Home
News

Jio, Airtel-ஐ முடிச்சுவிட்ட BSNL.. மாதம் ரூ.233 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. 3GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

டெலிகாம் கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு வருடாந்திர திட்டத்தை கொடுப்பதில் ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) நிறுவனங்களை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, தூக்கி சாப்பிட்டுவிட்டது. கஸ்டமர்கள் மாதத்துக்கு ரூ.233 செலவு செய்ய ரெடியாக இருந்தாலே போதும், 365 நாட்கள் முழுவதும் வேலிடிட்டியை கொடுக்கிறது.

வருடம் முழுவதும் வேலிடிட்டி நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், ஏர்டெல் மற்றும் ஜியோவில் ரூ.3,500 விலைக்கும் மேல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால், அதைவிட அதிகமாக நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவுடனான வருடாந்திர திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.2,799 விலைக்கே கொடுக்கிறது.

Jio, Airtel-ஐ முடிச்சுவிட்ட BSNL.. மாதம் ரூ.233 க்கு 365 நாட்கள்!

இந்த விலையை 12 மாதங்களுக்கு வகுத்து, மாத செலவை கணக்கிட்டால், வெறும் ரூ.233 மட்டுமே கஸ்டமர்களுக்கு தேவைப்படுகிறது. இந்த விலைக்கே நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் வருடாந்திர ரீசார்ஜ் ரூ.2,799 (BSNL Yearly Recharge Plan Rs 2,799): இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்கள் 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்யலாம். லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் கிடைக்கும். நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும். இதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

ஆகவே, 365 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா கிடைத்தால், மொத்கமாக 1,095 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த டேட்டாவை போலவே தினசரி கணக்கில் 100 எஸ்எம்எஸ்களையும் இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் பெற்று கொள்ளலாம். ஜியோ மற்றும் ஏர்டெல்லில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவுடன் வருடாந்திர திட்டம் கிடையாது.

ஜியோவில் ரூ.3599 விலைக்கு கிடைக்கும் வருடாந்திர திட்டத்தில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த டேட்டா சலுகைகள் பிஎஸ்என்எல்லை விட குறைவாக இருக்கிறது. இருப்பினும், டேட்டா வேகத்தில் பிஎஸ்என்எல் ஜியோவுக்கு நிகராக இருக்காது.

ஏனென்றால், நாடு முழுவதும் ஜியோ நிறுவனம், 4ஜி சேவையை மட்டுமல்லாமல், 5ஜி சேவையையும் கொடுக்கிறது. அதே நேரத்தில் 5ஜி ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு கூடுதல் செலவு இல்லாமலேயே அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை ஜியோ நிறுவனம் கொடுத்து இருக்கிறது. கூடுதல் சலுகைகளும் இந்த திட்டத்தில் ஏராளமாக கிடைக்கின்றன.

ஆகவே, ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar) சந்தாவானது 3 மாதங்களுக்கும், கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) சந்தாவானது 18 மாதங்களுக்கும் கிடைக்கும். ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) மற்றும் ஜியோ டிவி (JioTV) சலுகைகளும் கிடைக்கின்றன. ஆகவே, கூடுதல் சலுகைகளில் ஜியோ முந்தினாலும், விலையில் பிஎஸ்என்எல்லை அடித்து கொள்ள முடியாது.

ஏர்டெல் நிறுவனமும் ரூ.3,599 விலைக்கு வருடாந்திர திட்டத்தை வைத்து இருக்கிறது. ஆனால், இதில் தினசரி டேட்டாவானது, பிஎஸ்என்எல் மற்றும் ஜியோவை விட குறைவாக இருக்கிறது. அதாவது, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை மட்டுமே கொடுக்கிறது. இருப்பினும், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுத்து கஸ்டமர்களை தக்க வைத்துள்ளது.

மேலும், வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் உள்ளிட்ட கூடுதல் சலுகைகளை இந்த ஏர்டெல் வருடாந்திர திட்டம் வைத்துள்ளது. டேட்டா வேகம் பெரிய விஷயமில்லை என்றால், விலையில் பிஎஸ்என்எல் முந்திவிட்டது.

Best Mobiles in India

English summary
BSNL Yearly Recharge Plan With 3GB Data Unlimited Voice At Rs 2799 Cheaper Than Airtel Jio
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X