Home
News

BSNL அதிரடி.. பழைய 2G, 3G சிம் கார்டுகளை மாத்தணும்.. முக்கியமா ஈரோடு, திருநெல்வேலி BSNL கஸ்டமர்ஸ்! ஏன்னா?

நீங்கள் ஈரோடு (Erode) மற்றும் திருநெல்வேலி (Tirunelveli) மாவட்டத்தில் உள்ள பிஎஸ்என்எல் (BSNL) வாடிக்கையாளர்களாக இருந்தால் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் (Tamil Nadu) எந்தவொரு மாவாட்டத்தில் இருக்கும் பிஎஸ்என்எல் 2ஜி அல்லது 3ஜி பயனராக இருந்தாலும் சரி, இந்த தகவல் உங்களுக்கும் பயனளிக்கும்!

பிஎஸ்என்எல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது ஈரோடு வணிகப் பகுதி (Erode Business Area) மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடிய விரைவில் 4ஜி சேவையை (4G Service) தொடங்கும் என்கிற தகவல் தி ஹிந்துவின் சமீபத்திய அறிக்கையின் வழியாக கிடைத்துள்ளது.

BSNL அதிரடி.. பழைய 2G, 3G சிம் கார்டுகளை மாத்தணும்!

மேலும் ஈரோடு மற்றும் திருநெல்வேலியில் உள்ள வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்-ன் மேம்படுத்தப்பட்ட சேவைகளை அனுபவிக்க, தங்களின் தற்போதைய பிஎஸ்என்எல் 2ஜி அல்லது 3ஜி சிம் (BSNL 2G / 3G SIM) கார்டுகளை 4ஜி சிம் கார்டுகளாக (4G SIM Card) மாற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

எந்தெந்த பகுதிகளில் பிஎஸ்என்எல் 4ஜி கிடைக்கும்? கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, ஈரோடு வருவாய் மாவட்டம், திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்கும். இதற்காக ஈரோடில் தற்போதுள்ள 324 டவர்கள், 2ஜி/3ஜி-யில் இருந்து 4ஜி-க்கு மேம்படுத்தப்பட்டுள்ளது; மேலும் குறைவான கவரேஜ் உள்ள பகுதிகளில் கூடுதல் டவர்கள் நிறுவப்படவுள்ளது.

திருநெல்வேலியை பொறுத்தவரை, அங்கே தற்போதுள்ள 309 டவர்களும் 10 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பயன்படுத்தி 4ஜிக்கு மேம்படுத்தப்படும். மேலும், திருநெல்வேலி இயக்கப் பகுதியில் கூடுதலாக 46 புதிய 4ஜி டவர்களை நிறுவவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது; இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தின் மொபைல் கவரேஜ் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பழைய பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை 4ஜி சிம் ஆக மாற்றுவது எப்படி? பிஎஸ்என்எல்-ன் அதிவேக 4ஜி இணைய சேவைகளை பெற, வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போன்களில் 4ஜி-எனேபிள்டு சிம் கார்டுகள் பொருத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதாவது தற்போது பயன்படுத்தும் 2ஜி அல்லது 3ஜி சிம் கார்டுகளை 4ஜி சிம்களாக மாற்ற வேண்டும்.

நல்ல செய்தி என்னவென்றால், பழைய சிம் கார்ட்டை மிகவும் எளிமையாக 4ஜி சிம் ஆக மாற்ற முடியும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம், ஃபிரான்சைஸி ஷோரூம் அல்லது சில்லறை விற்பனை நிலையங்களுக்கு சென்று உங்கள் பழைய சிம் கார்ட்டை கொடுத்து, அதை இலவசமாக 4ஜி சிம் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

ஒருவேளை நீங்கள் (ஜியோ அல்லது ஏர்டெல் அல்லது வோடாபோன் ஐடியா போன்ற) மற்ற டெலிகாம் ஆபரேட்டர்களிடம் இருந்து பிஎஸ்என்எல்-க்கு மாற நினைத்தால், உங்கள் மொபைல் எண்ணை மிகவும் எளிமையாக போர்ட் (PORT) செய்யலாம்; உடன் புதிய கஸ்டமர் (New Customer) என்கிற பெயரின்கீழ் சில சிறப்பு திட்டங்களையும் பெறலாம்.

4ஜி அறிமுகமான வேகத்தில் தங்கு தடையின்றி 5ஜி-யும் வரும்! ஏனென்றால், டவர் ஹார்டுவேர் (Tower Hardware) அல்லது சிம் கார்டுகளில் மாற்றங்கள் தேவைப்படாமல், பிஎஸ்என்எல்-ன் டவர்கள் எல்லாமே 5ஜி தொழில்நுட்பத்திற் (5G Technology)கு மேம்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த டவர்களில் உள்ளமைக்கப்பட்ட 5ஜி திறன் இருக்கும், வெறுமனே மென்பொருள் புதுப்பிப்புகள் (Software Updates) மூலம் இவைகளை 5ஜிக்கு மேம்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
BSNL Users in Erode Tirunelveli will get 4G Service Soon They Need to Convert Old SIM into 4G SIM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X