அதிரடி அறிவிப்பு., BSNL Wi-Fi சேவை: ரூ.25-க்கு 2 ஜிபி., ரூ.150-க்கு 28 நாட்களுக்கு 28 ஜிபி டேட்டா!

|

அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறவனமான BSNL Wi-Fi சேவையானது நாடு முழுவதும் பொது இடங்களில் அமைக்கப் போகிறது. இந்த திட்டமானது ரூ.25-க்கு தொடங்கி பல்வேறு சலுகையோடு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நாடு முழுவதும் வைபை வசதி

பிஎஸ்என்எல் நாடு முழுவதும் வைபை வசதி

அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நாடு முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் பல்வேறு நகரங்களில் வைபை வசதியை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியா முழுவதும் அதிவேக இணைய இணைப்பை பரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

பொது இடங்களில் வைபை நெட்வொர்க்

பொது இடங்களில் வைபை நெட்வொர்க்

எதிர்காலத்தில் பொது இடங்கள், பூங்காக்கள், நூலகங்கள், தபால் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வைபை நெட்வொர்க்கை அமைக்க முடிவெடுத்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, அதன்படி வைபை நெட்வொர்க் நிறுவப்படும் அனைத்து இடமும் வைபை ஹாட்ஸ்பாட் மண்டலம் எனவே அழைக்கப்படும்.

டீ, காபி இல்ல., 90 நிமிடத்துக்கு முன்பாக வரனும்: இனிமே இப்படிதான்- ரயில் பயணத்துக்கான வழிமுறைகள்!டீ, காபி இல்ல., 90 நிமிடத்துக்கு முன்பாக வரனும்: இனிமே இப்படிதான்- ரயில் பயணத்துக்கான வழிமுறைகள்!

இலவசமாக ஒரு வரம்பு வரை மட்டுமே

இலவசமாக ஒரு வரம்பு வரை மட்டுமே

இந்த வைபை சேவையானது இலவசமாக ஒரு வரம்பு வரை மட்டுமே பயன்படுத்தலாம். இந்த வைபை ஹாட்ஸ்பாட்டானது வாரணாசியில் இருந்து தொடங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் வழங்கப்படும் அதிவேக இணையத்தை வைபை காலிங் வசதியை இயக்க வேண்டும் என்பது முக்கியமானது.

வைபை காலிங் வசதி

வைபை காலிங் வசதி

வைபை காலிங் வசதியை இயக்கியதற்கு பிறகு தங்களது 10 இலக்கு மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். அதன்பின் கெட் பின் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அப்படி கிளிக் செய்தவுடன் 6 இலக்கு பின் எண்ணை தங்களுக்கு வரும். இந்த பின்னை பதிவிட்டு பிஎஸ்என்எல் வைபை வசதியை இயக்கலாம். இந்த வைபை வசதியை ஆக்டிவேட் செய்தவுடன் முதல் அரை மணிநேரத்துக்கு இணையத்தை பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் வைபை கூப்பன்

பிஎஸ்என்எல் வைபை கூப்பன்

அரை மணிநேரம் முடிந்த பிறகு பிஎஸ்என்எல் வைபை கூப்பன்களை வாங்க வேண்டும். இந்த கூப்பன்களானது கிராமப்புறங்களில் மூன்று வகையாக கிடைக்கிறது. அதன்படி ரூ.25, ரூ.45, ரூ.150 ஆகிய விலையில் கிடைக்கும்.

Rural Wi-Fi திட்டங்கள்

Rural Wi-Fi திட்டங்கள்

Rural Wi-Fi திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 25 ரூபாயில் 7 நாட்கள் வரை செல்லுபடியாகும் வகையில் 2 ஜிபி டேட்டாவை தருகிறது. அதேபோல் 150 ரூபாயில் 28 நாட்களுக்கு 28 ஜிபி திட்டத்தை பெறலாம். அதேபோல் இந்த வைபை திட்டமானது நகரப்புறங்களில் சுமார் 17 திட்டங்களில் கிடைக்கிறது. அவை ரூ.10-க்கு தொடங்கி ரூ.1999 வரை கிடைக்கிறது. பிஎஸ்என்எல் வைபை திட்டம் விரைவாக நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள்

ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள்

அதேபோல் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் 4ஜி சேவையை ஏற்கனவே துவங்கி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் தளங்களை 4ஜி-க்கு மேம்படுத்த விரைவான வேகத்தில் செயல்பட்டு வருகிறது. எளிமையாக கூறவேண்டும் என்றால், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைக்காக ஒரு பெரிய திறக்கப்படாத சந்தையே காத்திருக்கிறது.

கடுமையான போட்டியை உருவாக்கும்

கடுமையான போட்டியை உருவாக்கும்

எனவே பிஎஸ்என்எல் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை உருவாக்கும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சந்தையில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தாமதமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜி மொபைல் சேவை

4ஜி மொபைல் சேவை

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி மொபைல் சேவைகளை அறிமுகப்படுத்தும்போது, மற்ற டெலிகாம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சிறப்பான திட்டங்கள் மற்றும் அடேங்கப்பா என சொல்லவைக்கும் கொண்வர முயற்ச்சி செய்யும்.

Jio Free calls: இனி கவலை வேண்டாம்., பிளான் முடிந்தாலும் இலவச அழைப்பு?Jio Free calls: இனி கவலை வேண்டாம்., பிளான் முடிந்தாலும் இலவச அழைப்பு?

புதிய 4ஜி சிம் கார்டுகள்

புதிய 4ஜி சிம் கார்டுகள்

அதேபோல் தற்போதைய (பழைய) சிம் கார்டுகள் மாற்றப்பட்டு உங்களுக்கு புதிய 4ஜி சிம் கார்டு வழங்கப்படும். பின்பு இந்த சலுகை இந்தியாவின் அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அன்று துவங்கப்பட்டது. மக்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பிஎஸ்என்எல்லில் சேர்ந்து ரூ.100-க்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் புதிய வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சிம் கார்ட் இலவசமாக வழங்கப்படுகிறது.

source: telecomtalk.info

Best Mobiles in India

English summary
BSNL wifi in public location users can enjoy in high speed internet

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X