5ஜிபி இலவசம்-பிளானுக்கு 25% கேஷ்பேக் தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் அறிவிப்பு.!

|

ரிலையன்ஸ் ஜியோ பைபர் உடன் போட்டியால், பிராட்பேண்ட் பயனர்களுக்காக முன்பு சோதனை அடிப்படையில் 5ஜிபியை இலவசமாக வழங்கியது பிஎஸ்என்எல். மேலும், தற்போது பிளானுக்கு 25 சதவீதம் கேஷ்பேக்கு அறிவித்துள்ளது.

5ஜிபிஇலவசம்-பிளானுக்கு 25% கேஷ்பேக் தெறிக்கும்பிஎஸ்என்எல் அறிவிப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிளான்கள் மிகவும் மலிவானதாகவும் இருக்கின்றது. அமேசான் பிரைம் உள்ளிட்ட வீடியோக்களையும் காண முடியும். தற்போது வணிக ரீதியாக துவங்குகின்றது.

5ஜிபி இலவச பிராட்பேண்ட்

5ஜிபி இலவச பிராட்பேண்ட்

இந்த பிளான் கடந்த மார்ச்சில் சோதனை அடிப்படையில், 5ஜிபி இலவச சோதனை பிராட்பேண்ட் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது, செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் பிராட்பேண்டை எந்த செலவும் இல்லாமல் அனுபவிக்க முடியும். இந்த வாடிக்கையாளர்கள் எந்தவொரு வெளிப்படையான வைப்புத்தொகையும் செய்யத் தேவையில்லை. மாத வாடகையும் செலுத்த வேண்டாம்.

10 எம்பிபிஎஸ் வேகம்

லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 5 ஜிபி தரவு வரை 10 எம்.பி.பி.எஸ் வேகத்தைப் பெறலாம். பிறகு, இணைப்பின் வேகம் 1 எம்.பி.பி.எஸ் வரை குறைக்கப்படும். அந்தமான் மற்றும் நிக்கோபார் தவிர அனைத்து வட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு அழைப்பு நம்மையும் கிடைக்காது.

பூமியிலிருந்து நிலவிற்கு லிப்ட்! விண்வெளி பயணத்தை எளிதாக்க விஞ்ஞானிகள் திட்டம்.! நடக்குமா குருநாதா?பூமியிலிருந்து நிலவிற்கு லிப்ட்! விண்வெளி பயணத்தை எளிதாக்க விஞ்ஞானிகள் திட்டம்.! நடக்குமா குருநாதா?

வாடிக்கையாளர்களுக்கு  புதிய வசதி

அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க, பிஎஸ்என்எல் இறுதியாக அமேசான் பிரைம் அதன் சில பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கும் புதிய நடவடிக்கையிலும் வழங்க முடிவு செய்துள்ளது. அரசாங்கத்தின் தலைமையிலான டெல்கோ தனது கேஷ்பேக் திட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்திராயன்-2 டிவியில் நேரலை: இஸ்ரோவுடன் கேரள திருநங்கை சாதனை-குவியும் பாராட்டு.!சந்திராயன்-2 டிவியில் நேரலை: இஸ்ரோவுடன் கேரள திருநங்கை சாதனை-குவியும் பாராட்டு.!

பிளான் மற்றும் கேஷ்பேக் திட்டம்

ரூ. 499 க்கு கீழ் உள்ள திட்டங்களுக்கு 15% கேஷ்பேக், ரூ. 499 க்கு மேல் மற்றும் ரூ .99 க்கு கீழே உள்ள திட்டங்களுக்கு 20% கேஷ்பேக், ரூ .900 க்கு மேல் உள்ள திட்டங்களில் 25% கேஷ்பேக் ஆகியவற்றை வழங்குகிறது. சந்தாதாரர்கள் இந்த திட்டங்களை 12 மாதங்களுக்கு நேராகப் பெற்றால், ஒரு வருடத்திற்கு இலவச அமேசான் பிரைம் சந்தாவை வழங்கப்படுகின்றது.

கூடுதல் பிளான்களில் கலக்கல்

கூடுதலாக, ரூ .399 க்கு மேல் ஆண்டு திட்டங்களில் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பயனர்களுக்கு ரூ .999 மதிப்புள்ள அமேசான் பிரைம் உறுப்பினர் இலவசமாக கிடைக்கும். பிஎஸ்என்எல் தற்போதைய அறிவிப்பின் படி அறிவித்துள்ளது.

காதலியுடன் ஜாலிமூடில் அமேசான் நிறுவனர் கிளுகிளு: வைரல் புகைப்படங்கள்-சுத்துங்க எஜமா சுத்துங்க.!காதலியுடன் ஜாலிமூடில் அமேசான் நிறுவனர் கிளுகிளு: வைரல் புகைப்படங்கள்-சுத்துங்க எஜமா சுத்துங்க.!

புதிய திருத்தம்

டெல்கோ சமீபத்தில் ரூ .1,699 ப்ரீபெய்ட் திட்டத்தை 365 க்கு பதிலாக 455 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை திருத்தியது. மேலும், பம்பர் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வாடிக்கையாளர்களுக்கு 2.2 ஜிபி கூடுதல் தினசரி தரவை கிடைக்கின்றது.

Best Mobiles in India

English summary
BSNLs 5GB free plan and 25% cashback offer : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X