Finally அது நடந்துருச்சு.. இனி BSNL, Vodafone Idea கஸ்டமர்களை கையில் பிடிக்க முடியாதே.. வருது 3 மாற்றங்கள்!
சிலர் "இப்படி ஒரு நியூஸ் வரும்னு எனக்கு முன்னாடியே தெரியும்" என்று யூகித்து இருக்கலாம். சிலர் "இது எப்படி வொர்க் அவுட் ஆகும்?" என்று ஷாக் ஆகலாம். விஷயம் என்னவென்றால் - இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமும், தனியார் டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் ஐடியாவும் (Vi -Vodafone Idea) கூட்டு சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டவர், ஃபைபர், ஸ்பெக்ட்ரம் - வருது 3 மாற்றங்கள்: பிஎஸ்என்எல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகிய இரண்டும் - இனிமேல் தங்கள் நெட்வொர்க்குகளை உருவாக்கும் விதத்தை மாற்றக்கூடிய ஒரு கூட்டாண்மையை ரகசியமாக ஆராய்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மின்ட் (Mint) பத்திரிகையின் அறிக்கையின்படி, இவ்விரு நிறுவனங்களும் டவர்களை மட்டுமல்லாமல், ஃபைபர் மற்றும் "ஒருவேளை" ஸ்பெக்ட்ரத்தையும் கூடப் பகிர்ந்துகொள்வது குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக - இவ்விரு டெலிகாம் நிறுவனங்களுமே - இதற்கு மேல் வேறு வழியில்லை என்கிற மிகவும் அவசியமான சூழ்நிலையில் மட்டுமே செய்ய கூடிய கட்டத்திற்குள் நுழைகின்றன. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களிடம் பயனாளர்களை இழந்த பிறகு, வோடாபோன் ஐடியா நிறுவனமானது தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையிலும், தனது நெட்வொர்க்கை மேம்படுத்துவதற்காக ரூ.45,000 கோடி மதிப்பிலான திட்டத்தை வகுத்து வரும் வேளையிலும் இந்த "கூட்டணி" நிகழ்ந்துள்ளது.
இதற்கிடையில், பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் மும்முரமாக உள்ளது, ஆனால் நகர பகுதிகளில் இந்த சேவை இன்னுமும் பின்தங்கியே உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் 5ஜி சேவை இன்னும் முழுமையாக தயாராகவில்லை. 5ஜி விஷயத்தில் வோடாபோன் ஐடியாவின் நிலையும் "ஆஹா ஓஹோ" என்கிற அளவிற்கு இல்லை. ஆக மொத்தம் இரண்டு நிறுவனங்களும் (பிஎஸ்என்எல் மற்றும் வி) விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆனால் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை போல செலவு செய்வதற்கு பட்ஜெட் இல்லை!
எனவே, தனித்தனியாக எல்லாவற்றையும் இரண்டு முறை உருவாக்குவதற்கு பதிலாக, பகிர்ந்துகொள்வதே இப்போதைக்கு சிறந்த வழியாக தெரிகிறது. பிஎஸ்என்எல் கிராமப்புற மற்றும் ஓரளவு நகர்ப்புற பகுதிகளில் ஆழமான அணுகலை கொண்டுவருகிறது, அதே நேரத்தில் வி நிறுவனம் நகரங்களில் வலுவான இருப்பை கொண்டுள்ளது.
இப்படியான 2 நிறுவனங்களை ஒன்றிணைப்பதன் மூலம், இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆனது பெரிய அளவிலான முதலீடு இல்லாமல் அதிக பரப்பளவை உள்ளடக்க தொடங்கலாம். பேக்-எண்ட் கெப்பாசிட்டியை மேம்படுத்துவதன் மூலம், ஃபைபர் ஷேரிங் வழியாக அன்ஸ்டேபிள் டேட்டா என்கிற என்ற மிகவும் எரிச்சலூட்டும் பிரச்சினை அமைதியாக சரிசெய்யக்கூடும். ஸ்பெக்ட்ரம் ஷேரிங் ஆனது உண்மையில் நடந்தால், ஒரு படி மேலே சென்று, இரு நிறுவனங்களும் தங்கள் அலைவரிசைகளை மிகவும் திறமையாக பயன்படுத்த அனுமதிக்கும்.
OPINION: மேலோட்டமாக பார்த்தால் எல்லாமே பக்காவான மாஸ்டர் பிளானை போல தோன்றும். ஆனால் நிச்சயமக இதெல்லாமே ஒரு உடனடி தீர்வாக இருக்காது. வெளியான மின்ட் அறிக்கையானது, இந்த கூட்டணி தொலைத்தொடர்பு துறையால் (Department of Telecommunications) இன்னும் உன்னிப்பாக மதிப்பீடு செய்ய வேண்டிய ஒன்று என்று குறிப்பிடுகிறது. ஆக இது இரவோடு இரவாக நடக்கப்போவதில்லை!
குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஷேரிங் - கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் உண்மையில் இது மிகவும் சிக்கலானது, இதை சரியாக செயல்படுத்த அதிக நேரம் எடுக்கும். ஆனால் இதெல்லாம் நிறுவனங்களுக்கான தலைவலிகள். பயனர்களின் பக்கத்தில் நின்று பார்த்தால், மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் வந்தால், அவைகள் படிப்படியாகவே வந்தாலும் கூட - வாடிக்கையாளர்களுக்கு நல்லது தான்!
குறிப்பாக - சீரற்ற இணைப்புகள் குறைவது, அதிக நிலையான டேட்டா, வழக்கமான பெருநகர பகுதிகளுக்கு அப்பால் 5ஜி சேவையின் பரவலான விநியோகம் போன்றவைகள் - வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் முக்கியமான வேலைகளை செய்யும். முன்னரே குறிப்பிட்டபடி முதல் நாளிலேயே பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது, ஆனால் காலப்போக்கில் கவனிக்கத்தக்கதாக இருக்கும்.
இன்றைய தேதிக்கு நீங்கள் ஒரு நெட்வொர்க்கை தேர்வு செய்கிறீர்கள் என்றால், வேகம் மற்றும் நம்பகத்தன்மை அடிப்படையில் ஜியோ அல்லது ஏர்டெல் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யலாம். ஆனால் நீங்கள் ஏற்கனவே ஒரு விஐ யூசராக இருந்தால் அல்லது பிஎஸ்என்எல் கஸ்டமராக இருந்தால், இவ்விரு நிறுவனங்களின் கூட்டணியும் (அமைந்தால்) - திரைக்கு பின்னால் இருந்தபடியே - உங்கள் அன்றாட அனுபவத்தை மெதுவாக மேம்படுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!


Click it and Unblock the Notifications








