BSNL-க்கு மினிமம் ரீசார்ஜ்.. ரூ.59-க்கு இருக்கு.. அடிமட்ட ரேட்ல கால்கள்.. நாங்க அப்பவே அப்படி.. கம்மி இல்லங்க!
டிராய் (TRAI) என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது உத்தரவிட்ட பிறகே ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டும் அடங்கிய திட்டங்களை கொடுக்கின்றன. ஆனால், இதை பிஎஸ்என்எல் ஏற்கனவே செய்துவருகிறது. வெறும் ரூ.59 முதல் ரீசார்ஜ் திட்டங்கள் இருக்கின்றன. வாய்ஸ் கால்களுக்கு மட்டும் கிடைக்கும் சில அடிமட்ட விலையிலான திட்டங்கள் இதோ.
இதைவிட கம்மி இல்லைங்க என்று அடித்து சொல்லும்படி இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்கள் வாய்ஸ் கால் சலுகைக்கு பிரத்யேகமாக கிடைத்தாலும், ஒரு சிலவற்றில் டேட்டா சலுகையும் கொஞ்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரூ.200-க்குள் இருக்கும் 5 திட்டங்களின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பிஎஸ்என்எல் ரூ 59 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 59 Prepaid Plan): இந்த திட்டம் அடிமட்ட ரேட்டில் தொடங்கும் முதல் திட்டமாகும். ஆகவே, வெறும் ரூ.59 இருந்தால் போதும் 7 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் (Roaming Voice) சலுகைகள் கிடைக்கும். 1 ஜிபி டேட்டா வருகிறது.
பிஎஸ்என்எல் ரூ 99 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 99 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 17 நாட்களுக்கு வேலிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் சலுகைகள் வருகிறது. இதில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற மற்ற சலுகைகள் கிடையாது. முழுவதும் வாய்ஸ் கால்களை மட்டுமே கொடுக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 118 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 118 Prepaid Plan): இந்த வாய்ஸ் திட்டத்திலும் முந்தைய திட்டங்களை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகள் கிடைக்கிறது. ஆனால், 20 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். தினசரி டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா இதில் கிடைக்கிறது.
ஆகவே, வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், 10 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. வாய்ஸ் கால்களுடன் டேட்டாவும் வேண்டுமானால், இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இதற்கு அடுத்து ரூ 147 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் மாதாந்திர வேலிடிட்டி தொடங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ 147 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 147 Prepaid Plan): முந்தைய திட்டங்களை போலல்லாமல், 30 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, மற்ற டெலிகாம் நிறுவனங்கள் கொடுக்கும் விலையை விட மலிவான விலைக்கே இந்த ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது என்பது தெரிகிறது. இந்த 30 நாட்களில் 10 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம்.
இந்த 10 ஜிபிக்கு பிறகு வழக்கம்போல 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கும். வாய்ஸ் கால்களை பார்க்கையில் அன்லிமிடெட் எஸ்டிடி, ரோமிங் மற்றும் லோக்கல் கால்களை செய்து கொள்ளலாம். இதற்கு அடுத்து ரூ 187 விலையில் திட்டம் இருக்கிறது. ரூ.200 பட்ஜெட்டில் அதிக விலை கொண்ட வாய்ஸ் திட்டமாக இந்த ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 187 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 187 Prepaid Plan): இந்த திட்டம் கூடுதல் விலைக்கு கிடைத்தாலும் 28 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கொடுக்கிறது. ஏனென்றால், இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா மட்டுமல்லாமல் எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ், 10 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








