500% கூடுதல் நன்மைகள்: பிஎஸ்என்எல் அதிரடி, ஜியோவை தூக்கிப்போடுங்க.!

|

கடந்த வாரம் அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத் தொடர்பு இயக்குனரான பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மொபைல் தரவுத் திட்டங்களில் 43% என்கிற அளவிற்கு அதிக செல்லுபடியாகும் காலமும் என்றும் 50% வஎன்கிற அளவில் தரவு நன்மைகளையும் அதிகரிப்பதாக அறிவித்தது.

500% கூடுதல் நன்மைகள்: பிஎஸ்என்எல் அதிரடி, ஜியோவை தூக்கிப்போடுங்க.!

அதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று பிஎஸ்என்எல் நிறுவனமானது, அதன் ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கான 'ஹேப்பி ஆஃபர்' திட்டத்தின் கீழ் கூடுதல் நன்மைகளை அறிவித்தது. தற்போது பிஎஸ்என்எல் அதன் ப்ரீபெய்ட் டேட்டா எஸ்டிவி திட்டங்களுக்கு 500% கூடுதல் டேட்டாவை வழங்குமென அறிவித்துள்ளது. இந்த நம்பமுடியாத திருத்தத்தின் கீழ் இடம்பெறும் ரீசார்ஜ் திட்டங்கள் எஎன்ன மற்றும் அவைகளின் நன்மைகள் என்ன.?

பெரும்பாலான திட்டங்களின் திருத்தம்

பெரும்பாலான திட்டங்களின் திருத்தம்

பிஎஸ்என்எல்-ன் இந்த அதிரடி நடவடிக்கையின் திருத்தத்தின் கீழ் நிறுவனத்தின் ரூ.109, ரூ.198, ரூ291, டிரிபிள் ஏஸ் 333, சாவ்க்கா ரூ.444, ரூ.549, ரூ.561, ரூ.821, ரூ.1099, ரூ.1498, ரூ.1949, ரூ.2798, ரூ.3998 மற்றும் ரூ.4498/- ஆகிய பெரும்பாலான திட்டங்களின் திருத்தம் பெற்றுள்ளன.

நீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..? Simple tips
மொத்தம் 365 நாட்களுக்கு செல்லுபடி

மொத்தம் 365 நாட்களுக்கு செல்லுபடி

இனி இந்த மாநிலத் தொலைத் தொடர்பு நிறுவனமானது, மேற்கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களிலும் 500% என்கிற விகிதத்திலான கூடுதல் டேட்டா நன்மையை வழங்கும். மிக விலை உயர்ந்த திட்டமான பிஎஸ்என்எல்-ன் ரூ.4498/- ஆனது இனி மொத்தம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான தரவை வழங்கும் மேற்குறிப்பிட்டுள்ள சில திட்டங்களின் செல்லுபடியாகும் காலம் வரை இலவச பிஎஸ்என்எல் காலர் ட்யூன் கிடைக்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.

இலவச காலர் ட்யூன் நன்மை

இலவச காலர் ட்யூன் நன்மை

இப்போது பிஎஸ்என்எல்-ன் ரூ.105/- ஆனது 25 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் 1536எம்பி அளவிலான டேட்டாவுடன் இலவச காலர் ட்யூன் நன்மையையும் வழங்கும். மற்றொரு திட்டமான ரூ.198/- ஆனது திட்டம் தற்போது நாள் ஒன்றிக்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

நாள் ஒன்றிக்கு 1.5ஜிபி

நாள் ஒன்றிக்கு 1.5ஜிபி

மற்றொரு பட்ஜெட் திட்டமான ரூ.291/- ஆனது தற்போது நாள் ஒன்றிக்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 25 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. நிறுவனத்தின் பிரபலமான டிரிபிள் ஏஸ் திட்டமான ரூ.333/- ஆனது மொத்தம் 41 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

60 நாட்களுக்கு செல்லுபடி

60 நாட்களுக்கு செல்லுபடி

பிஎஸ்என்எல் சாவ்க்கா ரூ.444/- திட்டமானது இனி 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த இரண்டு மிட்-ரேன்ஜ் பட்ஜெட் விலை திட்டங்களின் முக்கிய சிறப்பம் என்னவென்றால் வழங்கப்பட்டுள்ள தினசரி வரம்பு முடிந்த பின்னரும் கூட, பயனர்கள் 80கேபிபிஎஸ் அளவிலான தரவு வேகத்தை பெறுவார்கள்.

120 நாட்களுக்கு செல்லுபடி

120 நாட்களுக்கு செல்லுபடி

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.549, ரூ.561 மற்றும் ரூ.821 ஆகிய மூன்று திட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை பொறுத்தமட்டில், இனி ரூ .549/- ஆனது 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் வானம் ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவும், ரூ.561/- ஆனது மொத்தம் 80 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான தரவும் மற்றும் ரூ.821/- ஆனது அதே நன்மையை 120 நாட்களுக்கும் வழங்கும்.

