BSNL: தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு கம்மி விலையில் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..

|

மக்களைச் சென்ற ஆண்டு அதிகம் பாதித்த கோவிட் -19 தொற்றுநோய் இப்போது மீண்டும் நாட்டில் மிக வேகமாகப் பரவி வருகிறது. கடந்த ஆண்டில் ஒரு வேரியண்டாக இருந்த கோவிட் -19 தொற்றுநோய் அதன் மாறுபாட்டை இப்போது ஓமிக்ரான் என்ற புது வடிவில் பீதி அடையச் செய்துள்ளது. இந்த தொற்றுநோயின் அச்சம் இப்போது மீண்டும் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க வற்புறுத்தத் துவங்கியுள்ளதால், மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வீட்டில் முடங்கி இருக்கும் சூழல் உருவாகும் நிலையைக் கண்ட மக்கள் மீண்டும் அதிக டேட்டா கிடைக்கும் திட்டங்களைத் தேட துவங்கியுள்ளனர்.

மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த 'வொர்க் ஃபிரம் ஹோம்' திட்டங்கள்

மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த 'வொர்க் ஃபிரம் ஹோம்' திட்டங்கள்

கோவிட் -19 மற்றும் ஓமிக்ரான் பரவல் காரணமாக இந்த ஆண்டும் மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலையைச் சந்தித்துள்ளனர். இதேபோல், பள்ளி மற்றும் கல்லூரிக்கான படங்களும் அடுத்து இணைய வழியில் தான் நடக்கும் என்பதனால் மக்கள் அனைவரும் தினமும் அதிக டேட்டாவை வழங்கும் Work from home சலுகை திட்டங்களைத் தேட துவங்கியுள்ளனர். கடந்த ஆண்டில் இது போன்ற வொர்க் ஃபிரம் ஹோம் திட்டங்கள் தான் சந்தாதாரர்களை அதிகம் ஈர்த்தது என்பதும் கவனிக்கத்தக்கது. அதிலும் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த திட்டம் என்றால் அது BSNL வழங்கிய திட்டமாகத் தான் இருக்கும்.

ஒவ்வொரு நாளும் 5 ஜிபி டேட்டா என்று மொத்தம் 84 நாட்களுக்கு வேண்டுமா?

ஒவ்வொரு நாளும் 5 ஜிபி டேட்டா என்று மொத்தம் 84 நாட்களுக்கு வேண்டுமா?

அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் BSNL, மக்களை அதிகம் ஈர்க்கும் பல திட்டங்களை தன் வசம் வைத்துள்ளது. அதிலும் லாக் டவுன் நேரங்களில் மக்களை அதிக ஈர்த்த திட்டங்களில் ஒன்று என்றால், அது 84 நாட்களுக்குச் செல்லுபடியாகும் ஒவ்வொரு நாளும் 5 ஜிபி டேட்டாவை வழங்கிய திட்டமாகும். இந்த திட்டம் மக்களை அதிகம் ஈர்க்க காரணமாக இருந்ததே இதன் விலை தான், அதிலும் மற்ற எந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வழங்காத குறைந்த விலையில் நிறுவனம் இந்த திட்டத்தை வழங்குகிறது என்பது சிறப்பானது.

வங்கியில் எளிதாக கடன் வாங்க வேண்டுமா? அப்போ முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க.. ஆன்லைன் CIBIL ஸ்கோர் செக்..வங்கியில் எளிதாக கடன் வாங்க வேண்டுமா? அப்போ முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க.. ஆன்லைன் CIBIL ஸ்கோர் செக்..

இந்த திட்டத்தின் விலை என்ன? இந்த திட்டம் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது?

இந்த திட்டத்தின் விலை என்ன? இந்த திட்டம் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது?

அதிக டேட்டா வேண்டி, நீங்கள் பொதுவாக மற்ற நெட்வொர்க்குகளில் ரீசார்ஜ் செய்யும் திட்டங்களின் விலையை விட இது சற்று குறைந்த விலையில் உங்களுக்குக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டான சூழ்நிலையில் அதிக டேட்டாவை எதிர்பார்க்கும் பயனர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே BSNL இது போன்ற பல சிறந்த திட்டங்களை நிறுவனம் தன் வசம் வைத்துள்ளது. வீட்டுச் சூழலில் இருந்து வேலையைத் தக்கவைக்கவும் உங்களுக்கு உதவ இந்த 84 நாள் திட்டம் போதுமானதாக இருக்கும். சரி, இப்போது இந்த திட்டத்தின் விலை என்ன? இந்த திட்டம் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று தெளிவாகப் பார்க்கலாம்.

