Home
News

2022 பட்ஜெட்: வளரும் டிஜிட்டல் இந்தியா- டிஜிட்டல் கரன்சி, 5ஜி ஏலம் உறுதி, விவசாயத்தில் ட்ரோன்கள்!

பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் ஆனது காகிதமில்லா மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டத்திஅன கீழ் தயாரிக்கப்பட்ட லேப்டாப்பில் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தற்போது தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஆனது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்படும் நான்காவது பட்ஜெட் ஆகும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை சுமார் ஒன்றரை மணி நேரம் இடைவெளியின்றி வாசித்து அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

200 கல்விச் சேனல்கள் உருவாக்கப்படும்

200 கல்விச் சேனல்கள் உருவாக்கப்படும்

கொரோனா தொற்று பரவல், ஒமைக்ரான் பரவலுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் மீது மிகந்த எதிர்பார்ப்பு இருந்தது. தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் எனவும் கூடுதலாக 200 கல்விச் சேனல்கள் உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 200 கல்வி சேனல்கள் உருவாக்கப்படும் எனவும் ஒவ்வொரு படிப்புக்கு ஒரு தொலைக்காட்சி என்ற வீதம் இது செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பிராந்திய மொழிகளிலும் கல்வியை வழங்க மாநிலங்களுக்கு உதவ முடியும் என கூறப்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் வகையில் டிஜிட்டல் பல்கலைக்கழகம்

உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் வகையில் டிஜிட்டல் பல்கலைக்கழகம்

அதேபோல் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் வகையில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்டும் எனவும் இது வெவ்வேறு இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நெட்வொர்க் மையங்கள் மாதிரியை அடிப்படையாக கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி திறன் மேம்பாட்டுக்காக புதிய இணையதளம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்

விவசாயத்தில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்

விவசாயத்தில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிசான் ட்ரோன்கள் பயன்பாடு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிலங்களை அளப்பது மற்றும் வேளாண் விளைச்சலை கணிப்பது போன்ற பணிகளுக்கு கிசான் ட்ரோன் திட்டம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பேங்கிங் மற்றும் ஃபின்டெக் ஆகியவற்றை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருவதன் ஒரு பகுதியாக 75 மாவட்டங்களில் 75 வங்கி அலகுகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பத்துக்கான ஏலம் நடப்பு ஆண்டில் நடத்தப்படும் எனவும் 2023 ஆம் ஆண்டுக்குல் 5ஜி தொழில்நுட்பம் கிடைக்கச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனிமேஷன், கிராஃபிக்ஸ் துறைகள் மேம்படுத்தப்படும் எனவும் இதனால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. நாட்டில் 5ஜி தொழில்நுட்ப சோதனை நடைபெற்று வரும் இதற்கான ஏலம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் களமிறங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி மூலம் நேரடியாக டிஜிட்டல் கரன்சி

ரிசர்வ் வங்கி மூலம் நேரடியாக டிஜிட்டல் கரன்சி

டிஜிட்டல் கரன்சி நேரடியாக ரிசர்வ் வங்கி மூலம் கொண்டுவரப்படும் எனவும் இது பிளாக் செயின் தொழில்நுட்பம் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சொத்துக்கள் மீது கிடைக்கும் லாபங்களுக்கு 30% வரி விதித்து அறிவிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு டிஜிட்டல் கரன்சி கொண்டு வரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது. பட்ஜெட் 5ஜி ஏலம் குறித்து அறிவித்த போது எதிர்கட்சியினர் பிஎஸ்என்எல் குறித்து கோஷம் எழுப்பினர். இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்

அதேபோல் வரும் நிதியாண்டில் இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 1.50 லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்படும் எனவும் வங்கிகளுடன் இணைந்து தபால் நிலையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Budget 2022-23: Emerging Digital India - e-passport with embedded chip, 200 education TV, 5G auction!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X