இந்தியாவில் 4ஜி துவங்க BSNL ரெடி.. ஆனா ரூ. 37,105 கோடி நீங்க கொடுங்க.. அரசிடம் கோரிக்கை..
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் - பிஎஸ்என்எல் (BSNL) இந்தியாவில் 4 ஜி நெட்வொர்க்குகளை அறிமுகப்படுத்துவதற்காக இந்திய அரசிடமிருந்து கூடுதல் மூலதனத்தை எதிர்பார்க்கிறது. அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு 4ஜி சேவையை நடைமுறைப்படுத்த உள்நாட்டு உபகரணங்கள் தேவைப்படுகிறது. இது விலை உயர்ந்ததாக இருக்கும், மேலும் தொலைத்தொடர்பு நிறுவனம் சந்திக்க வேண்டிய கடன் சேவை கடமைகளும் ஏராளமாக உள்ளது என்பதனால் நிறுவனம் அரசிடம் இருந்து ஒரு பெரும் தொகையை எதிர்பார்க்கிறது.

BSNL இந்தியாவில் 4ஜி நெட்வொர்க்கு சேவை துவங்க ரெடி
பிஎஸ்என்எல் 4 ஜி நெட்வொர்க்கு சேவையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தத் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு சுமார் 12,500 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த தொகைக்கும் மேல், தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு பைபரைசேஷன், ஐ.டி அமைப்புகள், நெட்வொர்க்கு ஒலிபரப்பு சேவை போன்ற முக்கிய விஷயங்களை நிறுவனம் கூடுதலாக ரூ. 5,000 கோடி தேவைப்படுகிறது. இது எல்லாம் சரியாகக் கிடைத்தால் மட்டுமே BSNL நெட்வொர்க் நுகர்வோர் தரமான சேவைகளைத் தொலைத்தொடர்பு நிறுவனம் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் கடன் சேவைக்கு ரூ. 19,605 கோடி தேவைப்படுகிறதா?
பைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) செயலர் அன்ஷு பிரகாஷுக்கு எழுதிய கடிதத்தில், பிஎஸ்என்எல் சிஎம்டி பி.கே. பூர்வார், தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு FY22 மற்றும் FY24 ஆகிய இடைப்பட்ட ஆண்டில் ரூ. 17,500 கோடி மூலதனம் தேவை என்று எழுதியுள்ளார். இது தவிர, டெல்கோவின் கடன் கடமைகளுக்குச் சேவை செய்வதற்கு மேலும் ரூ. 19,605 கோடி தேவை என்று பூர்வார் கடிதலில் கூறியுள்ளார்.

மொத்தமாக அரசிடமிருந்து ரூ. 37,105 கோடி தருமாறு கோரிக்கையா?
மொத்தத்தில், பிஎஸ்என்எல் சிஎம்டி ரூ. 37,105 கோடியை டிஓடி செயலாளரிடம் கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் ஆத்மநிர்பர் பாரத் முயற்சியின் கீழ் மேக்கிங் இந்தியா கொள்கையின் காரணமாக, பிஎஸ்என்எல் தனது 4 ஜி நெட்வொர்க்குகளை உருவாக்க உள்நாட்டு உபகரணங்களை வாங்க முன்வர வேண்டும் என்று பூர்வார் கூறியுள்ளார். பூர்வாரின் கூற்றுப்படி, அரசு நெட்வொர்க் 1 லட்சம் உள்நாட்டு தளங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது
இது மற்ற நெட்வொர்க் உபகரணங்கள் மற்றும் வேலைகளுக்கு ரூ. 5,000 கோடியுடன் கூடுதலாக ரூ. 12,500 கோடிகள் தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அரசாங்கம் ஏற்கனவே தனியார் ஆபரேட்டர்களுக்கு நிவாரணப் பொதியை வெளியிட்டு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் மீது மையம் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்று கூறப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நேரடி 4 ஜி நெட்வொர்க்குகளுடன் விரைவில் வெளிவர முடிந்தால், அது முழு இந்தியத் தொலைத்தொடர்பு சந்தையையும் நல்ல முறையில் மாற்ற முடியும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ரூ .8,500 கோடியைத் திரட்டிய BSNL
பிஎஸ்என்எல் கடந்த ஆண்டு இறையாண்மை உத்தரவாதப் பத்திரங்கள் மூலம் ரூ .8,500 கோடியைத் திரட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் FY21 இல் EBITDA ஐ நேர்மறையாக மாற்றியுள்ளது. ஆனால் 4G நெட்வொர்க்குகள் இல்லாததால் தொலைத்தொடர்பு நிறுவனம் மற்ற ஆபரேட்டர்களுக்குப் பின்னால் பின்தங்கி உள்ளது என்று கூறப்படுகிறது. அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் இந்தியாவில் பல சுவாரசியமான திட்டங்களைத் தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

மக்கள் அதிகம் BSNL பயன்படுத்த தயங்கும் காரணம் என்ன?
இதில் பல திட்டங்கள் விலை மலிவாக உள்ளது, இருப்பினும் கவரேஜ் மற்றும் போதிய வேகம் இல்லாத பற்றாக்குறை காரணமாகப் பொதுமக்கள் பெருமளவில் இதைப் பயன்படுத்தாமல் உள்ளனர் என்பது வேதனை. தொழிநுட்பம், டெலிகாம், மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் தொடர்பான முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications