எக்கச்சக்கமான டேட்டா + OTT நன்மைகளை வழங்கும் 4 "மரண மாஸ்" பிளான்கள்!

|

எக்கச்சக்கமான ஓடிடி நன்மைகளுடன், நல்ல இன்டர்நெட் ஸ்பீட்-ஐ வழங்கும் ஒரு பிராண்ட்பேண்ட் (Broadband) பிளானை தேடிக்கொண்டு இருக்கீர்களா?

இல்லையேல், கிட்டத்தட்ட எல்லா பிராண்ட்பேண்ட் ரீசார்ஜ்களுமே ஒரே மாதிரியான நன்மைகளைத்தான் வழங்குகிறது. அதில் எதை தேர்வு செய்வது என்கிற குழப்பத்தில் உள்ளீர்களா?

சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

எந்த தேடலாக இருந்தாலும் சரி, எந்த குழப்பமாக இருந்தாலும் சரி, நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஏனெனில் 150Mbps வேகத்தின் இன்டர்நெட் சேவைகளை வழங்கும், அதே சமயம் எக்கச்சக்கமான ஓடிடி சேவைக்களுக்கான அணுகல்களை வழங்கும் "பெஸ்ட் 150Mbps பிராட்பேண்ட் பிளான்களை" பற்றி தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்.

இனி அரசாங்க சான்றிதழ்களை வாங்குவதில் கிடுக்கிபிடி; இந்திய அரசு அதிரடி!இனி அரசாங்க சான்றிதழ்களை வாங்குவதில் கிடுக்கிபிடி; இந்திய அரசு அதிரடி!

BSNL நிறுவனத்தின் 150Mbps பிராட்பேண்ட் பிளான்:

BSNL நிறுவனத்தின் 150Mbps பிராட்பேண்ட் பிளான்:

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், அதன் பாரத் ஃபைபர் கனெக்ஷன் வழியாக OTT சேவைகளுடன் கூடிய 150Mbps பிராட்பேண்ட் பிளானை வழங்குகிறது. அது BSNL SuperStar Premium Plus ஆகும். இதன் விலை மாதத்திற்கு ரூ.999 ஆகும்.

இது 150Mbps என்கிற வேகத்தின் கீழ் 2000GB அளவிலான டேட்டாவை வழங்கும், அது தீர்ந்த பின்னர், இந்த திட்டத்தின் வேகம் 10Mbps ஆக குறையும்.

ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை, இது டிஸ்னி+ ஹாட்ஸ்டார், லயன்ஸ் கேட், சோனி லிவ் மற்றும் பலவற்றை வழங்குகிறது.

Jio நிறுவனத்தின் 150Mbps பிராட்பேண்ட் பிளான்:

Jio நிறுவனத்தின் 150Mbps பிராட்பேண்ட் பிளான்:

நாட்டின் சிறந்த ISP-களில் (இன்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடர்களில்) ஒன்றான ஜியோவின் 150Mbps பிராட்பேண்ட் பிளானின் (அதாவது JioFiber பிளானின்) விலை ரூ.999 / மாதம் ஆகும்.

இந்தத் திட்டத்திற்க்கான டேட்டா வரம்பு 3300GB அல்லது 3.3TB ஆகும். இதன் கீழ் நீங்கள் 150Mbps என்கிற பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகத்தை அணுகலாம்.

தவிர அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஈரோஸ் நவ் மற்றும் பிற சேவைகளுக்கான ஓராண்டு சந்தா உட்பட மொத்தம் 15 OTT சேவைகளுக்கான சந்தாக்களை பெறலாம்

TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!

Alliance நிறுவனத்தின் 150Mbps பிராட்பேண்ட் பிளான்:

Alliance நிறுவனத்தின் 150Mbps பிராட்பேண்ட் பிளான்:

அலையன்ஸ் நிறுவனம் அதன் Cruise தொகுப்பின் கீழ் 150Mbps பிராட்பேண்ட் பிளானை வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.1000 / மாதம் ஆகும்.

இந்த திட்டத்திற்கு எந்த விதமான டேட்டா வரம்பும் இல்லை. இருப்பினும், இந்த 150Mbps தொகுப்பை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், ஆறு மாதங்களுக்கான கட்டணத்தை முன்னதாகவே செலுத்த வேண்டும்.

கூடுதலாக இந்த அலையன்ஸ் பிராட்பேண்ட் 150எம்பிபிஎஸ் திட்டமானது மூன்று மாத அமேசான் பிரைம் மற்றும் ஈரோஸ் நவ், ஜீ5 பிரீமியம், சோனி லிவ் மற்றும் பல OTT சேவைகளுக்கான அணுகலையும் வழங்கும்.

ACT நிறுவனத்தின் 150Mbps பிராட்பேண்ட் பிளான்:

ACT நிறுவனத்தின் 150Mbps பிராட்பேண்ட் பிளான்:

பெங்களூரை சேர்ந்த ISP ஆன ஆக்ட் நிறுவனம், ACT Blaze என்கிற பெயரின் கீழ் 150Mbps அன்லிமிடெட் டேட்டா திட்டத்தை வழங்குகிறது.

இந்நிறுவனத்தின் அதிநவீன ஃபைபர் தொழில்நுட்பத்திற்கு நன்றி, ஏனெனில் இது சரிக்கு சமமான பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகத்தை வழங்குகிறது.

இதன் விலை ரூ.1,085 / மாதம் ஆகும். இந்த திட்டத்தின் டேட்டா வரம்பு 1500ஜிபி ஆகும், அதை "மீறும்" போது இணையத்தின் வேகம் 1 எம்பிபிஎஸ் ஆக குறைகப்படும்.

ஓவர்-தி-டாப் (OTT) நன்மைகளை பொறுத்தவரை, இது Sony Liv, Zee5 மற்றும் சில ஓடிடி நன்மைகளை வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BSNL vs Jio vs ACT 2022 Top Best 150 Mbps Broadband Plans with OTT Benefits

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X