Home
News

BSNL vs Jio: வெறும் ரூ. 247 விலையில் 50ஜிபி டேட்டா வேண்டுமா? அப்போ இந்த திட்டத்தைப் பாருங்கள்..

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ மற்றும் அரசு நடத்தும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL ஆகியவை குறைந்த விலையில் பல சிறந்த திட்டங்களை மக்களுக்காக வழங்குகின்றது. இந்த பதிவில் இன்று நாங்கள் உங்களுக்கு ஜியோ மற்றும் BSNL நிறுவனங்களின் கீழ் கிடைக்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் ரூ. 250 விலைக்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஒரு திட்டத்தைப் பற்றிக் கூறப் போகிறோம். உண்மையில் மலிவு விலையில் சிறந்த நன்மைகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும்.

மக்களின் கவனம் இப்போது இதன் மீது தான் இருக்கிறதா?

மக்களின் கவனம் இப்போது இதன் மீது தான் இருக்கிறதா?

சில வருடங்களுக்கு முன்பு, மக்கள் ரீசார்ஜ் செய்யும் போது, எந்த திட்டம் அதிக டாக் டைம் நேரத்தை வழங்குகிறது, எவ்வளவு காலம் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது மற்றும் எவ்வளவு SMS நன்மையை அந்த திட்டம் வழங்குகிறது என்பதை மட்டுமே கருத்தில்கொண்டு ரீசார்ஜ் செய்ய முன்வந்தனர். ஆனால், இப்போது மக்களின் முழு கவனமும் எந்த திட்டம் எவ்வளவு டேட்டா நன்மையை வழங்குகிறது என்பதை மட்டுமே உன்னிப்பாகக் கவனிக்கிறது. குறைந்த விலையில் அதிக டேட்டா கிடைத்தால் மக்கள் அந்த திட்டங்களையே ரீசார்ஜ் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஜியோ ரீசார்ஜ் மக்களை ஈர்த்ததற்கான காரணம் என்ன தெரியுமா?

ஜியோ ரீசார்ஜ் மக்களை ஈர்த்ததற்கான காரணம் என்ன தெரியுமா?

அப்படி மக்களின் கவனத்தை ஈர்த்த நிறுவனம் தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். குறைந்த விலையில் அதிக டேட்டா பயனை வழங்கி தனது சேவையைக் குறைந்த காலகட்டத்திற்குள் முழு நாட்டிலும் விரைவாகப் பறந்து விரிந்துள்ளது. இதற்கு நிகராக நாட்டில் குறைந்த விலையில் அதிக டேட்டா வழங்கும் நிறுவனம் என்றால், அது அரசு நடத்தும் BSNL நிறுவனமாகத் தான் இருக்க முடியும். இந்தியாவில் உள்ள மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சிறந்த டேட்டா பலனை வழங்குகிறது. இருப்பினும் BSNL கூடுதலாக வழங்குகிறது. சரி, இப்போது இந்த இரண்டு நிறுவனங்களில் எந்த நிறுவனம் அதிக நன்மையை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 247 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ. 247 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ. 247 ரீசார்ஜ் திட்டமானது தினசரி வரம்பு ஏதுமின்றி 50 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. அதாவது ஒருவர் எப்போது வேண்டுமானாலும் இந்த முழு 50 ஜிபி தரவையும் பயன்படுத்திக்கொள்ளலாம். வழங்கப்பட 50 ஜிபிக்கு பிறகு இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆகக் குறைகிறது. மேலும், இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது தவிர, பயனர்கள் நாட்டில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். BSNL ரூ.247 ரீசார்ஜ் திட்டம் ஒரு நாளைக்கு 100 SMS உடன் வருகிறது.பயனர்களுக்கு இலவச ஈரோஸ் நவ் சந்தாவும் வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ 249 திட்டம்

ஜியோ ரூ 249 திட்டம்

ஜியோ ரூ.249 திட்டம் 23 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. டேட்டா நன்மைகளைப் பொறுத்த வரையில், இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி அதிவேக இணைய டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன், ஜியோ தனது பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. மேலும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாகக் கிடைக்கும். இந்த ரீசார்ஜ் மூலம், அதன் பயனர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலும் கிடைக்கிறது. இதில் ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் பல இலவச அணுகல் அடங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 247 vs ஜியோ ரூ. 249 திட்டம்: எது சிறந்தது?

பிஎஸ்என்எல் ரூ. 247 vs ஜியோ ரூ. 249 திட்டம்: எது சிறந்தது?

  • BSNL ரூ. 247 ரீசார்ஜ் திட்டத்தில், டேட்டாவிற்கு தினசரி வரம்பு இல்லை. ஜியோ ரூ. 249 ரீசார்ஜ் திட்டம், மறுபுறம், அதிவேக டேட்டாவை ஒரு நாளைக்கு 2 ஜிபியாகக் குறைக்கிறது. 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன், அதிவேக டேட்டாவை அனுபவிக்க அடுத்த நாள் வரை பயனர்கள் காத்திருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.
  • பிஎஸ்என்எல்லின் ரூ. 247 ரீசார்ஜ் திட்டம் மொத்தம் 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஜியோவின் ரூ. 249 ரீசார்ஜ் திட்டம் மொத்தம் 46 ஜிபி டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • வேலிடிட்டி மற்றும் இணைய வேகம்

    வேலிடிட்டி மற்றும் இணைய வேகம்

    • பிஎஸ்என்எல் ரூ. 247 திட்டம் மலிவானது மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. அதேசமயம் ஜியோவின் ரூ. 249 ரீசார்ஜ் திட்டம் சற்று விலை அதிகம் மற்றும் வெறும் 23 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.
    • ரூ. 249 ரீசார்ஜ் திட்டத்தில் ஜியோ 4ஜி வேகத்தை அனுபவிக்க முடியும், அதே நேரத்தில் பிஎஸ்என்எல் 3ஜி மற்றும் 2ஜி வேகத்தை மட்டுமே வழங்கும்.
    • 3ஜி இணைய வேகம் போதுமா? BSNL எப்போது 4ஜி துவங்கும்?

      3ஜி இணைய வேகம் போதுமா? BSNL எப்போது 4ஜி துவங்கும்?

      3ஜி இணைய வேகத்தில் நீங்கள் திருப்தி அடைந்தால், ஜியோ ரீசார்ஜ் திட்டத்தை விட BSNL ரூ. 247 ரீசார்ஜ் திட்டம் எல்லா வகையிலும் சிறந்தது. ஜியோவின் 4G வேகம் நாட்டில் எல்லா இடங்களிலும் கிடைக்காது, மேலும் இது பல பயனர்களால் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. BSNL மிகவும் குறைந்த விலையில் அதிக டேட்டா பயனை வழங்குவதற்கு ஒரு முக்கிய காரணம், நிறுவனம் இன்னும் 3ஜி இல் செயல்படுகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 4ஜி சேவையை துவங்கும் என்று BSNL நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Vs Jio Cheapest Monthly Recharge Plan In Less Than Rs 250 Offering 50GB Data : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X