024 Real Estate Sector Expectations From Finance Minister Nirmala Sitharaman
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X