Home
News

BSNL vs Vodafone Idea: ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக நன்மையை வழங்கும் நிறுவனம் எது?

வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த மாதம் 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனமும் விரைவில் 4ஜி சேவையை வழங்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனங்கள் மலிவு விலையில் பல அசத்தலான திட்டங்களை வைத்துள்ளன.

குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் மூன்று திட்டங்களை அறிமுகம் செய்தது. அதாவது ரூ.17, ரூ.57, ரூ.1999 விலைகளில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. இந்த மூன்று திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் மற்றும் வோபோன் ஐடியா நிறுவனங்கள் ரூ.1999 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளன. இதில் எந்த நிறுவனம் அதிக சலுகைகளை வழங்குகிறது என்பதை இப்போது பார்ப்போம்.

BSNLvs VI:ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்: அதிக சலுகை வழங்கும் நிறுவனம் எது

பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்:பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 600GB டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்.

இதுதவிர 30 நாட்களுக்கு பிஆர்பிடி ரிங்டோன், 30 நாட்களுக்கு ஈரோஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் 30 நாட்களுக்கு லோக்துன் கன்டென்ட் போன்ற அசத்தலான சலுகைகளை வழங்குகிறது ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்:இதுவொரு ப்ரீபெய்ட் அன்லிமிடெட் பேக் (Prepaid Unlimited Pack) ஆகும். இதன் கீழ் அன்லிமிடெட் கால்கள் (Unlimited Calls), தினமும் 1.5 ஜிபி டேட்டா (1.5 GB Daily Data), ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் (Free SMS) போன்ற நன்மைகள் கிடைக்கும்.

1.5ஜிபி என்கிற டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் 64Kbps இன்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். மேலும், தினசரி இலவச எஸ்எம்எஸ் லிமிட்டை மீறிவிட்டால், அதன் பின்னர் அனுப்பப்படும் லோக்கல் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.1 மற்றும் எஸ்டிடி எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ1.50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டம் 250 நாட்கள், அதாவது சுமார் 8 மாதங்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது.

அதாவது ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தைப் பொறுத்தவரை வோடபோன் ஐடியா நிறுவனத்தை விட பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வேலிடிட்டி கூட பிஎஸ்என்எல் நிறுவனம் தான் 365 நாட்கள் கொடுக்கிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் 4ஜி இல்லை என்பது ஒன்று தான் குறை. மற்றபடி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் தான் சிறந்தது. சரி இப்போது வோடபோன் ஐடியா அறிமுகம் செய்த ரூ.17 மற்றும் ரூ.57 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

BSNLvs VI:ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்: அதிக சலுகை வழங்கும் நிறுவனம் எது

வோடபோன் ஐடியா ரூ.17 திட்டத்தின் நன்மைகள்: இது வோடாபோன் ஐடியாவின் வவுச்சர் (Voucher) பட்டியல்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு பட்ஜெட் விலை திட்டமாகும். இது இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலாக அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) வழங்குகிறது. இருப்பினும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி வெறும் 1 நாள் மட்டுமே ஆகும். மேலும் அன்லிமிடெட் டேட்டாவை தவிர்த்து ரூ.17 ரீசார்ஜ்ஜின் கீழ் வேறு எந்த நன்மைகளும் கிடைக்காது. அதாவது இதன் கீழ் அவுட்கோயிங் கால்கள் (Outgoing Calls), எஸ்எம்எஸ் (SMS) போன்ற எந்த நன்மையும் கிடைக்காது. இது முழுக்க-முழுக்க வரம்பற்ற டேட்டா தேவையைக் கொண்டவர்களுக்கான திட்டமாகும்.

வோடபோன் ஐடியா ரூ.57 திட்டத்தின் நன்மைகள்: இதுவும் ஒரு ப்ரீபெய்ட் வவுச்சர் (Prepaid Voucher) ஆகும். மேலும் ரூ.17 திட்டத்தின் கீழ் கிடைக்கும் அதே நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இதன் வேலிடிட்டி 7 நாட்கள் அல்லது 1 வாரம் ஆகும். அதாவது இந்த பேக் மொத்தம் 168 மணி நேரம் செல்லுபடியாகும்

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL vs Vodafone Idea: Which Company Offers More Advantage in Rs.1999 Prepaid Plan? : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X