84 நாட்களுக்கு செல்லுபடி

84 நாட்களுக்கு செல்லுபடி

பிஎஸ்என்எல்-ன் ரூ.1099/- திட்டமானது தரவு, எஸ்எம்எஸ் மற்றும் குரல் அழைப்பு போன்ற அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது. இது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணத்திலான நாள் ஒன்றிற்கு 1ஜிபி எ;அளவிலான டேட்டா உடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்கும்.

எந்தவொரு  தினசரி அல்லது மாதாந்திர வரம்பும் கொண்டிருக்கவில்லை.

எந்தவொரு தினசரி அல்லது மாதாந்திர வரம்பும் கொண்டிருக்கவில்லை.

பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் சிறந்த திட்டமான ரூ.1099/- ஆனது பிற டெலிகாம் நிறுவனங்கள் வழங்கிடாத ஒட்டு வரம்பற்ற தரவு பிரசாதமாகும். ஏனெனில் இந்த திட்டமானது எந்தவொரு தினசரி அல்லது மாதாந்திர வரம்பும் கொண்டிருக்கவில்லை.

365 நாட்களுக்கு வரம்புகள் இல்லாத 91ஜிபி

365 நாட்களுக்கு வரம்புகள் இல்லாத 91ஜிபி

நீண்ட கால நன்மைகளை வழங்கும் ரூ.1498, ரூ.1949, ரூ.2798, ரூ.3998 மற்றும் ரூ.4498/- போன்ற திட்டங்களின் நன்மைகளை பொறுத்தமட்டில், ரூ.1498/- ஆனது 365 நாட்களுக்கு வரம்புகள் இல்லாத 91ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.1949 மற்றும் ரூ.2798/- ஆகிய திட்டங்களானது, நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான டேட்டாவை முறையே 300 நாட்கள் மற்றும் 365 நாட்களுக்கு வழங்குகிறது.

முறையே 1.5ஜிபி மற்றும் 2ஜிபி அளவிலான டேட்டா

முறையே 1.5ஜிபி மற்றும் 2ஜிபி அளவிலான டேட்டா

இறுதியாக, ரூ.3998 மற்றும் ரூ.4498/- ஆனது நாள் ஒன்றிற்கு முறையே 1.5ஜிபி மற்றும் 2ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும். மேற்குறிப்பிட்டுள்ளபடி, ரூ.109, ரூ.198, ரூ.291, ரூ.333, ரூ.444, ரூ.549, ரூ.561, மற்றும் ரூ.1099 ஆகிய திட்டங்கள் இலவச காலர் ட்யூன் நன்மையை வழங்கும்

கோம்போ திட்டங்களில் அதிரடி

கோம்போ திட்டங்களில் அதிரடி

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புதிய மாற்றங்கள் அனைத்துமே வருகிரியா ஜனவரி 17, 2018 முதல் அமல்படுத்தப்படும். பிஎஸ்என்எல் சமீப காலமாகவே, இதர தனியார் டெலிகாம் ஆபரேட்டர்களின் புதிய கட்டணத் திட்டங்களுடன் போட்டியிடும் வண்ணம் அதன் கோம்போ திட்டங்களில் அதிரடியான மாற்றங்களை மற்றும் திருத்தங்களை கொண்டு வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி

நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி

முன்னர் வெளியான புதிய ஹேப்பி ஆபர் திட்டத்தின் கீழ், ரூ.485/- என்கிற ப்ரீபெயிட் பிஎஸ்என்எல் திட்டமானது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம், வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு உட்பட நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மற்றொரு ப்ரீபெயிட் பிஎஸ்என்எல் திட்டமான ரூ.666/- ஆனது, வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு உட்பட நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 129 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

54 நாட்கள் மற்றும் 81 நாட்கள் செல்லுபடி

54 நாட்கள் மற்றும் 81 நாட்கள் செல்லுபடி

ரூ.186/- வவுச்சர் திட்டத்தையும், ரூ.187/- என்கிற ஸ்பெஷல் ரீசார்ஜ் திட்டத்தையும் தேர்ந்தெடுக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா நன்மை கிடைக்கும். இதேபோல பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.349/- மற்றும் ரூ.429/- என்கிற திட்டங்கள் முறையே 54 நாட்கள் மற்றும் 81 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டங்கள் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவுடன் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் நன்மையையும் வழங்கும். போட்டிநிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது மாதாந்திர திட்டங்கள் அனைத்திலும் ரூ.50/- என்கிற விலைக்குறைப்பை நிகழ்த்தியதும், இதன்கீழ் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி மற்றும் 1.5ஜிபி அளவிலான டேட்டா மற்றும் இதர ஜியோ நன்மைகளை அனுபவிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL Updated its Prepaid Data STVs to Offer More Than 500% Data. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X