Home
News

BSNL போட்ட போடு.. மாதம் ரூ.181 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 1.5 ஜிபி டேட்டா!

இந்திய டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளுடன் கூடிய வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளன. இதில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களைவிட பிஎஸ்என்எல் (BSNL) மலிவான விலைக்கு திட்டங்களை கொடுத்துள்ளது. என்னென்ன திட்டங்கள் வருகின்றன.

பிஎஸ்என்எல் ரூ.2799 திட்ட விவரங்கள் (BSNL Rs 2799 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும், வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) செய்து கொள்ளலாம். இதில் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கின்றன.

BSNL போட்ட போடு.. மாதம் ரூ.181 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த விலைக்கு தனியார் டெலிகாம் நிறுவனங்களில் வருடாந்திர திட்டங்கள் கிடையாது. சொல்லப்போனால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவுடன் வருடாந்திர வேலிடிட்டி கொடுக்கும் திட்டம், தனியாரிடம் கிடையாது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டத்தில் செய்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த திட்டத்துக்கும் வருடாந்திர வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த 2 ஜிபிக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

மேலே பார்த்த 2 திட்டங்களில் மட்டுமே 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதற்கு அடுத்த விலைக்கு கிடைக்கும் திட்டங்களில் 330 நாட்கள், 300 நாட்கள் என்று வேலிடிட்டி சற்று குறைவாக கிடைக்கும். இதற்கு ஏற்ப விலையும் மலிவாகவே இருக்கும். ஆகவே, 300 நாட்கள் வேலிடிட்டி போதுமானால், ரூ.1999 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ.1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 300 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும். மாத செலவு ரூ.181 ஆக மட்டுமே இருக்கிறது. இதே வேலிடிட்டியை மலிவான விலைக்கு பெற்ற கொள்ள விரும்பினால், பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.

பிஎஸ்என்எல் ரூ.1499 திட்ட விவரங்கள் (BSNL Rs 1499 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் முந்தைய திட்டத்தில் கிடைத்த அதே 300 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், விலை ரூ.500 குறைவாக இருக்கிறது. இதற்கு காரணம் டேட்டா சலுகைதான். முந்தைய திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைத்தது.

ஆனால், இதில் மொத்தமாகவே 32 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இதை 300 நாட்களுக்கும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Yearly Plans 2026 Unlimited Voice Calls Daily Data Check Best Recharge For 365 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X