BSNL சிம் கார்டு வச்சி இருக்கீங்களா? அப்போ உங்க மனசை கல்லாக்கிகோங்க!

|

4G இல்லை என்கிற ஒரே ஒரு காரணத்தை தவிர்த்து BSNL நிறுவனத்திடம் "ஒப்பீட்டளவில்" பெரிய குறைகளை கண்டுபிடிக்க முடியாது.

சந்தேகமாக இருந்தால் பிஎஸ்என்எல் யூசர்களை கேட்டுப்பாருங்கள். BSNL-இன் வாய்ஸ் குவாலிட்டி எப்படி இருக்கும்? கவரேஜ் எப்படி இருக்கும்? என்று.. 100 க்கு 90 பேர் நன்றாக இருக்கும் என்று தான் கூறுவார்கள்.

அது மட்டுமா?

அது மட்டுமா?

மிகவும் மலிவான டேட்டா பிளான்கள், பில்லிங் மற்றும் ரீசார்ஜ்களில் வெளிப்படைத்தன்மை, இந்தியாவின் மூலைமுடுக்கில் உள்ள கிராமப்புறங்களாக இருந்தாலும் கூட நல்ல சேவைகளை வழங்க வேண்டும் என்கிற சமூகப் பொறுப்பு என, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புகழை பாடிக்கொண்டே போகலாம்.

ஆனால், போட்டி அல்லது பந்தயம் என்று வந்து விட்டால் யார் முந்தி ஓடுகிறார்கள்; யார் வல்லவர் என்பதே முக்கியம், யார் நல்லவர் என்பது முக்கியம் அல்ல!

அதாங்க 5G பந்தயம்!

அதாங்க 5G பந்தயம்!

"பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை" என்று பேச ஆரம்பித்து விட்டாலே.. "4ஜி சேவைக்கே இங்க வழி இல்ல.. 5ஜி நெட்வொர்க் எல்லாம் இன்னும் எத்தனை மைல் தூரத்துக்கு அங்கிட்டு இருக்கோ?" என்கிற நக்கலான கமெண்ட்களே எங்களுக்கு கிடைக்கும்.

அது என்னவோ உண்மைதான்! மற்ற டெலிகாம் நிறுவனங்கள் 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கோடிகளை கொட்டும் மறுகையில், BSNL நிறுவனம் அந்த ஏலத்திலேயே கலந்து கொள்ளவில்லை என்றால்.. யார் தான் கலாய்க்க மாட்டார்கள்?!

எதுவும் சொல்ல வேண்டாம்; இந்தா ரூ.9,999! முதல்ல இந்த Phone-ஐ கொடு!எதுவும் சொல்ல வேண்டாம்; இந்தா ரூ.9,999! முதல்ல இந்த Phone-ஐ கொடு!

விமர்சனங்களுக்கு மத்தியில் BSNL 5G குறித்து அப்டேட்!

விமர்சனங்களுக்கு மத்தியில் BSNL 5G குறித்து அப்டேட்!

உங்களுக்கே தெரியும்! DoT (Department of Telecom) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்புத் துறையானது, சமீபத்தில் தான் 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்தியது.

அந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 24,740MHz ஸ்பெக்ட்ரத்தை ரூ.88,078 கோடிக்கு கைப்பற்றியது. அதை தொடர்ந்து பார்தி ஏர்டெல் நிறுவனம் 19867.8MHz-ஐ பெற ரூ.43,084 கோடி செலவழித்தது. முன்னரே குறிப்பிட்டபடி, 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான BSNL நிறுவனம் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலைப்பாட்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் எப்போது அதன் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என்கிற தகவலை டெலிகாம் அமைச்சர் ஆன அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டு உள்ளார்.

பிஎஸ்என்எல் 5G எப்போது வரும்? - மனதை கல்லாக்கி கொள்ளுங்கள்!

பிஎஸ்என்எல் 5G எப்போது வரும்? - மனதை கல்லாக்கி கொள்ளுங்கள்!

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தத்தம் 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்த தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், டெலிகாம் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) வருகிற 2023 முதல் 5ஜி கனெக்டிவிட்டியை பயன்படுத்த தொடங்கும் என்று கூறியுள்ளார்.

