விசில் போடு.. Jio, Airtel-ஐ போலவே இனிமேல் FREE.. BSNL சேவையில் முக்கிய மாற்றம்.. கஸ்டமர்கள் ஹேப்பி!
இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் ஆன, பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது, பிராட்பேண்ட் (Broadband) பயனர்களுக்கான இன்ஸ்டாலேஷன் கட்டணத்தை (Installation charges) ரத்து செய்து உள்ளது
அதாவது வாடிக்கையாளர்கள் அவர்கள் தேர்வு செய்யும் பிராட்பேண்ட் திட்டங்களுக்கு சந்தா கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், ஆனால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு இன்ஸ்டாலேஷன் கட்டணம் எதுவும் செலுத்து வேண்டிய அவசியம் இருக்காது. இது இந்தியாவில் உள்ள பெரும்பாலான தனியார் டெலிகாம் நிறுவனங்கள் பின்பற்றும் உத்தியோடு ஒத்துப்போகிறது.

பார்தி ஏர்டெல் (Airtel) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Jio) போன்ற இணைய சேவை வழங்குநர்கள் (ISPs), அதன் வாடிக்கையாளர்கள், நீண்ட கால திட்டத்தை (குறைந்தது மூன்று மாதங்கள்) தேர்ந்தெடுக்கும் போது, வைஃபை ரவுட்டருடன் இலவச இணைப்பு மற்றும் சேவைகளை வழங்குகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் நாடு முழுவதும் பரவலான முறையில் எப்டிடிஎச் (FTTH) என்கிற ஃபைபர்-டு-தி-ஹோம் (fiber-to-the-home) சேவையை வழங்கி வருகிறது. சமீபத்தில் மைசூரு வணிக பகுதியின் (Mysuru Business Area) எல்லைக்குள் வரும் கிராமங்களில் இலவச எப்டிடிஎச் இணைய இணைப்புகளை வழங்கவுள்ளதாகவும் கூட இந்நிறுவனம் அறிவித்தது. பாரத்நெட் (BharatNet) திட்டத்தின் கீழ், இந்த அரசின் கீழ் செயல்படும் இந்த டெலிகாம் நிறுவனம் ஆனது இலவச வைஃபை (CPE/ONT) மற்றும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை வழங்கும்.
இந்தியாவின் கிராமப்புற இளைஞர்கள் இப்போது பிஎஸ்என்எல்-இன் உதவியுடன் வேலைவாய்ப்பையும் பெறலாம். கிராமப்புற இளைஞர்கள் 'பாரத்நெட் உத்யமிகள்' (BNUs) என பதிவு செய்வதன் மூலம் பிஎஸ்என்எல் உடன் இணைந்து செயல்படலாம் மற்றும் கிராமங்களில் இணைய சேவைகளை வழங்குவதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.
இலவச இணைய இணைப்பை பெற அல்லது பாரத்நெட் தொழில்முனைவோராக பதிவு செய்ய ஆர்வமுள்ள பொதுமக்கள், தங்களுக்கு அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் ஆனது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நாட்டின் மிகப்பெரிய இணைய வணிகங்களில் ஒன்றை நடத்தி வருகிறது.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில், சந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு குறைந்துள்ளது. பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தனியார் இணைய சேவை வழங்குநர்களின் வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணமாகும். வோடபோன் ஐடியா (Vi) நிறுவனமும் தனது 'யூ பிராட்பேண்ட்' (You Broadband) பிரிவு மூலம் இத்துறையில் நுழைய முயற்சித்து வருகிறது, ஆனால் இதனால் பெரிய அளவிலான வணிகத்தை உருவாக்க முடியவில்லை.
புதிய ரூ.51 மற்றும்ரூ.249 திட்டங்கள்: பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது, முடிந்த அளவிற்கு புதிய கஸ்டமர்களை தன்பக்கம் ஈர்க்க வேண்டும் என்று தான் முயற்சிக்கிறது. சமீபத்தில் இது ரூ.51-ஐ தொடர்ந்து ரூ.249 எப்ஆர்சி ரீசார்ஜையும் (FRC Recharge) அறிமுகம் செய்து இருண்டது. இவ்விரு திட்டங்களுமே - ஏற்கனவே ஜியோ, ஏர்டெல் மற்றும் வி சேவையின் கீழ் உள்ள, அந்தந்த நெட்வொர்க்கை விரும்பாத வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கின்றன என்றே கூறலாம்.
பெயர் குறிப்பிடுவது போலவே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 மதிப்பிலான 'முதல் ரீசார்ஜ் கூப்பன்' (first recharge coupon) திட்டமானது புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமான திட்டமாகும். பிஎஸ்என்எல் இந்த ரூ.249 திட்டம் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அணுக கிடைக்கிறது என்பது கூடுதல் சுவாரசியம்.
புதிய பயனர்களுக்கான பிஎஸ்என்எல் ரூ.249 எப்ஆர்சி திட்டத்தின் நன்மைகள்: பிஎஸ்என்எல்-இன் ரூ.249 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் (Unlimited voice calling), தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) மற்றும் தினமும் 2ஜிபி டேட்டா (Daily 2GB Data) ஆகிய நன்மைகள் வழங்கப்படுகின்றன.
இதன் கீழ், இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்கு இந்த வரம்பற்ற வாய்ஸ் கால் வசதி கிடைக்கிறது. மேலும் எப்யுபி என்கிற நியாயமான பயன்பாட்டுக் கொள்கையின் (FUP) வரம்பிற்குட்பட்ட டேட்டா தீர்ந்த பிறகு (அதாவது டெய்லி 2ஜிபி டேட்டா தீர்ந்த பின்னர்), இண்டர்நெட் ஸ்பீட் ஆனது வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும். முன்னரே குறிப்பிட்டபடி இத்திட்டத்தின் வேலிடிட்டி 35 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications