BSNL உங்கப்பன் விசில கேட்டவன்! மாசம் ரூ.146 போதும் 90 நாள் வேலிடிட்டி! ஒரே ரீசார்ஜ் Jio, Airtel ரெண்டும் காலி!
ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களை பார்த்து "போங்க தம்பி.. நாங்கல்லாம் அப்போவே அப்படி!" என்று கூறும்படியாக, அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ஒரு பிளான் உள்ளது. டிராய் (TRAI) வழிகாட்டுதல்களுக்கு இணங்க, சில தினங்களுக்கு முன்னர் தான் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தத்தம் ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை அறிமுகப்படுத்தின.
ஜியோவின் என்ட்ரி லெவல் வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டமானது ரூ.448 முதலும் ஏர்டெலுடையது ரூ.469 முதலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திடம் இதை விட மலிவான விலைக்கு ஏற்கனவே ஒரு வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்களுக்கு பிஎஸ்என்எல் தான் முன்னோடி!

நாம் இங்கே பேசுவது பிஎஸ்என்எல்-ன் ரூ.439 திட்டத்தை பற்றித்தான். இப்போதைக்கு இதுதான் இந்தியாவிலேயே மிகவும் மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி அல்லது சிம் ஆக்டிவ் திட்டமாகும். 90 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
ஜியோவின் ரூ.448 உடன் ஒப்பிடும் போது பிஎஸ்என்எல்-ன் ரூ.439 ஆனது ரூ.9 மலிவானதாக இருக்கிறது. அதே சமயம் ஏர்டெல்லின் ரூ.469 ஆனது ரூ.30 மலிவானதாக உள்ளது. அதுமட்டுமின்றி ஜியோ மற்றும் ஏர்டெல்லின் இவ்விரு திட்டங்களும் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகின்றன. ஆனால் பிஎஸ்என்எல்-ன் ரூ.439 ஆனது முழுதாக 90 நாட்கள் என்கிற வேலிடிட்டியை கொண்டுள்ளது.
இருப்பினும் இலவசமாக கிடைக்கும் எஸ்எம்எஸ்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே பிஎஸ்என்எல்-ஐ தூக்கி சாப்பிட்டு விடுகின்றன. ஜியோவின் ரூ.448 மற்றும் ஏர்டெல்லின் ரூ.469 ஆகிய இரண்டுமே முறையே 900 எஸ்எம்எஸ்கள் மற்றும் 1000 எஸ்எம்எஸ்களை வழங்குகின்றன. அதாவது பிஎஸ்என்எல்-ஐ விட 700 எஸ்எம்எஸ்கள் வரையிலாக அதிகமாக வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.469 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும் (மாதாந்திர செலவு ரூ.156). கூடுதலாக ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸும் கிடைக்கும்.
ஜியோ ரூ.448 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ரூ.448-ன் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல்களை வழங்கும்
ஏர்டெல் ரூ.1849 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும் (மாதாந்திர செலவு ரூ.154). கூடுதலாக ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸும் கிடைக்கும்.
ஜியோ ரூ.1748 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ரூ.1748-ன் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல்களை வழங்கும்.


Click it and Unblock the Notifications