Nothing கம்பெனிக்கு எவ்ளோ நக்கல் இருந்தா இப்படி செய்யும்? கேட்கும் போதே கடுப்பாகுது!Nothing கம்பெனிக்கு எவ்ளோ நக்கல் இருந்தா இப்படி செய்யும்? கேட்கும் போதே கடுப்பாகுது!

அதுமட்டுமா சொன்னாரு? இன்னொன்னும் சொன்னாரு பாருங்க!

அதுமட்டுமா சொன்னாரு? இன்னொன்னும் சொன்னாரு பாருங்க!

எக்கனாமிக் டைம்ஸ் வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டுக்குள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கோர் நெட்வொர்க்கை பயன்படுத்தி அதன் நான்காவது தலைமுறை (4ஜி) மற்றும் ஐந்தாவது தலைமுறை (5ஜி) நெட்வொர்க்கை மேம்படுத்தும்.

"அவைகள்" அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனத்தை, தொலைத்தொடர்பு துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாற்றும் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.

டாடா நிறுவனத்துடன் கூட்டு!

டாடா நிறுவனத்துடன் கூட்டு!

மேலும் பேசிய 'ஐடி' அமைச்சர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services - TCS ) உடனான கூட்டமைப்பிற்காக நடந்து வரும், வணிகப் பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், 1 லட்சம் "தளங்களுக்கான" (Sites) உபகரணங்கள் எளிதாக கிடைக்கும் என்றும் கூறி உள்ளார்.

Philips அண்ணே! இதை முதல்லயே செஞ்சிருந்தா அம்மாகிட்ட அடி வாங்கி இருக்க மாட்டோம்ல!Philips அண்ணே! இதை முதல்லயே செஞ்சிருந்தா அம்மாகிட்ட அடி வாங்கி இருக்க மாட்டோம்ல!

இப்படி தான் கடந்த மே மாதம் 4ஜி வரும்னு சொன்னாங்க!

இப்படி தான் கடந்த மே மாதம் 4ஜி வரும்னு சொன்னாங்க!

அடுத்த 2023 ஆம் ஆண்டிற்குள் BSNL 5ஜி சேவை அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாவது, முதல் முறை அல்ல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த 2022 ஆம் ஆண்டு மே மாத வாக்கில், BSNL நிறுவனம் அதன் 4G சேவையை அறிமுகப்படுத்தும் என்று அறிக்கைகள் தெரிவித்தன. ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

எனவே 2023 ஆம் ஆண்டில் 5ஜி சேவை அறிமுகமாகும் என்கிற அமைச்சரின் வார்த்தையை "மேலோட்டமாக" எடுத்துக்கொள்வது நல்லது.

Jio vs Airtel vs VI.. வேடிக்கை பார்க்கும் BSNL!

Jio vs Airtel vs VI.. வேடிக்கை பார்க்கும் BSNL!

எப்படி பார்த்தாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்கள் தத்தம் 5G "முயற்சிகளை" கட்டவிழ்த்து விடும் என்கிற நிலைப்பாட்டில், BSNL நிறுவனம் விரைவில் அதன் 4G நெட்வொர்க்கை அறிமுகம் செய்து, பின்னர் 5G க்கு மேம்படுவதும் இன்றியமையாததாக கருதப்படுகிறது.

4ஜி சிம் கொள்முதல்

4ஜி சிம் கொள்முதல் "முடிந்தது"!

"பிஎஸ்என்எல் இனிமேல் வளர்ச்சியடைய உள்ளது. அது ஏற்கனவே 4ஜி சிம் கொள்முதல் தொடர்பான பணிகளை முடித்துவிட்டது. BSNL நிறுவனத்தின் "திட்டங்கள்" TCS-Tejas ஆல் உருவாக்கப்பட்ட உள்நாட்டு 4G தொழில்நுட்பத்துடன் கூடிய 4ஜி-யை விரைவாக வெளியிடுவதற்கான இடத்தில் உள்ளன. மேலும் அவைகள் SDN (Software-defined network) கட்டமைப்பை அடிப்படையாக கொண்டது. இதன் பொருள், இது மிக விரைவாக வெளியிடப்படலாம்" என்று பிஎஸ்என்எல்-இன் முன்னாள் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறி உள்ளார்.

Best Mobiles in India

English summary
BSNL Users Be Calm 5G Service To Launch in 2023 Only

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X