Budget 2021: அதிகரிக்கும் மொபைல் போன்களின் விலை- பட்ஜெட் தாக்கல் சொன்னது என்ன?
2021 மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் மொபைல் சார்ஜர்கள், மொபைல் போன்களின் பாகங்கள் மற்றும் துணை பாகங்கள் மீதான சில விலக்குகளை நீக்குவதாக அறிவித்தார்.

உள்நாட்டு மின்னணு உற்பத்தி
உள்நாட்டு மின்னணு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியில் மொபைல் சார்ஜர்கள், மொபைல் பாகங்கள் மற்றும் மொபைல் போனின் துணை பாகங்கள் ஆகியவையை இறக்குமதி செய்வதற்கான சில தனிபயன் வரி விலக்குகளை நீக்குவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இதுகுறித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததை பார்க்கலாம். அதில், சுங்க வரிகள் விதிக்கப்படாமல் இருந்த மொபைல் போன்களின் சில பாகங்களுக்கு இனி 2.5 சதவீதம் மிதமான சுங்க வரி விதிக்கப்படும்.

2.5 சதவீத மிதமான வரி
உள்நாட்டு உற்பத்தி வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க சார்ஜர்கள் மற்றும் மொபைல் போன்களின் சில பாகங்களுக்கான விலக்குகள் திரும்பப் பெறப்படுகின்றன. மொபைல் போன்களின் சில பாகங்களுக்கு சுங்கவரி விதிக்கப்படாமல் இருந்த நிலையில் இனி 2.5 சதீவீத மிதமான வரி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

சர்க்யூட் போர்ட் அசிம்பிளி, கேமரா தொகுதி போன்ற இணைப்புகள் மொபைல் போன் பாகங்கள் கஸ்டம் டியூட்டியில் இருந்து விலக்கு பெறுகிறது, அதாவது முன்பு வழங்கப்பட்ட nil விகிதத்தில் இருந்து விலக்கு பெற்று மிதமான 2.5 சதவீத வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரி மற்றும் பேட்டரி பேக்அப் தயாரிப்புகளுக்கும், துணை பாகங்களுக்கும் இதேபோன்ற வரி விதிக்கப்படும்.

விலை இந்தியாவில் அதிகரிக்கும்
அரசு அறிவித்துள்ள இந்த புதிய வரி ஏப்ரல் 1 முதல் வசூலிக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மொபைல் சார்ஜர்கள் விலை இந்தியாவில் வரவிருக்கும் மாதங்களில் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள உள்ளூர் சப்ளையர்களுக்கு இது சிறந்த நடவடிக்கை எனவும் கூறப்படுகிறது.

இறக்குமதி செய்ய 2.5 சதவீத மிதமான வரி
இந்த துறையின் மீது அரசாங்கத்திற்கு அதிக நம்பிக்கை இருப்பதை இந்த நடவடிக்கை காட்டுவதாகவும் இது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை மொபைல் உதிரி மாகங்கள் இறக்குமதி செய்ய சுங்க வரி விதிக்கப்படாமல் இருந்தது. இனி மொபைல் உதிர பாகங்கள் இறக்குமதி செய்ய 2.5 சதவீத மிதமான வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி தொடரும்
மொபைல் உதிரி பாகங்கள் மீதான வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பல நிறுவனங்கள் தங்களது உதிரி பாகங்கள் உற்பத்தியை இந்தியாவுக்குள் கொண்டுவருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மொபைல் போனின் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: ndtv.com


Click it and Unblock the Notifications