Home
News

குருநாதா இங்கயும் வந்துடீங்களா.. அதானி ஆப்பை டவுன்லோட் செய்தால் BSNL இலவச WiFi.. டிச.25 முதல்!

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) ஆனது அதானி நவி மும்பை விமான நிலைய பயணிகளுக்கு இலவச வைஃபை சேவைகளை வழங்க உள்ளது. நவி மும்பை சர்வதேச விமான நிலையம் (NMIAL) ஆனது டிஜிட்டல் பயணிகள் தொடர்பு அமைப்பை பயன்படுத்த பிஎஸ்என்எல் உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இதன் கீழ் டிசம்பர் 25, 2025 அன்று விமான நிலையம் ஆனது வணிக நடவடிக்கைகளை தொடங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு இலவச அதிவேக வைஃபை கிடைக்கும். பிஎஸ்என்எல் ஏற்கனவே அதன் 4ஜி நெட்வொர்க்கை வெளியிட தொடங்கியுள்ளது, மேலும் அதன் 4ஜி நெட்வொர்க் ஆனது ஒரு ஃபார்ம்வேர் ஓவர்-தி-ஏர் (FOTA) மூலம் 5ஜி க்நெட்வொர்க்கிற்கு மேம்படுத்த கூடியதாக இருக்கிறது.

அதானி ஆப்பை டவுன்லோட் செய்தால் BSNL இலவச WiFi.. டிச.25 முதல்!

விமான நிலையத்தில் பிஎஸ்என்எல்-ஐ சேர்க்கும் இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது. ஏனெனில் பிஎஸ்என்எல் , சி-டாட் (டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம்), டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) மற்றும் தேஜாஸ் நெட்வொர்க்குகள் போன்ற உள்நாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களால் வழங்கப்பட்ட தொழில்நுட்பத்தை (பிஎஸ்என்எல் 4ஜி) இதில் பயன்படுத்தப்படுகிறது.

நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இலவச வைஃபை வசதியை பெற விரும்பும் பயணிகள், அதானி ஒன்ஆப்பை (Adani OneApp) விர்ச்சுவல் அசிஸ்டன்ட் ஆக பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த ஆப் பயனர்களுக்கு நிகழ்நேர விமான புதுப்பிப்புகள், போர்டிங் கேட் தகவல், அட்டவணைகள் மற்றும் அறிவிப்புகளை பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் நேரடியாக வழங்கும்.

இதனுடன், அருகிலுள்ள சில்லறை விற்பனை, உணவு மற்றும் லவுஞ்ச் வசதிகள் தொடர்பான தகவல்களையும் பயனர்கள் பெறுவார்கள். புதிய விமான நிலையத்தில் அதானி குழுமம் ஒரு பெரிய பங்கை கொண்டுள்ளது, மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 மில்லியன் பயணிகளைக் கையாள முடியும்.

இந்நிறுவனத்தின் இறுதி இலக்கு 90 மில்லியன் பயணிகளை கையாள்வதும், தற்போதைய மும்பை விமான நிலைய முனையம் 1 மற்றும் 2 இல் கூட்ட நெரிசலை குறைக்க உதவுவதும் ஆகும். பயணிகளுக்கு கதவுகள் திறக்கப்படுவதற்கு முன்பு, அனைத்து டிஜிட்டல் சேவைகளும் சரியாக வேலை செய்கின்றனவா என்பதை உறுதிசெய்ய விமான நிலையம் தற்போது இறுதி சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் முதல் கட்டத்தை உருவாக்க ரூ.19,650 கோடி செலவாகி உள்ளது. இந்த புதிய விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்படும் டிஜிட்டல் சேவைகள் நிச்சயமாக பயணிகளின் விமான நிலைய அனுபவம் மற்றும் விமான பயண அனுபவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் சஞ்சார் மித்ரா ஆப்: சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமானது புதிய வாடிக்கையாளர் சேவைகளை மீட்டெடுக்கவும், நெறிப்படுத்தவும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வாடிக்கையாளர் பதிவு மொபைல் ஆப் ஆன சஞ்சார் மித்ரா (Sanchar Mitra) ஆப்பை நாடு தழுவிய அளவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

புதிய சந்தாதாரர்களின் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி சரிபார்ப்புக்கு (Aadhaar-based e-KYC verification) பயன்படுத்தப்பட்ட முந்தைய சஞ்சார் ஆதார் ஆப் (Sanchar Aadhaar app) ஆனது பிஎஸ்என்எல் பொறியாளர்களால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆப் ஆனது ஒரு தனியார் விற்பனையாளரால் உருவாக்கப்பட்டது மற்றும் புதிய கனெக்ஷன்களை வழங்கும் போது, வாடிக்கையாளர் அடையாளங்களை டிஜிட்டல் முறையில் சரிபார்க்க (digitally verify customer identities) பிஎஸ்என்எல் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உரிமையாளர் கூட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டது.

சஞ்சார் ஆதார் ஆப்பின் அங்கீகரிக்கப்பட்ட வழங்குநருடனான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒப்பந்தம் ஆனது கடந்த நவம்பர் 2025 இறுதியில் காலாவதியானது. அதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளில் புதிய சிம் கார்டுகள் மற்றும் மாற்று சிம்களை வழங்குவது உட்பட வாடிக்கையாளர் பதிவு சேவைகளில் தற்காலிக இடையூறுகள் ஏற்பட்டன.

அதை உடனே சரி செய்யும் நோக்கத்தின் கீழ் தான் பிஎஸ்என்எல் நிறுவனம் சஞ்சார் மித்ரா ஆப்பை வெளியிட்டு உள்ளது. சேவைகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக அவசரகால சூழ்நிலைகளில் சஞ்சார் மித்ரா ஆப் உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக பிஎஸ்என்எல் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL will offer free WiFi services to passengers at Adani Navi Mumbai airport from December 25
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X