இது நல்லதற்கு அல்ல: பிரபல பிஎஸ்என்எல் திட்டங்கள் அனைத்து வட்டாரங்களிலும் வாபஸ்.!
இந்தியாவின் ஐந்தாவது பெரிய தொலைத் தொடர்பு சேவை வழங்குனரான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) மொத்தம் 107 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
இந்தியாவின் ஐந்தாவது பெரிய தொலைத் தொடர்பு சேவை வழங்குனரான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) மொத்தம் 107 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ஆனால் மிக விரைவில் இந்த எண்ணிக்கை குறையுமென்றே தோன்றுகிறது.
நீங்கள் நினைப்பது போல வாடிக்கையாளர் எண்ணிக்கையின் வீழ்ச்சிக்கு முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அல்லது பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நெருக்கடிகள் காரணமாக இருக்காது. அதற்கு முழு காரணமாகவும் பிஎஸ்என்எல்-ன் கண்மூடித்தனமான நடவடிக்கையாகத் தான் இருக்கும். அப்படியானதொரு நடவடிக்கையைடன் பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

அனைத்து வட்டாரங்களில் வாபஸ்
அதாவது, சமீபத்தில் திருத்தப்பட்ட ப்ரீபெய்ட் தரவுத் திட்டமான எஸ்டிவி 821 உட்பட நிறுவனத்தின் ஏழு ப்ரீபெய்ட் திட்டங்களை அனைத்து வட்டாரங்களில் இருந்தும் திரும்பப் பெறுவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. மேலும் இது லீக்ஸ் தகவல் அல்ல, அதிகாரப்பூர்வமானது என்பது குறிப்பிடத்தக்கது.

திரும்பிப் பெறப்பட்ட திட்டங்களின் பட்டியல்
இந்த திரும்பிப்பெறப்படும் பட்டியலில் வரம்பற்ற தரவு திட்டமான எஸ்டிவி ரூ.398, ரூ.629, ரூ.2,399, ரூ.821 மற்றும் ரூ.1,949/- திட்டமும் மற்றும் ப்ரீபெய்ட் காம்போ திட்டங்களான எஸ்டிவி ரூ.3,099 மற்றும் ரூ.1402/- ஆகிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ரூ.821/- ப்ரீபெய்ட்
மேற்கூறப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி அன்றே திரும்பப் பெறப்பட்டதென்றும், பயனர்கள் இனி இந்தத் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய முடியாதென்பதையும் பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையில் மோசமான விடயம் என்னவென்றால் பிஎஸ்என்எல் மூலம் திரும்பி பெறப்பட்ட இந்த அனைத்து திட்டங்களுமே பிரபலமாக உள்ளன, குறிப்பாக, ரூ.821/- ப்ரீபெய்ட் பிளான்.!

120 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி
எஸ்டிவி 821 ஆனது மொத்தம் 120 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான தரவை வழங்கியது. மறுகையில் உள்ள ரூ.398/- மற்றும் ரூ.629/- ஆகிய கட்டண திட்டங்களானது, முறையே நாள் ஒன்றிற்கு 2 ஜிபி தரவு மற்றும் 3 ஜிபி தரவுகளை மொத்தம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கியது.

ஏற்கனேவே ரீசார்ஜ் செய்த பயனர்களுக்கு செல்லுபடியாகும்
300 நாட்களுக்கு செல்லுபடியகவும் ரூ.1,949/- திட்டத்தை பொறுத்தமட்டில், நாள் ஒன்றிற்கு வரம்புக்குட்பட்ட 1 ஜிபி அளவிலான தரவையும், வரம்பு முடிந்த பின்னர் 40 கேபிபிஎஸ் வேகத்திலான வரம்பற்ற டேட்டாவையும் வழங்கியது. இருப்பினும், இந்த திட்டங்களை ஏற்கனேவே ரீசார்ஜ் செய்த பயனர்களுக்கு செல்லுபடியாகும் காலம் வரை நன்மைகளை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று ஆறுதலான விடயம்
நிறுவனத்தின் பிராதான திட்டங்கள் திரும்பப் பெறபட்ட போதிலும், பிஎஸ்என்எல் அதன் ரூ.99 மற்றும் ரூ.319/- ஆகிய இரண்டு புதிய வரம்பற்ற குரல் அழைப்புகளை முறையே 26 நாட்கள் மற்றும் 90 நாட்களுக்கு எந்த வரம்புகளும் இல்லாமல் வழங்கி வருவது சற்று ஆறுதலளிக்கிறது.

