ஜியோவுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் வழங்கும் சிறப்பு ரீசாரஜ் ஆபர்.!
பிஎஸ்என்எல் ரூ.429க்கு ரீசாரஜ் செய்தால் 84ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த திட்டம் 84நாட்களுக்கு பயன்படும்.
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்சமயம் ஜியோவுக்கு போட்டியாக புதிய ரீசாரஜ் திட்டத்தை அறிவித்துள்ளது, இந்த ரீசாரஜ் திட்டம் பொறுத்தவரை அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.429க்கு ரீசாரஜ் செய்தால் 84ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த திட்டம் 84நாட்களுக்கு பயன்படும், ஜியோ பொறுத்தவரை ரூ.399க்கு ரீசாரஜ் செய்தால் 84ஜிபி வரை 4ஜி டேட்டா கிடைக்கும் வகையில் உள்ளது.

பிஎஸ்என்எல்:
பிஎஸ்என்எல் தற்சமயம் ரூ.429க்கு ரீசாரஜ் செய்தால் 84ஜிபி வரை 4ஜி டேட்டா வழங்கப்படும். மேலும் வரம்பற்ற இலவச (உள்ளூர் மற்றும் எஸ்டிடி ) கால்
அழைப்புகள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இமெயில் சேவை:
பிஎஸ்என்எல் நிறுவனம் ஜெய்ப்பூரில் உள்ள டேட்டா இன்போசிஸ் நிறுவனத்துடன் இணைந்து நாள் ஒன்றிற்கு ரூ.1/-க்கு தனியார் இமெயில் சேவையை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

வருடாந்திர தொகை:
ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பணம் செலுத்தப்படக்கூடும் இந்த திட்டங்களின் கீழ் ஒரு நாளைக்கு 1 ஜிபி ஸ்டோரேஜ் உடன் தினமும் ரூ.1ஃ- என்ற ஒரு பயனுள்ள விலையில் தொடங்குகிறது .10ஜிபி-க்கு மேற்பட்ட ஸ்டரோஜ் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் ரூ.500/- என்ற வருடாந்திர தொகை செலுத்தி கூடுதலாக 5ஜிபி அளவிலான ஸ்டோரேஜ்தனை பெறலாம்.

ரிலையன்ஸ் ஜியோ:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறிப்பிட்ட ரீசாரஜ் திட்டங்களின் அடிப்படையில் ரூ.399க்கு ரீசாரஜ் செய்தால் 84ஜிபி வரை 4ஜி டேட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,இதன் டவுன்லோடு வேகம் சற்று அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications