மீண்டும் கெத்து காட்டும் ஜியோ.. வாடிக்கையாளர்களை இழந்த சோகத்தில் BSNL.. 4ஜி தான் காரணமா?
ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi), நிறுவனங்களுக்குப் போட்டியாக மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (bsnl). இதுதவிர 4ஜி சேவை, 5ஜி சோதனை, லைவ் டிவி சேனல் எனப் பல முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல். இந்நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தற்போது ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது கடந்த சில மாதங்களில் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று வந்த பிஎஸ்என்எல் கடந்த நவம்பர் மாதம் 344,473 வாடிக்கையாளர்களை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் கடந்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 7 மில்லியன் வாடிக்கையாளர்களைச் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நவம்பர் மாதம் இறுதியில் BSNL-இன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 92.05 மில்லியனாக இருக்கிறது.

அதேசமயம் நவம்பர் மாதம் இறுதியில் ரிலையன்ஸ் ஜியோ 1.2 மில்லியன் பயனர்களை சேர்த்துள்ளது. பாரதி ஏர்டெல் 1.14 மில்லியன் பயனர்களை இழந்தது. பின்பு வோடபோன் ஐடியாவும் 1.5 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்தது. மேலும் இதனால் ஜியோவின் சந்தை பங்கு 40.15 சதவீதமாகவும், ஏர்டெல் 33.45 சதவீதமாகவும், அதைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா 18.19 சதவீதமாகவும், பிஎஸ்என்எல் 8.03 சதவீதமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்தின. ஆனால் அந்த சமயம் பிஎஸ்ன்எல் நிறுவனம் மட்டும் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தவில்லை. அதாவது தொடர்ந்து இப்போதும் கூட மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இருந்தபோதிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் சில இடங்களில் மட்டுமே 4ஜி சேவையை கொண்டுவந்துள்ளது.
இன்னும் நாடு முழுவதும் 4G சேவையை பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அறிமுகம் செய்யவில்லை. இதனால் தான் பிஎஸ்என்எல் தற்போது வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. கூடிய விரைவில் இந்நிறுவனம் அனைத்து இடங்களிலும் 4ஜி சேவையை வழங்கினால் இன்னும் அதிக புதிய வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைவார்கள். மேலும் பிஎஸ்என்எல் சமீபத்தில் அறிமுகம் செய்த இரண்டு திட்டங்களை இங்கே பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.215 திட்டம் (BSNL Rs 215 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.215 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.215 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. சேலஞ்சர் அரினா (Challenger Arena), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), கேம்ஆன் (Gameon), பிஎஸ்என்எல் டியூன் (BSNL Tunes), லிஸ்ட்ன் பாட்காஸ்ட் (Lystn Podcast), ஜிங் மியூசிக் (Zing Music), ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.

பிஎஸ்என்எல் ரூ.628 திட்டம் (BSNL Rs 628 Prepaid Plan) தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. பின்பு பிஎஸ்என்எல் ரூ.215 திட்டம் போல் இந்த திட்டமும் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








