அட்டகாச டாக் டைம் சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.! பெறுவது எப்படி?

|

கடந்த சில வாரங்களில் ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் கனிசமாக வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்-க்கு மாறியுள்ளனர், பின்பு வோடபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் அதிகளவு வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர்.

4ஜி சேவைகளை வழங்க முடியாத

இருந்தபோதிலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் நாடு முழுவதும் 4ஜி சேவைகளை வழங்க முடியாத காரணத்தினால் இந்த டெலிகாம்நிறுவனம் பெரிய அளவிலான வருவாய் பாதிப்பை சந்தித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

தை ஈடுசெய்யவும்,

ஆனாலும் இந்நிறுவனம் அதை ஈடுசெய்யவும், நிறுவனத்தின் 3ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்தி மக்களை ஊக்குவிக்கவும், பிஎஸ்என்எல் மலிவான திட்டங்களையும் அட்டகாசமான சலுகைகளையும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.10-க்கு ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட்டால் 2 ஜிபி டேட்டா இலவசம்: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு!ரூ.10-க்கு ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட்டால் 2 ஜிபி டேட்டா இலவசம்: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு!

 அட்டகாச சலுகை அறிவித்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்

அதன்படி மேலுமொரு அட்டகாச சலுகை அறிவித்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதாவது பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ஒரு புதிய சலுகையின் வதிகளைப் பின்பற்றி ரீசார்ஜ் செய்யும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கூடுதல் டாக் டைமை பெறதகுதியுடையவர்கள் ஆவார்கள்.

 20சதவிகிதம் வரை டால்க் டைம்மை பெறுவார்கள்

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், இந்த புதிய சலுகையின் கீழ் கூடுதலாக ஒருவர் 20சதவிகிதம் வரை டாக் டைம்மைபெறுவார்கள், அதன்படி பயனர்கள் ரூ.600 -வரை கூடுதல் பேச்சு நேரத்தை பெறமுடியும்.

தகவலின்படி வழக்கமாக ரூ.100 உடன்

வெளிவந்த தகவலின்படி வழக்கமாக ரூ.100 உடன் ரீசார்ஜ் செய்யும் நபர்களுக்கு, ரூ.100 டால்க் டைம் கிடைக்கும் என்றும், ரூ.110 ரூபாயுடன் ரீசார்ஜ செய்யும் நபர்களுக்கு ரூ.110 டாக் டைம் கிடைக்கும் என்றும், பின்பு ரூ.150 ரீசார்ஜ் திட்டத்திலும், அதே அளவிலான பேச்சு நேரம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவனிக்க வேண்டியது

ஆனால் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், கூடுதல் டால்க் டைம் நேரத்தினை பெற ரூ.220 ரீசார்ஜை தேர்வு செய்ய வேண்டும். பிஎஸ்என்எல் ரூ.220 ரீசார்ஜ் மூலம் பயனர்களுக்கு ரூ.240 என்கிற டாக் டைம் கிடைக்கும். அதேபோன்று ரூ.550 ரீசார்ஜ் செய்வதன் மூலம் பயனர்களுக்கு ரூ.575 டால்க் டைம் கிடைக்கும்.

இந்த அட்டகாச சலுகை நிறுவனத்தின்

அதேபோல இந்த அட்டகாச சலுகை நிறுவனத்தின் பட்டியலில் நீண்ட காலமாக இருக்கும் திட்டங்கள் மற்றும் விலை உயர்ந்த திட்டங்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி ரூ.1,100 திட்டத்துடன் பயனர்களுக்கு ரூ.1,200 பேச்சு நேரம் கிடைக்கும். பின்பு ரூ.2,000 மற்றும் ரூ.3,000 திட்டத்திற்கும் இந்த சலுகை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு செய்யும்

அதன்படி ரூ.2000-திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்கள், மொத்தம் ரூ.2300 என்கிற பேச்சு நேரத்தை பெறுவார்கள், பின்பு ரூ.3000 திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்கள் மொத்தம் ரூ.3,600 என்கிற டாக் டைமை பெறுவார்கள்.

 வரை மட்டுமே

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இது குறிப்பிட்ட கால சலுகையாகும் மற்றும் இது 2020-ம் ஆண்டும் ஆக்டோபர் 6-ம் தேதி வரை மட்டுமே அணுக கிடைக்கும். பின்பு பயனர்கள் கவனிக்கவேண்டியது என்னவென்றால், ஞாயிற்றுக்கிழமைகளில் ரீசார்ஜ் செய்யும் போது மட்டுமே இந்த சலுகை செயல்படும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL User Can Avail Upto Rs.600 Additional Talk Time On Prepaid Recharge: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X