BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: 3ஜி திட்டங்களில் 4ஜி சேவை!

|

பிஎஸ்என்எல் 3 ஜி திட்டங்களின் மூலமாகவே 4 ஜி சேவையை பயன்படுதத்தலாம் அதற்கான செயல்முறை மற்றும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் 4 ஜி சேவை

பிஎஸ்என்எல் 4 ஜி சேவை

பிஎஸ்என்எல் 4 ஜி சேவை பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்தாலும், முதற்கட்டமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையானது, மும்பை மற்றும் டெல்லி வட்டங்களில் கிடைத்தது. பிஎஸ்என்எல் தற்போது கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பல பகுதிகளில் அதன் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. சில வட்டங்களில், பிஎஸ்என்எல் ஏற்கனவே இருக்கும் 3ஜி ஸ்பெக்ட்ரமைப் பயன்படுத்தி 4 ஜி சேவைகளை வழங்குகிறது.

பிஎஸ்என்எல்-க்கு 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு

பிஎஸ்என்எல்-க்கு 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட்) நிறுவனம், விற்பனை முகவா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கு கடன் பாக்கித் தொகை ரூ.1,700 கோடியை சமீபத்தில் அளித்தது. அதேபோல் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கூகுள் மீட் மற்றும் கூகுள் டுயோ சேவைகளில் மிகிவும் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.!கூகுள் மீட் மற்றும் கூகுள் டுயோ சேவைகளில் மிகிவும் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.!

மூடுவதற்கு வாய்ப்பே இல்லை

மூடுவதற்கு வாய்ப்பே இல்லை

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான 4ஜி தொழில்நுட்பம் அடுத்த 19 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்றும் மத்திய இணை அமைச்சர் சஞ்சய் சாம்ராவ் தோட்ரே தெரிவித்தார். பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் இந்தியாவின் மூல சொத்து என்றும் அதை மூடுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அதற்கு உறுதி அளிப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

3 ஜி திட்டங்களை பயன்படுத்தி 4 ஜி சேவையை பெறலாம்

3 ஜி திட்டங்களை பயன்படுத்தி 4 ஜி சேவையை பெறலாம்

3 ஜி ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்வதன் மூலம் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு 4ஜி வேக இணைய சேவையை வழங்குகிறது. அதாவது இந்த திட்டம் குறித்து தெளிவாக பார்க்கையில், பிஎஸ்என்எல் 3 ஜி ப்ரீபெய்ட் திட்ட விலையில் ரீசார்ஜ் செய்திருந்தாலும் பிஎஸ்என்எல் 4 ஜி சேவை வழங்கக் கூடிய ஒரு மண்டலத்தில் இருந்தால் 4ஜி நெட்வொர்க் வேகத்தை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3ஜி சேவை திட்டத்தில் ரீசார்ஜ் செய்தாலும் 4 ஜி சேவை

3ஜி சேவை திட்டத்தில் ரீசார்ஜ் செய்தாலும் 4 ஜி சேவை

பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்கும் பகுதிகளோ அல்லது அதற்கு அருகில் உள்ள பகுதிகளிலோ இருந்தால் மட்டும் இந்த சேவையில் பலன் பெற முடியும். 3ஜி சேவை திட்டத்தில் ரீசார்ஜ் செய்தாலும் 4 ஜி பகுதிகளில் இருக்கும் போது அதன் வேகம் 4ஜி இணைய வேகத்தில் பயன்படுத்த முடியும். இதில் பிஎஸ்என்எல் சிறந்த 3ஜி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் சிறந்த 3 ஜி திட்டங்கள்

பிஎஸ்என்எல் சிறந்த 3 ஜி திட்டங்கள்

பிஎஸ்என்எல் சிறந்த 3 ஜி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இருப்பினும் இதுவரை நாடுமுழுவதும் 4 ஜி திட்டங்களை நிறுவனத்தால் அறிமுகப்படுத்த முடியவில்லை. அதன் மிகவும் சுவாரஸ்யமான 3 ஜி திட்டங்களில் ஒன்று ரூ.1,999 திட்டம். இந்த திட்டம் தினசரி டேட்டாக்களை வழங்குகிறது.

365 நாட்கள் வரை செல்லுபடியாகும்

365 நாட்கள் வரை செல்லுபடியாகும்

இந்த திட்டத்தின் சிறந்த நன்மை குறித்து பார்க்கையில், இது 365 நாட்கள் வரை செல்லுபடியாகும். அதனுடன், இது வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது. மேலும் இலவச அழைப்பாளர் இசை நன்மைகளையும் வழங்குகிறது. எனவே பி.எஸ்.என்.எல் உங்கள் பகுதியில் 4 ஜி சேவைகளை வழங்கினால், ரூ.1999 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தி அதிவேக இணைய பயன்பாட்டை பெறலாம்.

இரண்டு வெவ்வேறு விலையில் திட்டங்கள்

இரண்டு வெவ்வேறு விலையில் திட்டங்கள்

பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த ஆண்டு இரண்டு வெவ்வேறு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டங்களானது ரூ.96 மற்றும் ரூ.236 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த இரண்டு திட்டங்களும் பி.எஸ்.என்.எல் 4ஜி நெட்வொர்க் சேவைக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!

4 ஜி சேவையை முழுமைப்படுத்த நடவடிக்கை

4 ஜி சேவையை முழுமைப்படுத்த நடவடிக்கை

பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த மும்முரம் காட்டி வரும் நேரத்தில், பிஎஸ்என்எல் அதன் 4 ஜி சேவையை முழுமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. பிஎஸ்என்எல் முன்னோக்கி செல்லும்போதெல்லாம் அந்த நிறுவனம் ஏதாவது ஒரு சிக்கலை சந்தித்து வருகிறது. இருப்பினும் தற்போதையக் காலக்கட்டத்தில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்கான செயலில் ஈடுபட்டு வருகிறது.

source: telecomtalk.info

Best Mobiles in India

English summary
Bsnl users get 4G speeds data in 3G prepaid plans

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X