Home
News

Budget 2024: ஆஹா ஒளி வந்துவிட்டது.. இனி கம்மி விலையில் Mobile போன்கள்? குட் நியூஸ் சொன்ன நிர்மலா சீதாராமன்..

மொபைல் போன்கள், மொபைல் பிசிபிஏக்கள் (Mobile PCBA) மற்றும் மொபைல் சார்ஜர்கள் மீது விதிக்கப்பட்டு வந்த பேசிக் கஸ்டம்ஸ் டூட்டி (basic customs duty) என்றழைக்கப்படும் அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட பட்ஜெட் 2024 (Budget 2024) இல் முன்மொழிந்துள்ளார். இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல இரட்டிப்பு சந்தோஷத்தை ஒரே நேரத்தில் உற்பத்தியாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு தேடும் மக்களுக்கு இந்த செய்தி சந்தோஷத்தை வழங்கியுள்ளது. அது எப்படி? என்று கேட்கிறீர்களா? வாருங்கள் பார்க்கலாம்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய பட்ஜெட் (Indian Budget) பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் (lok sabha election 2024) நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ளது.

Budget 2024: ஆஹா ஒளி வந்துவிட்டது.. இனி கம்மி விலையில் Mobile போன்கள்

ஆஹா.. மீண்டும் மொபைல் துறைக்கு ஒளி வந்துவிட்டது.. குட் நியூஸ் சொன்ன நிர்மலா சீதாராமன்:

இதையடுத்து புதிய அரசு இந்த நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை ஜூலை 23, 2024 (இன்று) தாக்கல் செய்துள்ளது. நடப்பு ஆண்டான 2024 - வரும் ஆண்டு 2025 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் (Budget 2024) இன்று நடந்தது. இதில், நிதியமைச்ர் நிர்மலா சீதாராமன் தயாரித்த 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெகு வேகமாக வளர்ந்து வரும் மொபைல் துறை மீது மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.

காரணம், மொபைல் போன்கள், மொபைல் பிசிபிஏக்கள் (Mobile PCBA) மற்றும் மொபைல் சார்ஜர்கள் மீது விதிக்கப்பட்டு வந்த அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் இந்திய மொபைல் துறையானது உள்நாட்டு உற்பத்தியில் மூன்று மடங்கு அதிக வளர்ச்சியையும், ஏற்றுமதியில் ஏறக்குறைய 100 மடங்கு உயர்வையும் கண்டுள்ளது என்று அவர் சுட்டிக் காண்பித்துள்ளார்.

"கடந்த ஆறு ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தியில் மூன்று மடங்கு அதிகரிப்பு மற்றும் மொபைல் போன்களின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகரிப்புடன், இந்திய மொபைல் துறை (Mobile Industries) மிக வேகமாக வளர்ந்துள்ளது. நுகர்வோர் நலன் கருதி, இப்போது அடிப்படை சுங்க வரியை குறைக்க முன்மொழிகிறேன்." என்று கூறி நிர்மலா சீதாராமன் அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைத்துள்ளார்.

சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுடன் இந்தியா போட்டியிட ரெடி:

இந்த நடவடிக்கைகள் உள்ளூர் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதையும், உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளை இந்தியாவுக்கு ஈர்ப்பதையும் (global value chains to India) நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போன்கள் (Mobile phones) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் (electronics makers), மொபைல் ஃபோன் உதிரிபாகங்கள் (mobile phone parts) அல்லது துணை அசெம்பிளிகளின் பாகங்கள் (sub-assemblies parts) மீதான இறக்குமதி வரிகளை குறைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

உண்மையை சொல்ல போனால், சீனா மற்றும் வியட்நாம் (China and Vietnam) போன்ற நாடுகளுடன் இந்தியா போட்டியிட இந்த புதிய வரி குறைப்பு முக்கிய பங்காற்றும் என்று நம்பப்படுகிறது. இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA) இந்த மாற்றங்கள் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளது. பல்வேறு வகைகளில் உள்ளீட்டு கட்டணங்களைக் குறைப்பது 2026-27 நிதியாண்டுக்குள் வியட்நாம் மற்றும் சீனா போன்ற நாடுகளின் நிலைகளை இந்தியா அடைய உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

இது இந்தியாவிலிருந்து போட்டித்தன்மை, அளவு மற்றும் அதிகரித்த ஏற்றுமதியை உறுதி செய்யும். இதன் மூலம் பல நிறுவனங்கள் இந்தியாவிற்குள் உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டுவார்கள். இதன் விளைவாக புதிய நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் போன்களின் விலை இனி இன்னும் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Budget 2024 FM Nirmala Sitharaman reduced basic custom duty to 15 percentage on mobile phones PCB chargers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X