Home
News

பட்ஜெட் 2017-உள்நாட்டில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களின் விலை உயரும்.!

இந்த ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையால் உள்நாட்டில் தயாரிக்கக்கூடிய மொபைல் போன்களின் விலை உயரும்.

By Ilamparidi

ஒவ்வோர் வருடமும் மத்திய அரசினால் அந்த ஆண்டிற்குரிய "நிதி நிலை அறிக்கை" (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படும் அதனைப்பொறுத்தே அனைத்து துறையிலும் விலையேற்றமும்,விலைகுறைப்பும் நடைபெறும் அந்தவகையில் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ,அனைத்து துறையினரும் எதிர்நோக்கி காத்திருந்த இந்த ஆண்டிற்குரிய பட்ஜெட்டினை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

சர்க்கியூட்போர்டு பொருட்கள்:

அதில்,செல்போன் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சர்க்கியூட்போர்டு பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன செல்போன் தயாரிப்பில் இந்த சர்க்கியூட்போர்டுகளுக்காகவே 25 முதல் 30 சதவிகிதம் வரை செலவிடப்படுகிறது.அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சர்க்யூட் போர்டுகளை இறக்குமதி செய்வதற்கான சுங்கத் தீர்வை வரியில்(SAD)2% அதிகரிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் 2017-உள்நாட்டில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களின் விலை உயரும்.

விலை ஏற்றம்:

ஏனெனில் உள்நாட்டில் தயாரிக்கக்கூடிய செல்போன்களுக்கான சர்க்யூட் போர்டுகள் பெரும்பான்மையாக இறக்குமதி செய்யப்பட்டே பயன்படுத்தப்படுகின்றன.அவ்வாறு இறக்குமதி செய்யப்படுகிற செல்போன்களுக்கான சர்க்யூட் போர்டுகள் இறக்குமதி செய்வதற்கான விலை உயரும்பட்சத்தில் செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு பொருட்களுக்கான விலையில் ஏற்றம் செய்யக்கூடிய வாய்ப்புள்ளது.அல்லது தாமாகவே சர்க்யூட் பொருட்களை உள்நாட்டில் தாமாகவே தயாரிக்க முனைந்தாலோ விலை ஏற்றம் காணவே வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க : பட்ஜெட் 2017-ல் 'டிஜிட்டல் இந்தியா'விற்கு என்னென்ன லாபம்.?

Best Mobiles in India

English summary
Budget 2017 made in india mobile phones likely to see price hike.Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X