Home
News

பட்ஜெட் 2024-25: விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம்.. செல்போன்களின் விலை குறைகிறது..

மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தொடர்ந்து 7-வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். குறிப்பாக இந்த பட்ஜெட் 2047 ஆம் ஆண்டிற்குள் விக்சித் பாரத் அதாவது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு ரோடுமேப் ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது என்றும், மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கைதான் 3வது தேர்தல் வெற்றி என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பின்பு இந்த பட்ஜெட்டில் (budget 2024) மொபைல் போன்களின் விலை குறைகிறது என்றும்,செல்போன் மற்றும் உதிரி பாகங்களின் இறக்குமதி வரி 15 சதவிகிதம் குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் 2024-25:  விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம்..

குறிப்பாகப் புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் அரசு ஊதியம் வழங்கப்படும். EPFO பதிவு செய்த இளைஞர்களுக்கு 15,000 முதல் 1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் மாத ஊதியம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்கும் இளைஞர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000 வரை நேரடியாக வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாகச் செலுத்தப்படும்.

உள்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு அரசு நிதியுதவி அளிக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் விண்வெளித் திட்டங்களுக்கு ரூ1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய பட்ஜெட்டில் விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் புகுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதாவது விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் புகுத்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பின்பு டிஜிட்டல் முறையில் வேளாண் பொருள்கள் தொடர்பான கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், 500 முன்னணி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 5 கோடி இளைஞர்கள் இன்டர்ன்ஷிப் செய்வதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்பவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பயிற்சி செலவுகளை நிறுவனங்கள் அவற்றின் CSR ஒதுக்கீட்டிலிருந்து மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக உலக அளவில் பொருளாதாரம் பல சவால்களைச் சந்தித்தாலும் வலுவான நிர்வாகம் செயல் திறன் காரணமாக இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துவருகிறது என்று தெரிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மேலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்புக்காக 5 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அதற்காக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

photo courtesy: indiatoday.in

More from GizBot

Best Mobiles in India

English summary
Budget 2024-25: Digital technology in agriculture: Prices of cell phones come down:check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X