குறிவைத்து தாக்கப்பட்ட BSNL.. மோசமான ஆபத்தில் சிக்கிய பயனர்கள்.. உங்ககிட்ட BSNL சிம் இருக்கா? என்ன ஆபத்து?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திற்கு சோதனை மேல் சோதனை, மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே அரசு நடத்தும் தொலைத்தொடர்பு (Telecom) நிறுவனத்தின் மேல் மக்களுக்கு நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இதுவரை 4ஜி (4G) இல்லை 5ஜி (5G) இல்லை என்ற குறைகளுடன் மக்கள் நம்பிக்கையை இழந்து வந்த பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது பாதுகாப்பு சிக்கலை சந்தித்துள்ளது. BSNL பயனர்களின் முக்கியமான தகவல்கள் திருடப்பட்டுள்ளது (Sensitive Data of Users Compromised). திருடப்பட்டது மட்டுமின்றி பிஎஸ்என்எல் பயனர்களின் தகவல்கள் இணையத்தில் விற்பனை (Sale) செய்யப்பட்டு வருகிறது.
யாரும் எதிர்பார்த்திடாத அசம்பாவிதமாக பிஎஸ்என்எல் டெலிகாம் நெட்வொர்க்கின் (BSNL Telecom Network) முக்கியமான சர்வர் (Server) ஹேக்கரால் தாக்கப்படுள்ளது. ஆம், பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது மீண்டும் ஒருமுறை டேட்டா பிரீச் (Data Breach) சிக்கலை சந்தித்துள்ளது. கடந்த 6 மாதத்திற்குள் இது இரண்டாவது தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறை திருடிய தகவல்களில் பல முக்கியமான தகவல்கள் (Sensitive data) இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

BSNL மீது குறிவைத்து நடத்தப்பட்ட ஹேக்கர் தாக்குதல்.. திருடப்பட்ட முக்கியமான பயனர் தகவல்கள்:
முக்கியமாக பிஎஸ்என்எல் பயனர்களின் தனிப்பட்ட தகவலுடன் (BSNL users private informations) இந்த முறை தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த முறை திருடிய டேட்டாக்களை இணையதளத்தில் 5000 டாலர் விலையில் ஹேக்கர் (Hacker) விற்பனைக்கு வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 42 லட்சத்திற்கும் மேல் என்று கூறப்பட்டுள்ளது.
இணையத்தில் உள்ள பிஎஸ்என்எல் பயனர்களின் தகவலை யார் வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. திருடப்பட்ட தகவல்களில் பயனர்களின் சிம் கார்டு விபரங்கள் (SIM card details), இன்டர்நேஷனல் மொபைல் சாப்ஸ்க்ரைப்ர் ஐடென்டிட்டி (international mobile subscriber identity) என்று கூறப்படும் IMSI தகவல் வரை பல முக்கியமான தகவல்கள் இந்த டேட்டா திருட்டு (Data theft) மூலம் திருடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல், பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை வாங்கிய பயனர்களின் வீட்டு முகவரி (Home address), அவர்களின் இருப்பிடம் இருக்கும் லொக்கேஷன் (location), மற்றும் சென்சிட்டிவான பாதுகாப்பு கீஸ் (Security keys) போன்ற தகவல்களும் திருடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. kiberphant0m என்ற அடையாள பெயருடைய ஹேக்கர் தான் பிஎஸ்என்எல் மீது இந்த மோசமான தாக்குதலை நடத்தியுள்ளார் என்று கண்டறியப்பட்டுள்ளது.
உங்க கிட்ட பிஎஸ்என்எல் சிம் கார்டு இருக்கா? அப்போ இந்த ஆபத்தை நீங்கள் சந்திக்கலாம்:
இந்த திருடப்பட்ட தகவல்களை வைத்து, யார் வேண்டுமானாலும் டூப்ளிகேட் சிம் கார்டுகளை உருவாக்க முடியும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்த திருடப்பட்ட தகவல்களை வைத்து மோசடி, ஆபத்தான திருட்டுக்கள் போன்ற நிகழ்வுகளில் பிஎஸ்என்எல் பயனர்களின் டூப்ளிகேட் தகவல்கள் ஹேக்கர்கள் மற்றும் மோசடிக்காரர்கள் பயன்படுத்த முடியுமென்று கூறப்பட்டுள்ளது.
இந்த காரணத்தினால், இந்த முறை நடத்தப்பட்ட பிஎஸ்என்எல் தகவல் திருட்டு மிகவும் மோசமான 'கிரிட்டிக்கள்' (Critical) ஆபத்து பிரிவின் கீழ் பிரிவுபடுத்தப்பட்டுள்ளது. திருடர்கள் திருடிய தகவல்கள் ஏறக்குறைய 27.8GB அளவு அடங்கியது என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 4ஜி நெட்வொர்க்கை கொண்டுவரவில்லை என்று மக்கள் கடுப்பில் இருக்கின்றனர்.
இதற்கு மத்தியில், தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் இத்தைகைய மோசமான பாதுகாப்பு சிக்கலை சந்தித்துள்ளது, பிஎஸ்என்எல் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது போல தெரிகிறது. பிஎஸ்என்எல் பயனர்களின் எத்தனை லட்சம் நபர்களின் தகவல்கள் திருடப்பட்டது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இதில் எத்தனை லட்சம் பயனர்களின் தகவல்கள் மோசடிக்காக பயன்படுத்தப்பட்டது என்பதும் தெளிவாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications