திடீரென 82டாப் அப் வவுச்சர்களை நீக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.! முழுவிவரம்.!
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்கள் மற்றம் சலுகைகளுக்கும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் கடந்த சில மாதங்களில் அதிகளவு வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னை வட்டத்தில் 82 வவுச்சர்களை நீக்கியுள்ளதாக டெலிகாம் டால்க் வலைதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னை வட்டத்தில் உள்ள அதன் பயனர்களுக்கு வெறும் 34 டாப்-அப் வவுச்சர்களைமட்டுமே வழங்கி வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சென்னை வட்டத்தில் அரசுக்கு சொந்தமான இந்த
ஆபரேட்டரிடமிருந்து பல எண்ணிக்கையிலான டாப்-அப் வவுச்சர்கள் வழங்கப்பட்டன.

ஆனால் அன்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி மொத்தம் 82 டாப்-அப் வவுச்சர்கள் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டன. எனவே பயனர்கள் இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டாப் விருப்பங்களை மட்டுமே கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக குறைந்த விருப்பங்கள் முதல் விலையுயர்ந்தவை வரை,பிஎஸ்என்எல் நிறைய டாப்-அப் வவுச்சர்களை அகற்றியுள்ளது.இதனால் குறிப்பிட்ட விலை நிர்ணயங்களை கொண்ட பயனர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை பிஎஸ்என்எல் நிறுவனம்உறுதி செய்துள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை வட்டத்தில் அணுக கிடைக்கும் 34 வவுச்சர்களில், இன்னமும் ரூ.10, ரூ.20,ரூ.30 போன்ற மலிவான வவுச்சர்கள் முதல் ரூ.100 வரை தேர்வு செய்யலாம். பின்பு இதனுடன் ரூ.100, ரூ.110, ரூ.160,ரூ.600, ரூ.1000, ரூ.2500 உள்ளிட்ட முழு பேச்சு நேரத்தை வழங்கும் வவுச்சர்கள் கூட உள்ளன.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னை வட்டத்தில் ரூ.1000 அல்லது அதற்கு மேற்பட்ட விலை மொத்தம் ஆறு வவுச்சர்களை
வழங்குகிறது. இதில் ரூ.1000 வவுச்சர் ஆனது கடந்த 2020செப்டம்பர் 26-ம் தேதி வரை ரூ.1000 என்கிற டால்க் டைமை வழங்கியது, ஆனால் இப்போது இதன் டால்க் டைம் ரூ.844-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.1,000 க்கு மேல் உள்ள மற்ற வவுச்சர்களின் பட்டியலில் ரூ.1,100, ரூ.2,000, ரூ.2,500, ரூ.3,000, மற்றும் ரூ.5,500 ஆகியவைகள் உள்ளன என்பது குறிப்படத்தக்கது.

அக்டோபர் 7, 2020 அன்று மொத்தம் 82 வவுச்சர்களை இந்த தொலைதொடர்பு ஆபரேட்டர் நீக்கியுள்ளது என்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும். மேலும் ஆபரேட்டரால் அகற்றப்பட்ட வவுச்சர்களில் 71 வவுச்சர்கள் ரூ.1000-க்கும் குறைவாகவே இருந்தது.

எனவே பயனர்களுக்கு இப்போது தேர்வு செய்ய குறைந்த விருப்பங்கள் மட்டுமே இருந்தாலும் கூட,அது நிலைமையை மோசமாக மாற்றும்படி இல்லை என்பது உண்மை. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து வவுச்சர்களும் வரிகளை உள்ளடக்கியது, எனவே பயனர் இணையதளத்தில் பார்க்கும் அதே தொகையை செலுத்தினால் மட்டும் போதும்.

ஆனால் மக்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பிற வட்டங்களில் உள்ள பயனர்களுக்கு சென்னை வட்டத்திலிருந்து அகற்றப்பட்ட பெஸ்ட் வவுச்சர்கள் இன்னமும் வழங்கப்படுகிறன்றன என்பது குறிப்பிடத்தகக்து.


Click it and Unblock the Notifications