Home
News

Jio, Airtel-ஐ போலவே BSNL திட்டங்களின் விலைகள் உயர்த்தப்படுமா? அமைச்சர் சொன்ன அடேங்கப்பா பதில்!

ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல்லுக்கு (Airtel) அடுத்தபடியாக, இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக மாறுவதை நோக்கமாக கொண்டு, பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Ltd) ஆனது பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எடுத்துக்காட்டிற்கு, புதிதாக சேரும் வடிக்கையாளர்ளுக்கு வெறும் ரூ.1 க்கு, இலவச சிம் கார்டு உடன் 30 நாட்கள் செல்லுபடியாகும் 4ஜி பிளானின் அறிமுகம் (ஆக.31 வரை), 1 ஜிபிபிஎஸ் பிராண்ட்பேண்ட் பிளானின் மீது மாதம் ரூ.1000 தள்ளுபடி என 6 மாதங்களுக்கு ரூ.6000 டிஸ்கவுண்ட் (செப்.13 வரை) என அடுக்கிக்கொண்டே போகலாம்!

BSNL திட்டங்களின் விலைகள் உயர்த்தப்படுமா? அமைச்சர் பதில்!

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க.. இந்நிறுவனம் தனது 4ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்காக கிட்டத்தட்ட ரூ.47,000 கோடி மதிப்பிலான மூலதனச் செலவு (கேபக்ஸ் - Capital Expenditure) திட்டத்தை தயாரித்து வருகிறது. மேலும் 3 முதல் 4 லட்சம் புதிய 4ஜி சைட்களுக்கான டெண்டரையும் தயாரித்து வருகிறது.

இப்படியாக ஏற்கனவே புயல் வேகத்தில் போய்க்கொண்டு இருக்கும் பிஎஸ்என்எல் என்கிற புல்லட்டிற்கு புது எஞ்சின் ஆயிலை ஊற்றியது போல. ஜியோவும், ஏர்டெல்லும் ஒரு வேலையை பார்த்துவிட்டன. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே ரூ.249 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த பேஸிக் ப்ரீபெய்ட் திட்டங்களை திடீரெனெ நீக்கி, வாடிக்கையாளர்கள் மீது மறைமுகமான கட்டண உயர்வை அவிழ்த்துவிட்டன.

இதன் விளைவாக ஜியோ மற்றும் ஏர்டெல் கஸ்டமர்கள் "மீண்டும்" பிஎஸ்என்எல் சேவைக்குள் ஜம்ப் அடிக்க தொடங்கியுள்ளனர். ஏனென்றால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் வெறும் ரூ.141 க்கு 30 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும் திட்டம் உட்பட பல மலிவான ரீசார்ஜ்கள் உள்ளன. இந்த இடத்தில் தான் பிஎஸ்என்எல் எப்போது விலை உயர்வை அறிவிக்கும்?" என்கிற கேள்வி மேலோங்குகிறது!

ஏனென்றால் கடந்த ஜூலை 2024 இல் ஜியோ, ஏர்டெல், விஐ ஆகிய அனைத்துமே விலை உயர்வை அமல்படுத்தின. ஆனால் பிஎஸ்என்எல் எந்த விலை உயர்வையும் அறிவிக்கவில்லை. ஆனால் அதை இந்தமுறையும் எதிர்பார்க்கலாமா என்கிற கேள்வி அல்லது சந்தேகம் எழுவது - சகஜம் தான். அதற்குதான் பதில் அளித்துள்ளார் - தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர்!

தனியார் டெலிகாம் நிறுவனங்களின் கட்டண உயர்வை பிஎஸ்என்எல் பின்பற்றுமா? மணிகண்ட்ரோல் வலைதளத்தின் இந்த கேள்விக்கு பதிலளித்த பெம்மாசானி சந்திர சேகர் - கட்டணங்களை உயர்த்துவதில் பிஎஸ்என்எல் அதன் போட்டியாளர்களை பிரதிபலிக்காது (பின்பற்றாது), மாறாக மலிவு விலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

முன்னரே குறிப்பிட்டபடி, நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவைகள் - புதிய பயனர்களுக்கான என்ட்ரி லெவல் டெய்லி 1ஜிபி பிளான்களை நிறுத்தியுள்ளன. இதன் மூலம் ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் உயர்ந்துள்ளன. தனியார் நிறுவனங்களின் இந்த மாற்றம் பிஎஸ்என்எல் அதன் சந்தாதாரர் தளத்தை வளர்ப்பதற்கான வாய்ப்பை திறக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்

பிஎஸ்என்எல் ரூ.141 ரீசார்ஜ் திட்டத்தின் (BSNL Rs 141 Plan) கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? முன்னரே குறிப்பிட்டபடி இது 30 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இது டெய்லி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள் மற்றும் 200 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் 1 ஜிபிபிஎஸ் பிளான் மீதான தள்ளுபடி: இது ஃபைபர் ரூபி ஓடிடி (Fiber Ruby OTT) பிளான் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வழக்கமான விலை ரூ.4,799 ஆகும். ஆனால் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை கிடைக்கும் சலுகை காலத்தின் கீழ், பயனர்கள் இந்த திட்டத்தை முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 தள்ளுபடியுடன் (மொத்தம் ரூ.6000 தள்ளுபடி) பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL will not follow rivals Jio Airtel in raising tariffs Will continue Affordable plans Pemmasani
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X