ரூ.196 க்கு BSNL அறிமுகம் செய்துள்ள புதிய SIM கார்டு.. இதில் அப்படி என்ன ஸ்பெஷல்? யாருக்கு அதிக பலன்?
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கான புதிய யாத்ரா சிம் கார்ட்டை (BSNL Yatra SIM Card) அறிமுகம் செய்துள்ளது.
பிஎஸ்என்எல் யாத்ரா சிம் கார்ட்டில் அப்படி என்ன ஸ்பெஷல்? பிஎஸ்என்எல் யாத்ரா சிம் கார்ட்டின் விலை நிர்ணயம் (BSNL Yatra SIM Price) என்ன? பிஎஸ்என்எல் யாத்ரா சிம் கார்டு யாருக்கெல்லாம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்? வாருங்கள் விரிவாக பார்ப்போம்:

பிஎஸ்என்எல் யாத்ரா சிம் கார்டு ஆனது ரூ.196 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 2025 அமர்நாத் யாத்திரைக்கு செல்ல விரும்புவோருக்கு பிஎஸ்என்எல் வழங்கும் ஒரு ஸ்பெஷல் சிம் கார்டு ஆகும். இதன் கீழ் வலுவான மொபைல் சிக்னல்கள் கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் உறுதியளிக்கிறது.
உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிஎஸ்என்எல் அதன் நெட்வொர்க்குகளை 4ஜி-க்கு மேம்படுத்தும் நிலையில், அமர்நாத் யாத்திரை 2025-க்கு பயணம் செய்பவர்களையும், தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பணி சகாக்களுடன் தடையின்றி இணைந்திருக்க விரும்புபவர்களையும் இலக்காக கொண்டு பிஎஸ்என்எல் யாத்ரா சிம் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் யாத்ரா சிம் கார்டு எங்கு கிடைக்கும்? ரூ.196 க்கு கிடைக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் யாத்ரா சிம் கார்டு ஆனது 15 நாட்கள் செல்லுபடியாகும். இது அமர்நாத் வழித்தடங்களில் வலுவான நெட்வொர்க் இணைப்பை வழங்கும். லகான்பூர், பகவதி நகர், சந்தர்கோட், பஹல்காம், பால்டால் மற்றும் பல இடங்களில் உள்ள பிஎஸ்என்எல் முகாம்களில் இந்த சிம் கார்ட்டை வாங்கலாம். மேலதிக விவரங்களை பிஎஸ்என்எல் பகிர்ந்து கொள்ளவில்லை.
2021 ஆம் ஆண்டில், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 என்கிற திட்டத்தை கொண்டிருந்தது. இந்த திட்டமும் 15 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்படி இருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 38 நாட்கள் நடைபெறும் வருடாந்திர அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை 3 ஆம் தேதி அன்று தொடங்கியது. வழக்கம் போல இந்தாண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரை நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 5ஜி சேவை ஆனது பிஎஸ்என்எல் க்யூ-5ஜி (BSNL Q-5G) என்று அழைக்கப்படும்படி பெயர் சூட்டி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது குவாண்டம் 5ஜி (Quantum 5G) என்பதன் சுருக்கமாகும். பிஎஸ்என்எல் அதன் 5ஜி சேவைகளுக்கு பெயரிட பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அதன் பின்னர் இந்த பெயரை சூட்டியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே க்யூ-5ஜி ஸ்டேபிள் வயர்லெஸ் அணுகல் (FWA) சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் குவாண்டம் 5ஜி எப்டபுள்யூஏ சேவையானது வணிகங்கள் மற்றும் நிறுவனங்களை இலக்காக கொண்ட ஒரு இன்டர்நெட் லீஸ் லைன் ஆக இருக்கும்.
இந்த சேவை சிம் அல்லது வயர்கள் தேவையில்லாத முதல் 5ஜி எப்டபுள்யூஏ என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறுகிறது மற்றும் இது "அதிக வேகமான" நெட்வொர்க் ஸ்பீட் மற்றும் சிம் இல்லாத செயல்பாட்டை வழங்கும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்தியாவில் பிஎஸ்என்எல் குவாண்டம் 5ஜி எப்டபுள்யூஏ-வின் விலைகள் மாதத்திற்கு ரூ.999 முதல் தொடங்குகிறது.
இந்தியாவில் உள்நாட்டு 4ஜி-ஐ பயன்படுத்தும் ஒரே தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பிஎஸ்என்எல் மட்டுமே ஆகும். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தத்தம் பயனர்களுக்கு 4ஜி-ஐ வழங்க வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியை நாடின. பாதுகாப்பு நிலைப்பாட்டிற்காகவும், சுயசார்பு கண்ணோட்டத்தாலும், 4ஜி வெளியீட்டிற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயபடுத்தி உருவாக்க வைத்தது.


Click it and Unblock the Notifications