Home
News

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகை.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் குறிப்பிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனம் வழங்கும் சலுகை அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது. ஆனால் இந்நிறுவனம் விரைவில் அனைத்து இடங்களுக்கும் 4ஜி சேவையை கொண்டுவந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

 ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகை

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகையை வழங்கியுள்ளது. அதாவது ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியை திருத்தியுள்ளது. மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

கேரளா டெலிகாம் வலைத்தளம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 160 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியது. தற்போது இந்ததிட்டம் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் இனிமேல் 180 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கும். குறிப்பாகஇந்த தகவலை முதலில் வெளியிட்டது கேரளா டெலிகாம் வலைத்தளம்.

பிஎஸ்என்எல்  ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்கியுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 0.5ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு தினசரி டேட்டா நுகர்வுக்குப் பிறகு, இணைய வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையும் உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி அளவிலான மொத்த டேட்டாவையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த திட்டத்தில் கிடைக்கும் 50ஜிபி டேட்டாவை பயனரால் ஒரே நேரத்தில் அல்லது 50 நாட்களில் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளின் பயன்களையும்பெறமுடியும். அதேபோல் இந்த திட்டம் வழங்கும் 50ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை காலி செய்த பிறகு பயனருக்கான இணைய வேகம் 80 Kbps ஆகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது பயனர்கள் விரும்பும் டேட்டா நன்மை, எஸ்எம்எஸ் நன்மை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் இந்த திட்டதில் கிடைக்கிறது. எனவே ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

 பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.199 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.199 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.199 திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள், 25ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ்,உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இந்த திட்டத்தில் அனைத்து சலுகைகளும் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1498 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1498 ப்ரீபெய்ட் திட்டம்

சமீபத்தில் பிஎஸ்என்எல் ரூ.1498 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினசரி டேட்டா வரம்பு முடிந்ததும் இணைய வேகம் 40 கேபிபிஎஸ் வேகமாக குறைக்கப்படும். இந்த திட்டமானது தற்போது அசாம், குஜராத், உபி கிழக்கு மற்றும் உபி மேற்கு, கொல்கத்தா, தெலுங்கான மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான பல வட்டங்களில் கிடைக்கிறது. நீண்ட காலத்திற்கு டேட்டாவை பயன்படுத்த விரும்பும் மக்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது. ஆனால் இந்த திட்டம் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை
வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது டேட்டா நன்மையை மட்டுமே வழங்கும் இந்த அசத்தலான திட்டம்

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு விரைவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
BSNL Update its Rs.699 prepaid Plan: Here the Plan Benefits!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X