ரூ.99 மற்றும் ரூ.319
அறிமுகமான பிஎஸ்என்எல் ரூ.99/- மற்றும் ரூ.319/- ஆனது முறையே 26 நாட்கள் மற்றும் 90 நாட்களுக்குசெல்லுபடியாகும் மற்றும் இவைகள் வரம்பற்ற குரல் அழைப்புகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். இந்த புதிய வாய்ஸ் எஸ்டிவி-க்கள் ஆனது நிறுவனத்தின் தரவு சேவைகளை உபயோகிக்காத வாடிக்கையாளர்களை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறுகிறது.

ஜியோவின் ரூ.98
மேலும், அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் ரூ.99/- ஆனது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/- திட்டத்துடன் விலை அளவில் போட்டியிடுகிறது. ஜியோவின் ரூ.98/- ஆனது குரல் அழைப்பு மட்டுமின்றி மற்றும் தரவு சேவைகளையும் வழங்குகின்றது. உடன் பிஎஸ்என்எல் இந்த திட்டங்களுடன் எஸ்எம்எஸ் நன்மைகளையும் வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இவைகள் முழுமையான வாய்ஸ் திட்டங்களாக இருக்கலாம்.

வரம்பற்ற குரல் அழைப்பு
ரூ.99/- என்கிற வாய்ஸ் எஸ்.டி.வி மூலம் வழங்கப்படும் நன்மைகளை பற்றி பேசுகையில், வீட்டு வட்டத்தில் உள்ள எந்தவொரு நெட்வர்க் உடனாகவும் வரம்பற்ற குரல் அழைப்புகளை மற்றும் , இது மும்பை மற்றும் தில்லி தவிர இதர அனைத்து வட்டத்திலும் தேசிய ரோமிங் அழைப்புகளையும் வழங்குகிறது.

பான்-இந்தியா அடிப்படையில்
மறுகையில் உள்ள ரூ.319/- ஆனது ரூ.99/0 வழங்கும் அதே சலுகைகளை அளிக்கிறது. ஆனால் ரீசார்ஜ் செய்த தேதியிலிருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். பான்-இந்தியா அடிப்படையில் இந்த திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்வதற்காக பிஎஸ்என்எல்-ன் வலைத்தளத்தை அணுகவும்.

28 நாட்கள் கூட இல்லை
துரதிருஷ்டவசமாக, ரூ.99/- திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வெறும் 26 நாட்கள் மட்டுமே, பிற ப்ரீபெய்டு எஸ்டிவிக்களை போன்று 28 நாட்கள் கூட இல்லை. எனவே, ஒரு வருடத்திற்கு, இதே திட்டத்தை 1பயன்படுத்த மொத்தம் 14 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும். 28 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருந்தால் 13 முறை ரீசார்ஜ் செய்தால் போதும்.


குரல் அழைப்பு பயனர்களுக்கு மட்டும்தான்
மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/- ஆனது 28 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளையும், 2 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. ஆக இந்த பிஎஸ்என்எல் ரூ.99/- திட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு ஜிபி அளவிலான தரவாவது சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிறுவனம் தெளிவாக, இவைகளை குரல் அழைப்பு பயனர்களுக்கு மட்டும்தான் என்று கூறியுள்ளது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கும் தமிழ் கிஸ்பாட் வலைதளத்தின் டெலிகாம் செய்திகளுடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications