Home
News

இந்தாங்க வச்சிக்கோங்க.. BSNL சிம் கார்டு கஸ்டமர்களுக்கு புதிய இலவச சேவை.. என்னது?

பிஎஸ்என்எல் (BSNL) என்கிற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது தனது மொபைல் சந்தாதாரர்களுக்கு, கனெக்டிவிட்டி தொடர்பான ஒரு பெரிய மேம்படுத்தலை வழங்கியுள்ளது. அது வோவைஃபை (VoWiFi) என்கிற வாய்ஸ் ஓவர் வைஃபை காலிங் (Voice over Wi-Fi calling) செய்வதற்கான ஆதரவு ஆகும்

தற்போது இந்த வசதி இது நாடு முழுவதும் அணுக கிடைக்கிறது. அதாவது வைஃபை இணைப்பு கிடைக்கும் வரை, பலவீனமான அல்லது மொபைல் நெட்வொர்க் இல்லாத பகுதிகளில் இருந்தாலும் கூட, பயனர்களால் இப்போது வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்-ஐ மேற்கொள்ளலாம் மற்றும் பெறலாம்.

BSNL சிம் கார்டு கஸ்டமர்களுக்கு புதிய இலவச சேவை.. என்னது?

வோவைஃபை என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது? வோவைஃபை அல்லது வைஃபை காலிங் என்பது "பாரம்பரியமான" மொபைல் டவர்களை (Mobile Towers) மட்டுமே நம்புவதற்கு பதிலாக, வாய்ஸ் கால்கள் மற்றும் மெசேஜ் களை அனுப்ப வைஃபை நெட்வொர்க்கை பயன்படுத்த அனுமதிக்கிறது.

இந்த தொழில்நுட்பம் ஒரு ஐபி- அடிப்படையிலான அமைப்பு (IP based system - IMS) மூலம் செயல்படுகிறது, இது வைஃபை மற்றும் மொபைல் சிக்னல்களுக்கு இடையில் தடையின்றி கைமாறுகிறது, உங்கள் அழைப்பு தரம் (call quality) தெளிவாகவும், நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் ஸ்மார்ட்போன் வைஃபை காலிங்கை ஆதரிக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். மிக சமீபத்திய ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் மாடல்கள் இந்த ஆதரவை ஏற்கனவே கொண்டுள்ளன. உங்கள் ஹோம் பிராட்பேண்ட், ஒரு கஃபே ஹாட்ஸ்பாட் அல்லது பிஎஸ்என்எல்லின் சொந்த பாரத் ஃபைபர் சேவை என எந்த வைஃபை நெட்வொர்க்குடனும் உங்கள் ஸ்மார்ட்போனை இணைக்கவும்.

உங்கள் ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் செட்டிங்ஸ்-ல் வைஃபை காலிங் விருப்பத்தை இயக்கவும். அது இயக்கப்பட்டதும், மொபைல் சிக்னல் வலிமை குறைவாக இருக்கும் போதெல்லாம், நேட்டிவ் டயலர் தானாகவே வாய்ஸ் கால்களுக்கு வைஃபை-ஐ பயன்படுத்தும். இதற்காக கூடுதல் ஆப் அல்லது மூன்றாம் தரப்பு சாஃப்ட்வேர் என எதுவும் தேவையில்லை.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த வெளியீடு குறிப்பாக மொபைல் நெட்வொர்க் சிக்கல்களால் அடிக்கடி போராடும் மக்களுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும்: குறிப்பாக அடித்தளங்கள், தடிமனான சுவர் வீடுகள் மற்றும் மொபைல் சிக்னல்கள் அரிதாகவே ஊடுருவும் அலுவலக கட்டிடங்களில், கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில்!

மேலும் மொபைல் டவர்கள் நிலையான கவரேஜை வழங்க போராடும் இடங்களில், மேலும் செல்லுலார் நெட்வொர்க்குகள் நெரிசலாக இருக்கும் பரபரப்பான பகுதிகளிலும் வேலை செய்யும். பயனர்கள் நிலையான வைஃபை உடன் இணைக்கப்பட்டிருக்கும் வரை, அவர்கள் மென்மையான கால் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்புதலை அனுபவிப்பார்கள் - பாரம்பரிய செல் சேவை கணிக்க முடியாததாக இருக்கும் மண்டலங்களில் கூட இது சாத்தியம்.

இந்த சேவையை பயன்படுத்துவதற்கு கூடுதல் கட்டணம் இல்லை. வைஃபை மூலம் செய்யப்படும் அழைப்புகள் வழக்கமான மொபைல் அழைப்புகளை போலவே நிலையான குரல் அழைப்பு கட்டணங்களில் வசூலிக்கப்படுகின்றன. இது சேவையை அணுகக்கூடியதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் வைத்திருக்கிறது.

இந்த அம்சம் இப்போது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது, இது பிஎஸ்என்எல், அதன் நெட்வொர்க்கை நவீனமயமாக்குவதற்கும் மிகவும் நம்பகமான தகவல் தொடர்பு அனுபவத்தை வழங்குவதற்கும் ஒரு பெரிய படியை குறிக்கிறது.

பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இது ஏன் முக்கியமானது? இந்த நாடு தழுவிய வெளியீட்டின் மூலம்,பிஎஸ்என்எல் பயனர் அனுபவத்தை கணிசமாக மேம்படுத்துகிறது - இறுதியாக பல ஆண்டுகளாக வைஃபை காலிங்கை வழங்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பிஎஸ்என்எல் நிறுவனமும் இணைகிறது. குறைவான துண்டிப்பு அழைப்புகள், தெளிவான குரல் தரம் மற்றும் தடையற்ற உரையாடல்களை உறுதி செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Users No Need to Worry About Weak Signal or No Signal Use VoWiFi Calling For Free
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X