Home
News

இனிமேல் இப்படியும் போன் பேசலாம்.. நெட்வொர்க் சிக்கலுக்கு குட்பை.. வந்துவிட்டது BSNL VoWi-Fi காலிங் சேவை!

பான் இந்தியா அடிப்படையிலான அறிமுகமான 4ஜி சேவை மற்றும் இந்தியா முழுவதுமான இசிம் சேவையை தொடங்கியது எல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற படியாக, இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஆனது இன்னொரு புதிய சேவையை விரிவுபடுத்தி உள்ளது.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்கிற பிஎஸ்என்எல் ஆனது மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதன் வைஃபை காலிங் (BSNL Wi-Fi Calling) சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. வைஃபை காலிங் சேவையானது வோவைஃபை காலிங் (BSNL VoWi-Fi Calling) என்றும் அழைக்கப்படுகிறது.

இனி இப்படியும் போன் பேசலாம்.. வந்துவிட்டது BSNL VoWi-Fi காலிங் சேவை!

வோவைஃபை என்றால் வாய்ஸ் ஓவர் வை-ஃபை காலிங் (Voice over Wi-Fi Calling) என்று அர்த்தம். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இந்த சேவையை வழங்கி வருகின்றன, இப்போது பிஎஸ்என்எல் நிறுவனமும் கூட இந்த போட்டியில் இணைந்துள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி பிஎஸ்என்எல் அதன் புதிய சேவைகளை விரைவாக அறிமுகப்படுத்தி வருகிறது; அதன் நெட்வொர்க் சேவைகளையும் மேம்படுத்தி வருகிறது.

வோவைஃபை அல்லது வாய்ஸ் ஓவர் வைஃபை காலிங் என்றால் என்ன? இது வழக்கமான செல்லுலார் நெட்வொர்க்கிற்கு பதிலாக வைஃபை நெட்வொர்க்கில் அழைப்புகளை செய்ய மற்றும் பெற அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். இது மோசமான மொபைல் சிக்னல் அல்லது நெட்வொர்க் இல்லாத பகுதிகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த சேவை - உங்களுடைய தற்போதைய மொபைல் நம்பர் மற்றும் உங்கள் டெலிகாம் நிறுவனத்தின் நிலையான அழைப்பு கட்டணங்களின் கீழ் வேலை செய்யும். இது உங்கள் இண்டர்நெட் கனெக்ஷனை பயன்படுத்தி அழைப்பை 'ரூட்' செய்கிறது. இது - கட்டிடத்தின் அடித்தளங்கள், பெரிய கட்டிடங்கள் அல்லது தொலைதூர இடங்கள் போன்ற இடங்களில் சிறந்த அழைப்பு தரத்தையும் மிகவும் நம்பகமான இணைப்பையும் வழங்கும்.

சமீபத்தில் தான் பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது இந்தியா முழுவதுமான 4ஜி சேவைகளை அறிமுகம் செய்து இருந்தது. பின்னர் டாடா கம்யூனிகேஷன்ஸுடன் இணைந்து இந்தியா முழுவதுமான இசிம் சேவைகளையும் அறிமுகப்படுத்தி இருந்தது. இப்போது பிஎஸ்என்எல் இன் வெள்ளி விழாவை கொண்டாடும் விதமாக, பிஎஸ்என்எல் இன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராபர்ட் ஜே ரவி, மேற்கு மற்றும் தெற்கு மண்டல வட்டங்களில் பிஎஸ்என்எல் வோவைஃபை சேவைகளின் அறிமுகத்தை உறுதிப்படுத்தி உள்ளார்.

பான் இந்தியா இசிம் சேவைகளை பொறுத்தவரை டாடா கம்யூனிகேஷன்ஸ் ஆனது அதன் அதிநவீன, ஜிஎஸ்எம்ஏ (GSMA) அங்கீகாரம் பெற்ற இசிம் சந்தா மேலாண்மை தளம் (eSIM Subscription Management Platform) ஆன டாடா கம்யூனிகேஷன்ஸ் மூவ் (Tata Communications MOVE) மூலம் பிஎஸ்என்எல்-ன் இசிம் சேவையை மேம்படுத்தும்

அதாவது இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இசிம் சேவையை வழங்க பிஎஸ்என்எல் இந்த தளத்தை பயன்படுத்தும். இதுவரை, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இசிம் சேவைகளை வழங்கி வந்தன. சுவாரசியமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இசிம் ஆனது 2ஜி (2G), 3ஜி (3G) மற்றும் 4ஜி (4G) நெட்வொர்க் பயனர்களுக்கு வேலை செய்யும்.

இசிம் சேவை ஆனது பிஸிக்கல் சிம் கார்டுகளுக்கான தேவையை நீக்குகிறது. இசிம் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன்களில் நேரடியாக உட்பொதிக்கப்படும் இசிம் ஆனது எளிதான ஆக்டிவேஷன், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஒரே டிவைஸில் மல்டிபிள் ஆபரேட்டர் ஃப்ரொபைல்களை ஹோஸ்ட் செய்யும் திறனை உறுதியளிக்கிறது.

சாட்காம் (Satcom) துறையிலும் கூட பிஎஸ்என்எல் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. எலான் மஸ்க்கின் (ElonMusk) ஸ்டார்லிங்க் (Stralink), பார்தி குழுமத்தால் (Bharti Group) ஆதரிக்கப்படும் யூடெல்சாப் ஒன்வெப் (Eutelsab OneWeb) மற்றும் ரிலையன்ஸ் (Reliance) ஆதரவின் கீழான ஜியோ-எஸ்இஎஸ் (Jio-SES) போன்ற நிறுவனங்கள் கூட இன்னும் சாட்காம் சேவைகளை தொடங்கவில்லை

ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனமானது ஏற்கனவே அரசு நிறுவனங்களுடன் சேர்ந்து இந்தியாவில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் மூலோபாய பயனர்களுக்கு செயற்கைக்கோள் இணைப்பு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனமானது , ஸ்பெக்ட்ரம் கட்டணங்களாக ஏஜிஆர்-இல் (அதாவது சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில்) 1% செலுத்துகிறது.

இதில் இன்னொரு சுவாரசியமானவிஷயம் என்னவென்றால் பிஎஸ்என்எல்-க்கு மிக குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் (Spectrum) வழங்கப்படுகிறது. ஆக அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனம் மிகக் குறைந்த விலையில் சாட்காம் சேவைகளை வழங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL VoWiFi Calling OR WiFi Call Services Launched in West and South Zone Circles
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X