BSNL வழங்கும் ரூ. 599 விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

BSNL வழங்கும் ரூ. 599 விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

BSNL வழங்கும் இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது உங்களுக்கு வெறும் ரூ. 599 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் உங்களுக்குக் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குச் செல்லுபடியாகும் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தின் 84 நாட்கள் செல்லுபடியாகும் காலம் நிறைவடையும் வரை, பயனர்களுக்குத் தினமும் 100 SMS நன்மை கிடைக்கிறது. இதையெல்லாம் விட, மக்களின் டேட்டா தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் தினமும் உங்களுக்கு 5 GB டேட்டா நன்மையைத் தடையில்லாமல் தொடர்ந்து வழங்குகிறது. இதன் மூலம் உங்களுக்கு ஒட்டுமொத்தமாக 420 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

கிரெடிட் கார்டு பயனர்ளே உஷார்.. இனி தாமதமாக கட்டணம் செலுத்தினால் டபுள் அபராதம்.. அதிகரிக்கும் கட்டணம்..கிரெடிட் கார்டு பயனர்ளே உஷார்.. இனி தாமதமாக கட்டணம் செலுத்தினால் டபுள் அபராதம்.. அதிகரிக்கும் கட்டணம்..

வரம்பற்ற இலவச குரல் அழைப்பு மற்றும் தேசிய ரோமிங்

வரம்பற்ற இலவச குரல் அழைப்பு மற்றும் தேசிய ரோமிங்

இத்துடன் உங்களுக்கு வரம்பற்ற இலவச குரல் அழைப்பு மற்றும் தேசிய ரோமிங் ஆகியவையும் இதில் கிடைக்கிறது. டெல்லி மற்றும் மும்பையின் MTNL ரோமிங் பகுதி உட்பட இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரூ. 599 சிறப்புக் கட்டண வவுச்சரை நீங்கள் CTOPUP, BSNL இன் இணையதளம் அல்லது சுய கவனிப்பு செயல்படுத்தல் மூலம் கூட இந்த திட்டத்தை நீங்கள் செயல்படுத்தலாம். இதேபோல், இன்னும் கம்மி விலையில் உங்களுக்கு அதிக டேட்டா வேண்டும் என்றாலும் கூட BSNL சில திட்டங்களை வைத்துள்ளது.

ரூ. 251 விலையில் 70 ஜிபி டேட்டாவா? என்னப்பா சொல்றீங்க?

ரூ. 251 விலையில் 70 ஜிபி டேட்டாவா? என்னப்பா சொல்றீங்க?

ரூ. 599 திட்டம் உங்கள் பட்ஜெட்டிற்குள் வரவில்லை என்றால், கவலைப்படாதீர்கள் BSNL நிறுவனத்திடம் அதைவிடக் குறைந்த விலையான ரூ. 251 விலையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் ப்ரீபெய்ட் திட்டத்தையும் வைத்துள்ளது. முதலில் இந்த திட்டம் உங்களுக்கு மூன்று மாதம் செல்லுபடியாகாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த திட்டம் உங்களுக்கு வெறும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் 70 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மையும் கிடையாது.

நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறீர்களா? பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் உடனே எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறீர்களா? பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் உடனே எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

வெறும் ரூ. 151 விலையில் இவ்வளவு டேட்டாவா? இத்தனை நாளாய் இது தெரியாமல் போச்சே

வெறும் ரூ. 151 விலையில் இவ்வளவு டேட்டாவா? இத்தனை நாளாய் இது தெரியாமல் போச்சே

அழைப்பு மற்றும் SMS நன்மை வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் தனியாகத் தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த குறைந்த விலை திட்டமும் உங்கள் பட்ஜெட்டிற்குள் வரவில்லை என்றால் கவலைகொள்ளாதீர்கள், BSNL இடம் இன்னும் மலிவான விலையில் மற்றொரு ப்ரீபெய்ட் பேக் திட்டம் உள்ளது. இது உங்களுக்கு ரூ. 151 விலையில் வருகிறது.

இந்த திட்டங்களை எப்படி ரீசார்ஜ் செய்வது?

இந்த திட்டங்களை எப்படி ரீசார்ஜ் செய்வது?

இந்த திட்டம் உங்களுக்கு 30 நாட்களுக்கு 40 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், பான் இந்தியாவுக்குப் பொருந்தும். பயனர்கள் பிஎஸ்என்எல் போர்டல், மை பிஎஸ்என்எல் ஆப், சில்லறை விற்பனையாளர் அல்லது மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம் ரீசார்ஜ் செய்யக் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
BSNL Work From Home Prepaid Recharge Gets You 5GB Data Per Day For Just Rs 599 With Call And SMS : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X